Thursday, 21 January 2016

அன்று பேட்டி...இன்று போட்டி! சிவகார்த்திகேயனை புகழும் நெட்டிசன்கள்

பொங்கலுக்கு வெளியான படங்களில் சிவகார்த்திகேயனின் ரஜினிமுருகன் படம், பாலாவின் தாரை தப்பட்டை, விஷாலின் கதகளி ஆகிய படங்களை விட நல்ல வசூல் ஈட்டி வருகிறது.

சிவகார்த்திகேயன் தொலைக்காட்சியில் வேலை செய்த காலத்தில் பல்வேறு சினிமா பிரபலங்களை பேட்டி எடுத்துள்ளார். 'அவன் இவன்' வெளியான நேரத்தில் பாலா, விஷால், ஆர்யா ஆகியோர் பங்கேற்ற நிகழ்ச்சியை சிவகார்த்திகேயன் தொகுத்து வழங்கியிருப்பார்.

அந்த வீடியோ இப்போது முகநூல் மற்றும் ட்விட்டரில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

"அன்று பாலாவிடம் பேட்டி...இன்று பாலா படத்துக்கே போட்டி!" என ரசிகர்கள் அவரின் வளர்ச்சியை புகழ்ந்து வருகின்றனர்.

0 comments:

Post a Comment