Monday, 25 January 2016

எந்த பிரச்சனை வந்தாலும் கவலையில்லை- கபாலி பிரமாண்ட வியாபாரத்தை கூறிய தயாரிப்பாளர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கபாலி படம் மே மாதம் திரைக்கு வருவதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் ரஜினி ரசிகர்கள் சார்பில் சமீபத்தில் பிரமாண்ட மாநாடு ஒன்று நடத்தப்பட்டது.

இதில் கலந்துக்கொண்டு பேசிய கபாலி தயாரிப்பாளர் கலைப்புலி தாணு ‘ரஜினிக்கு முதன் முதலாக சூப்பர் ஸ்டார் பட்டத்தை கொடுத்தது எமது நிறுவனம் தான்.

தற்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு அவர் படத்தை தயாரிக்கிறேன், என் வீட்டிற்கு வருமான வரி சோதனை வந்தாலும் கவலையில்லை.

ஒரு ரகசியத்தை உங்களிடம் சொல்கிறேன், கபாலி படம் அமெரிக்காவில் மட்டும் ரூ 8.5 கோடி வரை வியாபாரம் செய்துள்ளது.

என் தயாரிப்பில் இதுவரை வந்த படங்களில் இது தான் அதிக வியாபாரம் ஆகியுள்ள திரைப்படம்’ என கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment