Monday 15 February 2016

அஞ்சல - திரைவிமர்சனம்

தமிழ் சினிமாவில் அவ்வபோது தமிழ்ர்களின் பண்பாட்டை வெளிக்கொண்டு வரும் படங்கள் வரும். அந்த வகையில் தங்கம் சரவணன் இயக்கத்தில் பசுபதி, விமல், நந்திதா நடிப்பில் இன்று திரைக்கு வந்துள்ள படம் அஞ்சல.

ஒரு தெருவில் இருக்கும் டீக்கடை என்பது ஒருவரின் வியாபாரம் சார்ந்தது மட்டுமில்லை, இவை பல தலைமுறைகளின் ஒருங்கினைப்பு, சமுதாய மாற்றத்திற்கான அடையாளம் என்பதை மிக அழுத்தமாக கூற வந்துள்ளது இந்த அஞ்சல.
கதைக்களம்

பசுபதியின் தாத்தா 1913ம் ஆண்டு தொடங்கிய டீக்கடை 2013ம் ஆண்டு 100வது ஆண்டு சிறப்பு விழாவுடன் அமர்க்களமாக தொடங்குகிறது அஞ்சல டீக்கடை.. ஊரில் உள்ள அனைவரும் இந்த டீக்கடையில் தான் ஒன்று கூடுகிறார்கள்.

ஜாதி, மதம் பாரமல் பசுபதி தன் குடும்பம் என்று கூட இல்லாமல் விமல் மற்றும் ஒரு சில இளைஞர்களுடனே அந்த டீக்கடையை நடத்தி வருகிறார். ஆனால், அரசாங்க சாலை விரிவு பணிக்காக இந்த டீக்கடையை நகர்த்த முடிவு செய்ய இடியாக வந்து விழுகின்றது இந்த செய்தி பசுபதி மற்றும் அந்த ஊர் மக்களுக்கு.

இதை தொடர்ந்து ஊரே இதை எதிர்த்து டீக்கடையை அகற்ற கூடாது என வழக்க தொடர்கிறது. இதற்கிடையில் ஊரில் போலி சாரயாம் கடத்துபவரான சுப்பு, ஒரு நாள் அவசரமாக தன் லாரியை ஓட்டி வர சொல்கிறார்.

அந்த இடத்தில் நந்திதாவை இடித்துவிட்டு செல்லும் லாரியை, விமல் மற்றும் அஞ்சல டீக்கடையில் பணிபுரிபவர்கள் தடுத்து நிறுத்த சுப்பு போலிஸிடம் பிடிப்படுகிறார். இதனால், அஞ்சல டீகடையை ஒழித்துக்கட்ட அவர் முயற்சி செய்கிறார். அதே நேரத்தில் விமலின் நண்பர் யாருக்கும் தெரியாமல் கள்ள நோட்டை அஞ்சல டீக்கடையில் வைக்க, கடைக்கு சீல் வைக்கப்படுகின்றது. இதை தொடர்ந்து பல போராட்டங்களில் இருந்து இந்த அஞ்சல டீக்கடை காப்பாற்றப்பட்டதா என்பதே மீதிக்கதை.
படத்தை பற்றிய அலசல்

விமல் தான் ஹீரோ என்று படத்திற்கு போனால் படத்தின் உண்மையான ஹீரோ பசுபதி தான், இவரை ஏன் இன்னும் தமிழ் சினிமா முழுமையாக பயண்படுத்தவில்லை என்ற ஆதங்கம் நம்மிடையே வந்து போகும், அந்த அளவிற்கு தன் கதாபாத்திரத்தில் யதார்த்தமாக மூழ்கி ஈர்க்கிறார். அதிலும் குறிப்பாக தாத்தாவாக வரும் பசுபதி இந்த டீக்கடையை எப்படி உருவாக்குகிறார் என்ற காட்சி மிகவும் ரசிக்க வைக்கின்றது.

விமல் வழக்கம் போல் தலையை தலையை ஆட்டி நந்திதாவை காதல் செய்கிறார், ஒரு டூயட் பாடுகிறார் தவிர பெரிதாக ஈர்க்கவில்லை, நந்திதாவும் அட்க்கத்தி+இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா ஸ்டைல் பேமிலி+ப்ரேவ் கேர்ள் கதாபாத்திரம் தான்.

படத்தின் நாடியே அந்த டீக்கடை தான், ஏதோ 7 ரூபாய் டீ சில நிமிடம் பேச்சு என்று கடந்து செல்லும் பலரும் இந்த படத்தை பார்த்த பிறகு இதற்கு பின்னால் மறைந்திருக்கும் நம் முன்னோர்களின் உழைப்பு புரியும்.

ஒரு சமுதாய மாற்றமே இந்த சின்ன டீக்கடையில் இருந்து ஆரம்பிக்கின்றது என ஒரு ப்ளாஷ் பேக் காட்சியில் காட்டும் காட்சியமைப்புகள் சபாஷ் சரவணன். ஆனால், நல்லா இருந்த ஊரும் நாலு போலிஸும் பட சாயலில் ஊரில் இத்தனை நல்லவர்களா என ஆச்சரியப்பட வைக்கின்றது. வில்லன் கூட கடைசியில் திருந்துவது யதார்த்தத்தை விட்டு கொஞ்சம் செயற்கை தனம்.

கோபி சுந்தரின் இசையில் ‘கண் ஜாடை’ பாட்டு ரசிக்க வைக்க, பின்னணி இசையிலும் கலக்குகின்றார். ரவி கண்ணனின் ஒளிப்பதிவு டீக்கடை, கிராம மக்கள் என நம் கண்முன் காட்டினாலும் கொஞ்சம் குறும்படம் பார்ப்பது போல் உள்ளது.
க்ளாப்ஸ்

பசுபதியின் கதாபாத்திரம், அதிலும் குறிப்பாக டீக்கடை உருவானது போல் காட்டும் ப்ளாஷ் பேக் காட்சிகள்.

படத்தின் கிளைமேக்ஸ் யாரும் எதிர்ப்பார்ப்பது போல் இல்லாமல், ஒரு எமோஷ்னல் ட்ரவலாக செல்வது கவர்கிறது.

ஏதோ பத்தோடு பதினொன்று என கடக்கும் டீக்கடையில் கூட இப்படி ஒரு கதை இருக்கின்றது என அழுத்தமாக காட்டிய விதம்.
பல்ப்ஸ்

காமெடி காட்சிகள், அதிலும் இமான் அண்ணாச்சி பொறுமையை சோதிக்கின்றார்.

படம் ஆரம்பித்து முதல் அரைமணி நேரம் கதைக்குள் செல்ல திரைக்கதை தடுமாறுகிறது.

அழுத்தமே இல்லாத வில்லன் கதாபாத்திரம்.

மொத்தத்தில் பழமையான ஒரு டீக்கடைக்கு பின்னால் பலரின் உணர்ச்சிகள் இருக்கிறது என்பதை திரையில் காட்டியதற்காகவே அஞ்சல டீயை ஒரு முறை சுவைக்கலாம்.

0 comments:

Post a Comment