Friday 26 February 2016

சித்தி ராதிகாவின் அடுத்த பாய்ச்சல்! ஷார்ட் பிலிம் டைரக்டர்களுக்கு யோகம்!!

‘ராதிகா கைய வச்சா அது ராங்கா போனதில்லே’ என்பதற்கு பெரிய உதாரணம் அவரது ராடன் டி.வி நிறுவனம்தான். வீட்டுக்கு வீடு கேபிள் வழியாக நுழைந்து கொள்ளை கொள்ளையாக மனசுகளை சம்பாதித்து வைத்திருக்கும் வெள்ளந்தி சிரிப்பழகி ராதிகாவை, இப்போதும் ‘சித்தி’ என்று கொண்டாடுகின்றன கிராமங்கள்! சின்னத்திரை, வெள்ளித்திரை என்று ரவுண்டு கட்டி சாதித்து வரும் ராதிகாவின் அடுத்த ஸ்டெப்…. குறும்பட ஏரியா!

உலகம் முழுக்க இளைஞர்களுக்காக ஒரு ஷார்ட் பிலிம் போட்டியை வைத்திருந்தது அவரது ராடன் டி.வி நிறுவனம். நூற்றுக்கணக்கான இளைஞர்கள் கலந்து கொண்ட அந்த போட்டியிலிருந்து ஆறு பேர் மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். இவர்களுக்கு தனது நிறுவனத்தின் சார்பில் டெலி பிலிம் இயக்குகிற வாய்ப்பை வழங்கவிருக்கிறார் ராதிகா. அது மட்டுமல்ல, எதிர்காலத்தில் அவர்களுக்கு சினிமா எடுக்கிற வாய்ப்பும் வழங்கப்படுமாம்.

சரி… இந்த ஷார்ட் பிலிம்களை நாம் எங்கே பார்ப்பது? வேறெங்கே… ராதிகாவின் ஆட்டக்களமான சின்னத்திரையில்தான். இந்த குறும்படங்களை தொகுத்து தொலைக்காட்சியில் ஒளிபரப்பும் திட்டம் வைத்திருக்கிறாராம்.

‘கடை விரித்தேன், கொள்வாரில்லை’ என்கிற விரக்தி பேச்சுக்கெல்லாம் இனி வேலையில்லை. திறமையை கொண்டாட ராதிகாவின் ராடன் டி.வி இருக்கிறது. போங்க போங்க… அதே திசைக்கே போங்க!

முக்கிய குறிப்பு- இந்த சிறப்பான பணியில் அம்மாவோடு இணைந்து செயலாற்றப் போவது ராதிகாவின் செல்ல மகள் ரயானாவும்தான்!

நையப்புடை - திரைவிமர்சனம்

ல வெற்றி படங்கள் மட்டுமில்லாமல் தமிழ் சினிமாவிற்கு இளைய தளபதி எனும் வெற்றி நாயகனையும் கொடுத்த பிரபல இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரரும், பிரபல பாடலாசிரியராக இருந்து கதாநாயகனாக அவதாரம் எடுத்த பா.விஜய் அவர்களும் இணைந்து நைய்யப்புடைக்க களமிறங்கியிருக்கிறார்கள்.
கதை

தனது 70 வயதினிலும் அநியாயத்தை தட்டிக்கேட்கும் துணிச்சல் மிகுந்த, ஒய்வு பெற்ற ராணுவ அதிகாரியான எஸ்.ஏ.சி அவர்கள் ஒரு நாள் பேருந்தில் பயணிக்கும் பொழுது கலாட்டா செய்யும் லோக்கல் ரவுடிகளை துவம்சம் செய்ய அதை ஒரு மாணவி வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்ய மிக பிரபலமாகிறார் எஸ்.ஏ.சி. அதனால் பத்திரிக்கையாளரான பா. விஜய்யுடன் அறிமுக ஏற்பட பின் இருவரும் சேர்ந்து பல சமூக பிரச்சனை எதிர்க்கொண்டு எதிரிகளை எவ்வாறு நைய்யப்புடைக்கிறார்கள் என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தை பற்றிய அலசல்

70 வயதை தாண்டினாலும் இப்போது நடிக்க வந்த நடிகனைப்போல் ஆர்வம் காட்டி, சண்டை காட்சிகளில் கூட நடித்துள்ளார் எஸ்.ஏ.சந்திரசேகர் அதற்காகவே அவரை பாராட்டிதான் ஆகவேண்டும், Captain, இளைய தளபதியை எல்லாம் நடிக்க வைத்தவருக்கு நடிப்பு வராமலாயிருக்கும். ஆனால் அடுத்தவர்களுக்கு பிரச்சனை எனும் போது ஆவேசம் காட்டும் இவர் தனக்கு வரும் சில பிரச்சனைகளில் பேக் அடிப்பது என்ன லாஜிக் என இயக்குனர் தான் சொல்ல வேண்டும். பா.விஜய் அவருக்கு என இருக்கும் களத்தை அவர் இன்னும் சரியாக பயன்படுத்தியிருக்களாம். சாந்தினி காதல் காட்சிகளில் மட்டும் தலையை காட்டி செல்கிறார். படத்தின் வில்லன்களாக வரும் எம். எஸ். பாஸ்கரும் நான் கடவுள் ராஜேந்திரனும் வில்லத்தனம் காமெடியென பட்டைய கிளப்புகிறார்கள் குறிப்பாக எம் எஸ் பாஸ்கர் தனது கைத்தேர்ந்த நடிப்பை வெளிக்காட்டியுள்ளார். விஜி சந்திரசேகர் தன் மகன் உயிர் இழக்கும் வேளையில் மிக எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார், அவரின் மகன் முத்துபாண்டியாக வரும் மாஸ்டர் ஜாக்சன் கவனம் ஈர்க்கிறார்.

படத்தின் இசை தாஜ் நூர், க்ளைமேக்ஸில் வரும் குத்துப்பாடல் ரசிக்கவைக்கிறது, பின்னணியில் புதிதாக எதுவும் இல்லையென்றாலும் பெரிதாக குறை சொல்லி விட முடியாது. படத்தின் கதைக்கான நோக்கம் சரியாக இருக்கலாம். ஆனால் அதை ரசிகர்களிடம் சரியாக கொண்டு சேர்ப்பதில்தான் தான் அப்படத்தின் வெற்றி இருக்கிறது. திரைக்கதையின் சுவாரஸ்யம் இன்னும் கொஞ்சம் இருந்திருக்கலாமே என்று முணுமுணுக்க வைக்கிறது. படத்தில் சில இடங்களில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தினாலும் அதற்கு பிறகு வரும் காட்சிகள் சற்று தொய்வை ஏற்படுத்துகிறது. படம் சோஸியல் த்ரில்லராக இருந்தாலும் நகைச்சுவை நன்றாக வந்துள்ளது.

கதையை கையாண்ட விதத்தில் புதியதாக எதும் இல்லாமல் போனது ஒரு குறையே. லாஜிக் மீறல்களும், ஏதார்த்தமின்மையும், நாடகத்தனமும் சற்று அதிகமாக உள்ளது. தற்போது வரும் படங்களில் ‘தல’ பற்றிய புகழாரங்கள் அதிகமாக வருவதால் அதை ‘ஹெவி தளபதி’ ரெஃபெரன்ஸ் வைத்து ஒரேடியாக ஈடுகட்ட முயற்சித்துள்ளார் எஸ்.ஏ.சி. இதையெல்லாம் தாண்டி எஸ்.ஏ.சி.யின் முயற்சிக்காக, எம்.எஸ்.பாஸ்கரின் நடிப்பிற்காக, படத்தில் ரசிக்க வைக்கும் இடங்களுக்காக, 19 வயதில் படத்தை இயக்கிய விஜய் கிரணுக்காக இக்குழுவை பாராட்டலாம்.
க்ளாப்ஸ்

போராட்ட குணத்தை முதுமை அழித்துவிட முடியாது, நல்லது செய்ய வயது ஒரு தடை இல்லை எனும் எஸ்.ஏ.சி முயற்சி, எம் எஸ் பாஸ்கர் ராஜேந்திரனின் நகைச்சுவை கலந்த வில்லத்தனமான நடிப்பு.
பல்ப்ஸ்

படத்தை கையாண்ட விதம், திரைக்கதையில் சுவாரஸ்யம் இல்லாமல் போனது. லாஜிக் மீறல்களும், எதார்த்தமின்மையும், நாடகத்தனமும் சற்று அதிகமாக உள்ளது. இதனாலேயே படத்துடன் ரசிகர்களால் ஒன்றமுடியாமல் போகிறது. 

ஆறாது சினம் - திரைவிமர்சனம்

ஒரு சில நடிகர்கள், இயக்குனர்கள் படங்கள் என்றால் எந்த ஒரு கேள்வியும் கேட்காமல் திரையரங்கிற்கு சென்றுவிடுவோம். அப்படி ஒரு நடிகர் தான் அருள்நிதி, இயக்குனர் அறிவழகன்.

தொடர்ந்து மௌனகுரு, டிமாண்டி காலனி என தரமான படங்களில் நடித்து வரும் அருள்நிதி, ஈரம், வல்லினம் என தரமான படங்களை இயக்கிய அறிவழகன் இருவரின் கூட்டணியில் உருவாகியுள்ள படம் தான் ஆறாது சினம்.
கதைக்களம்

மலையாளத்தில் க்ரைம் கதைகளுக்கு பேர் போனவர் ஜீத்து ஜோசப், இன்னும் நம் மக்களுக்கு தெரியும் படி சொல்லவேண்டும் என்றால் கமல்ஹாசன் நடித்த பாபநாசம் படத்தை இயக்கியவர். இவர் இயக்கத்தில் பிரித்விராஜ் நடிப்பில் வெளிவந்த மெமரீஸ் படத்தின் ரீமேக் தான் இந்த ஆறாது சினம்.

படத்தின் ஆரம்பத்திலேயே அருள்நிதி மிரட்டல் என்கவுண்டருடன் அறிமுகமாகிறார். ஆனால், ஒரு சில காரணங்களால் அந்த என்கவுண்டர் ட்ராப் ஆக, வில்லனால் அவர் குடும்பத்தை இழக்கின்றார். இதன் பிறகு வாழ்க்கையே ஏதோ கடமைக்கு வாழ்வது போல், வெறும் குடியுடன் மட்டும் தான் அருள்நிதி வாழ்கின்றார்.

இத்தருணத்தில் இவர் வாழ்க்கையில் மீண்டும் ஒரு கடமை வர, அரை மனதுடன் அந்த வழக்கை விசாரிக்க சம்மதிக்கின்றார். தொடர்ந்து தேனி, சிவகங்கை பகுதிகளில் ஒரு சிலர் இறக்க, யார் இந்த கொலை செய்கிறார்கள் என அருள்நிதி தேடுகிறார்.

ஒரு கட்டத்தில் இந்த கொலைகள் தொடர்ந்து நடக்க, அவர் ஒரு சீரியல் கில்லர் என தெரிய வருகின்றது. அரை மனதுடன் உள்ளே வரும் அருள்நிதிக்கு விஷயம் அறிந்து சீரியஸ் ஆகின்றார். சின்ன சின்ன தடயங்களாக தேடி கிளைமேக்ஸில் வில்லனை நெருங்கும் தருணத்தில் அருள்நிதிக்கு ஒரு செக் வர, யார் அந்த கொலைகளை செய்பவர்? எதற்காக இப்படியெல்லாம் செய்கிறார்? என்பதை கடைசி வரை ரசிகர்களை நகம் கடிக்க வைத்துள்ளார் இயக்குனர் அறிவழகன்.
படத்தை பற்றிய அலசல்

6 அடி உயரம் போலிஸிற்கு உண்டான அத்தனை கம்பீரமும் இருக்க, படம் முழுவதும் போதை, அழுக்கு சட்டை என்றே அருள்நிதி உலா வருகின்றார். இவர் படம் என்றாலே இனி நம்பி போகலாம் என சொல்லும் அளவிற்கு மீண்டும் நிரூபித்து விட்டார். எப்போதும் போதையில் இருந்தாலும், தன் விசாரணையில் எந்த ஒரு இடத்திலும் கோட்டை விடாமல் கவனமாகவிருக்கின்றார். அதிலும், வில்லன் தொடர் கொலைகளை வைத்தே, இவர் இதன் தாக்கத்தால் தான் இந்த மாதிரி கொலை செய்கிறான் என்று கண்டுப்பிடிக்கும் இடமெல்லாம் சபாஷ்.

அருள்நிதியை தவிர வேறு யாருக்கும் பெரிதாக நடிக்கும் ஸ்கோப் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில் படத்தின் மொத்த பலமும் திரைக்கதை தான், அதில் பலரும் வந்து போகிறார்கள், ஆனால், அருள்நிதியே தாங்கி செல்கின்றார். உயர் அதிகாரியாக வரும் ராதாரவி, உதவியாளராக வரும் சார்லி என இருவரும் அனுபவ நடிப்பை அள்ளி வீசுகின்றனர்.

ரோபோ ஷங்கர் காமெடி வேண்டும் என்பதற்காக திணித்தது போல் உள்ளது. 10 வசனம் பேசினால் 2 வசனம் மட்டுமே சிரிப்பு வருகின்றது. சேஸிங் சீனில் சிலர் குத்துப்பாட்டு வைப்பது போல், அறிவழகன் இதில் காமெடி காட்சிகளை வைத்துவிட்டார்.

படத்தின் மற்றொரு ஹீரோ கண்டிப்பாக தமனின் பின்னணி இசை தான், ஈரம் சாயல் தெரிந்தாலும், பல காட்சிகளில் தன் இசையால் ரசிகர்களை நிமிர்ந்து உட்கார வைக்கின்றார். அதிலும், கிளைமேக்ஸில் வில்லன் பற்றிய தொகுப்புகளை அருள்நிதி விவரிக்கும் இடத்தில் பின்னணி இசை நம்மையும் படத்திற்குள் அழைத்து செல்கின்றது.

இந்த மாதிரியான க்ரைம் திரில்லர் கதைகளுக்கே மிக முக்கியத்துவம், வில்லனின் முகத்தை காட்டாமல், ஹீரோ வீட்டில் வேலைப்பார்க்கும் வேலைக்காரன் வரை சந்தேக கண்ணோடு நம்மை பார்க்க வைப்பது தான். ஆனால், கடைசியில் அட இவர் தான் இந்த கொலையை செய்தாரா? என நமக்கே தோன்றி விடும். இதில் யார் மீதும் சந்தேகம் எழவில்லை, இருந்தாலும் படத்தின் சுவாரசியம் எங்கும் குறையவில்லை.
க்ளாப்ஸ்

அருள்நிதியின் யதார்த்தமான நடிப்பு, தனக்கு என்ன வரும் என்பதை மிக தெளிவாக தெரிந்து வைத்துள்ளார்.

அருள்நிதிக்கும் வில்லனுக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லையென்றாலும், அதை கிளைமேக்ஸில் தொடர்புபடுத்தி அவரின் வேகத்தை அதிகப்படுத்திய காட்சிகள்.

தமனின் பின்னணி இசை, அரவிந்த் சிங்கின் ஒளிப்பதிவு, ஒரு க்ரைம் த்ரில்லருக்கு என்ன தேவையோ அதை அழுத்தமாக செய்திருக்கிறார்.

அருள்நிதி வில்லன் குறித்து சேகரிக்கும் ஆதாரம் அதை வைத்து கண்டுப்பிடிப்பது ரசிகர்களை சீட்டின் நுனிக்கு வரவைக்கும். மேலும், படம் முழுவதும் அருள்நிதி குடித்துக்கொண்டே இருந்தாலும், அந்த குடியால் அவர் வில்லனை தவறவிட்டு, அந்த குடியை விடும் காட்சிகள் கிளாஸ்.
பல்ப்ஸ்

என்ன தான் கதாபாத்திரம் குடும்பத்தை இழந்து நின்றாலும், அருள்நிதி சட்டைகூட மாற்றாமல் சுற்றுவது கொஞ்சம் ஓவர்.

ரோபோ ஷங்கர் காமெடி காட்சிகள் எங்கும் எடுபடவில்லை, தேவையில்லாத திணிப்பாகவே தெரிந்தது. முதல் பாதி கொஞ்சம் மெதுவாக நகரும் காட்சியமைப்புகள்.

மொத்தத்தில் ஆறாது சினம் அறிவழகன், அருள்நிதியை மட்டுமின்றி ரசிகர்களையும் பதட்டத்துடன் பயணிக்க வைத்து அதில் வெற்றியும் பெற்று விட்டார்.

கணிதன் -விமர்சனம்- லாஜிக்கை மறந்து மேஜிக்கை ரசிக்கும் ரசிகர்களுக்கான ஆக்‌ஷன் த்ரில்லர் விருந்து.

 முரளியின் மகன் என்பதை தாண்டி தனக்கென ஒரு இடம் பிடித்துவிட்டார் ஆதர்வா. பாலாவின் பட்டறையில் பதம்பார்க்கப்பட்டு ஈட்டியென தனக்கான இலக்கை நோக்கி பாயும் இவரின் 'கணித' அவதாரம் படம் வெளிவருவதற்உ முன்பே ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டியது. ஒரு முழுநீள social thriller ஆக வந்திருக்கும் கணிதன் பற்றிய விமர்சனம் இதோ.
கதை:

நாம் இப்பொது என்னவாக இருக்கிறோம் என்பதை நாம் படித்த படிப்பே நிர்ணயிக்கிறது. ஆனால் அந்த படிப்பே இல்லையென்றால் நம் வாழ்க்கையே இல்லை என யோசிக்கும் போது எப்படியிருக்கும். அப்படி ஒரு அதிர்ச்சியுட்டும் கதைக்களம் தான் இந்த கணிதன்.

ஒரு சின்ன பிரபலமடையாத தொலைக்காட்சியில் ரிப்போர்ட்டராக பணிபுரியும் அதர்வாவிற்கு ஒரு மிக பெரிய பிரபலமான தொலைக்காட்சி ஒன்றில் எப்படியாவது ரிப்போர்ட்டர் ஆக வேண்டும் என்பதே லட்சசியம் இதனிடையில் இவர் பணிபுரியும் அந்த தொலைக்காட்சியின் CEOவின் மகள் கேத்ரின் மீது காதல்.

பின் தனது லட்சிய தொலைக்காட்சி பணியாற்ற வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் அவரின் கனவை சுக்கு நூறாக உடைக்கிறது இவரின் மேல் போடப்படும் வங்கி மோசடி வழக்கு. கல்வி கடன் வாங்கி வங்கிகளை ஏமாற்றிய குற்றத்திற்காக ஆதர்வா மாட்டுமல்லாம் இவருடன்சேர்த்து 5 பேரை கைது செய்கிறது காவல்துறை.

ஆனால் இந்த குற்றத்திற்குகாரணம் போலி சான்றிதழ்கள் வழங்கிய ஒரு கும்பல்தான். தன் வாழ்க்கையே இல்லை என்றாக்கிய இந்த கும்பலை எப்படி கணித்து பலி வாங்குகிறான் கணிதன், என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தை பற்றிய அலசல்:

அதர்வா, துடிப்பான ரிப்போர்ட்டர் கத்தாப்பத்திரத்தில் நச் என பொருந்தி , காதலில் குலைவதில் இருந்து எதிரிகளை கால்பந்தாடுவது வரை அனைத்திலும் வெரி குட் வாங்குகிறார். குறிப்பாக சண்டை காட்சிகளில்ரசிகர்களின் ஒட்டுமொத்த கைத்தட்டல்களியும் அள்ளிக்கொண்டு போகிறார்.

கேத்திரின்க்கு வழக்கமான அதே தமிழ் நாயகி பாத்திரம் தான் இருந்தாலும் இவரின் க்யூட் நடிப்பை ரசிக்காமல் இருக்க முடியாது. கருனாகரன் & சுந்தர் ராமுவின் காமெடிக்கு அவ்வளவு வேலை இல்லை என்றாலும் மனதில் நிற்கும் ஒரு கதாப்பத்திரம் இவர்களுக்கு. தருன் அரோரா வில்லன் கதாப்பாத்திரத்தில் பக்காவாக பொருந்தி பவுண்டரிகள் விலாசுகிறார். பாக்கியராஜ் கௌரவ வேடத்தில் தோன்றி கவனம் ஈர்கிறார்.

படத்தின் ஒட்டுமொத்த பலமே படத்தின் வேகம்தான் குறிப்பாக மசாலா படங்களுக்கு தேவையான இடைவேளை, ப்ரீ கிளைமேக்ஸ் மற்றும் கிளைமேக்ஸ் காட்சிகள் பாராட்டதக்கவை.. படத்தின் வில்லனுக்கும் ஹீரோவுக்குமான ஆடுபுலி ஆட்டம் போன்ற அப்லாஸ் அள்ளும் காட்சிகளுக்காக இயக்குனர் T N சந்தோஷ் அவர்களை பாராட்டலாம்.

ஆனால் படத்தின் மைய பிரச்சனையில் இருந்து விலகிய படத்தின் முடிவு அதிர்ச்சிதான் அளிக்கிறது. அதேபோல் யோசிக்காமலேயே கவனத்தில் படும் லாஜிக் மீறல்கள் கண்னை உருத்திறது.

அதேப்போல் பல பார்த்து பழகிய க்ளீஷே காட்சிகள் தேவைதான என படக்குழு யோசிக்க வேண்டும். ட்ரம்ஸ் சிவமணியின் பிண்ணனி பலம் என்றால் சில பாடல்கள் படத்தின் வேகத்தடையே. அர்விந்த் கிருஷ்னாவின் ஒளிப்பதிவை கண்னை மூடிக்கொண்டு கூட ரசிக்களாம்.
க்ளேப்ஸ்:

விறுவிறுப்பான திரைக்கதை, அனைத்து நடிகர்களின் பங்களிப்பு, சீட்டின் நுனிக்கு ரசிகர்களை அழைத்து செல்லும் பல காட்சிகள்.
பல்ப்ஸ்:

எளிதாக கண்டறியும் லாஜிக் மீறல்கள், பார்த்து பழகிய க்ளீஷே காட்சிகள், பாடல்கள் இடம் பெற்ற விதம்.

மொத்ததில் இந்தகணிதன் லாஜிக்கை மறந்து மேஜிக்கை ரசிக்கும் ரசிகர்களுக்கான ஆக்‌ஷன் த்ரில்லர் விருந்து. 

அரசியலுக்கு வருகிறாரா பிரபு?

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வாரிசான பிரபு, தன்னுடைய அரசியல் பிரவேசம் பற்றி தெரிவித்துள்ளார்.

தமிழக செய்தித்துறை விளம்பரங்களில் நடித்ததால், அதிமுகவில் சேருவார் என சிலர் கூறிவந்த நிலையில் "இப்போதைக்கு எந்த கட்சியிலும் சேரும் எண்ணம் இல்லை. எனது தந்தையின் அரசியல் வாழ்க்கையை பார்த்த பின் அரசியலில் ஆர்வம் இல்லாமல் போய்விட்டது" என கூறினார்.

அரசியலுக்கு வரும் பட்சத்தில் அதை வெளிப்படையாக அறிவிப்பேன் எனவும் தெரிவித்துள்ளார்.

Thursday 25 February 2016

‘ஒப்புக்கொன்னாரா?” - விசாரணை பாணியில் பாரதிராஜாவும் மாட்டிக்கொண்ட கதை

நேற்று  பிரசாத் ஸ்டுடியோவில் நடைபெற்ற விசாரணை படம் குறித்த கருத்துரைக்கு, இயக்குநர் இமயம் பாரதிராஜா கலந்து கொண்டு தலைமை தாங்கினார். படத்தை வெகுவாகப் பாராட்டிய அவர், ‘வெளில வந்ததும்.. ச்சே நாம்ள்லாம் என்ன படம் எடுத்திருக்கோம்’ என்று நினைக்க வைத்துவிட்டார் வெற்றிமாறன் என்றார்.

அவர் பேசுகையில் தான் போலீஸ் ஸ்டேஷன் சென்ற அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டது பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.

"அப்ப ஜெமினில அசிஸ்டெண்ட்டா வேல செஞ்சிட்டிருந்தேன். அப்பவே இங்க்லீஷ் படிக்கணும்னு ஆசைல அமெரிக்கன் லைப்ரரி போவேன். மொத்தமா இருபத்தஞ்சு பைசாதான் இருக்கும். அங்கிருந்து ரெண்டு புக் எடுத்துட்டு தேனாம்பேட்டை டிக்கெட் கேட்கறேன். பத்து பைசா. ’டென் என்பி ஒண்ணு குடுங்க’ன்னேன். கண்டக்டர் ’ட்வெண்டி என்.பி டிக்கெட் குடுத்துட்டார். இருந்ததே 25 காசுதான்னு எனக்கு கோவம். ’என்ன டென் NP கேட்டா, ட்வெண்டி NP டிக்கெட் குடுத்துட்டீங்க?’ன்னு கேட்டேன். கண்டக்டர் கோவமா ‘என்ன டென் NP? பெரிய இங்க்லீஷ் படிச்சவரு! பத்து காசுன்னு கேட்க மாட்டியா’ ன்னு கேட்டார். ‘நான் மடத்தனமாப் பேசாதய்யா’ன்னுட்டேன். அப்டியே சண்டை பெரிசாகி, கண்டக்டரை அடிச்சுட்டேன்.

டக்னு பஸ்ஸை பாண்டிபஜார் போலீஸ் ஸ்டேஷனுக்கு விட்டுட்டாங்க. ஒரு பெரியவர் மட்டும் ‘நான் இருக்கேன்யா.. உன் பக்கம் கொஞ்சம் நியாயம் இருக்கு’ன்னு வந்தார். ஆனாலும் கேஸ் போட்டுட்டாங்க. நம்ம சினிமாலதான் கோர்ட், ஸ்டேஷன்லாம் பார்த்திருக்கோம். என்ன பண்ணுவாங்கன்னு தெரியலையேன்னு உட்கார்ந்திருந்தேன். அந்த இன்ஸ்பெக்டர் நல்லவரு, ‘அடிச்சேன்னு சொல்லாத. பாதுகாப்புக்கு கையால தடுத்தேன்’னு எழுது’ன்னார். எழுதினேன். வெளில உன்னை அடிக்க ஆளுக நிக்கறாங்கன்னு சொல்லி, ஜீப்ல என்னை இறக்கிவிட ஏற்பாடு பண்ணினார். ’ரெண்டு நாள் கழிச்சு வாங்க.. கிழிச்சுப் போட்டுடலாம்னார். ரெண்டு நாள் கழிச்சுப் போனா.. அந்த இன்ஸ்பெக்டரை மாத்திட்டாங்க.

அது வேறொரு பிரச்னை. ஒரு கோவில்ல புதுசா புள்ளையார் மொளைச்சு, அவரு பால் குடிக்கறார்னு வதந்தி பரவி, அந்தப் பிரச்னைல அவரை மாத்திட்டாங்க. நானும் விட்டுட்டேன்.

மூணு மாசம் கழிச்சு, கங்கை அமரன் ஏதோ கவர் வந்திருக்குன்னு கூப்டான். பார்த்தா, கோர்ட்ல இருந்து சம்மன். சைதாப்பேட்டை கோர்ட்டுக்கு வரச்சொல்லி. லாயர்லாம் பார்க்கல நாங்க. நாமதான் பராசக்தி பார்த்திருக்கோமே! ‘நீதிமன்றம் விசித்திரமான பல வழக்குகளை’ன்னு ஆரம்பிச்சு இந்த கண்டக்டர் என்னென்ன பண்ணினார்னான்னு அந்த ஜட்ஜுக்கு வெளக்கிரலாம்டான்னு நானும், இளையராஜா அண்ணன் பாஸ்கரும் போனோம். கோர்ட்ல என்னடான்னா எங்களை கூப்டவேல்ல. வெய்ட் பண்ணிப் பண்ணி, நேரமாகுதுன்னு ஒரு போலீஸ்கிட்ட கேட்டா, ‘வாய்யா.. ஒன்னத்தான் தேடிட்டிருந்தேன்’ன்னு கூட்டீட்டு போய் ஒக்கார வெச்சுட்டார். ‘கூப்பிடுவாங்க, போன உடனே பேசிர்றது’ன்னு நான் ரெடியா இருக்கேன்.

கூப்டாங்க.

போய் நின்னு, ‘ஐயா.. நடந்தது என்னன்னா’ன்னு நான் ஆரம்பிக்கறேன். ஜட்ஜ் என்னைப் பார்க்காம, குமிஞ்சுட்டே ‘ஆர் யு கில்ட்டி ஆர் நாட் கில்ட்டி?’ன்னு கேட்கறார்.

'இல்லய்யா.. வந்து நடந்தது என்னன்னா..’

“ஆர் யு கில்ட்டி ஆர் நாட் கில்ட்டி??”

“ஐயா... அது வந்து ஐ’ம் நாட் கில்ட்டி..’ன்னு ஆரம்பிக்கறதுக்குள்ள போலீஸ் என்னைப் பிடிச்சு இழுத்துடுச்சு. எனக்கு பக்னு ஆய்டுச்சு. ‘ஐயா அது என்னன்னான்னு பேசறேன். ஜட்ஜ் குமிஞ்சுகிட்டே தஸ் புஸ்னு ஏதோ எழுதி தூக்கிப் போடறார். என்னைக் கூப்டு உள்ள ஒக்கார வெச்சுட்டாங்க.

என்னன்னு கேட்டா, ‘ஒரு லாயர் இல்லாம நீ வெளில போகமுடியாது’ன்னுட்டாங்க. ‘என்னடா சொல்றானுக. நாம நியாயம் பேச வந்திருக்கோம்.. இவரென்ன வக்கீல் வந்துதான் எடுக்கணும்கறார்’ன்னு நெனைச்சேன். போலீஸ் வேற மெரட்டறாங்க. ‘இன்னும் அரை மணிநேரம் இருக்கு. வக்கீல் வர்லைன்னா உள்ள தள்ளீடுவோம்கறான். புக் படிக்க விடலை.  பெஞ்ச் விட்டு எந்திரிக்க விடலை. பசி வேற.

வக்கீல் வரணும்னா அவருக்கு இருவது ரூவா குடுக்கணும். இளையராஜா அப்ப ஏவிஎம்ல ரெகார்டிங்கல இருக்கார். சாயந்திரமானா ரெகார்டிங் முடிச்சு, அறுபது ரூவா கெடைக்கும். சரின்னு பாஸ்கரை அனுப்ச்சி எப்படியாவது காசு வாங்கிட்டு வரச்சொன்னேன். அப்பறம் இருவது ரூவா குடுத்து ஒரு வக்கீலை வெச்சு என்னை எடுத்தாங்க. என்னை யார்னே தெரியாது, ஆனா இருவது ரூவா வாங்கிட்டு இவனைத் தெரியும்னு கையெழுத்து போட்டு வெளில எடுத்தாங்க.

அப்பறம் ஆறுமாசம் வாய்தா வாய்தான்னு அலையவிட்டு, எவ்ளோ காசு செலவாச்சுன்னுகூட கணக்கில்ல. எங்க லாயர், ‘யோவ் கில்ட்டின்னு ஒத்துக்கய்யான்னு சொன்னார். என்னய்யா ஆறுமாசம் கழிச்சு இப்ப ஒத்துக்கய்யான்னா என்ன அர்த்தம்னு தோணிச்சு. சரின்னு கையக்கட்டி ‘ஆமங்கய்யா.. கில்ட்டிங்கய்ய்யா’ன்னேன். அம்பது ரூபா கட்டச் சொல்லி விட்டுட்டாங்க.

இப்ப ஏதோ வளர்ந்துட்டோம், இதைக் காமெடியாப் பேசறோம். ஒரு பாமரனா எனக்கு என்ன தெரியும்? விசாரணை படம் மாதிரி உள்ள கூட்டீட்டுப் போய் நொக்கு நொக்குன்னு நொக்கீருப்பாங்க”

இந்தக் கதையைச் சொல்லி படத்தைப் பாராட்டியவர் ‘எங்களுக்கு வயசாய்டுச்சுன்னு நெனைக்காதீங்க. நாங்களும் உங்களை ஜெயிக்க புதுசு புதுசா யோசிச்சுட்டு களத்துல இறங்கறோம் பாருங்க’ என்று வெற்றிமாறனுக்கு செல்லமாக சவாலும் விட்டார்.

இளையராஜாவுக்காக மாறிய தயாரிப்பாளர்கள் சங்கம்

திரைப்படங்களை சேனல்களுக்கு விற்பனை செய்வது தொடர்பாக கடந்த பில மாதங்களாக பிரச்சனைகள் நீடித்து வருகிறது. இப்பிரச்சனை காரணமாக தனிப்பட்ட முறையில் எந்த நடிகர், நடிகைகளும் சேனல்களுக்கு பேட்டியளிக்க கூடாது என்றும் பட புரொமோஷன் செய்து கொள்ள மட்டும் படக்குழுவினர் பேட்டியளிக்கலாம் என்று தயாரிப்பாளர் சங்கம் கண்டீஷன் போட்டிருந்தது.

இந்நிலையில், இளையராஜாவுக்கு பாராட்டு விழாவை ஒரு பிரபல தொலைக்காட்சி மிகவும் பிரம்மாண்டமாக வரும் 27ம் தேதி நடத்த இருக்கிறது.

இளையராஜாவின் பாராட்டு விழா என்பதால் விழாவில் அனைத்து நடிகர், நடிகைகளும் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக தயாரிப்பாளர் சங்கம் அந்த கண்டிஷனை தளர்த்தியுள்ளது.

'இவரு ரஜினி படத்தில் நடிச்சவர் தானே..!'- விபத்தில் சிக்கியவருக்கு கைகொடுக்காத 108

ஒளிப்பதிவாளர் ஒருவருடன் பேட்டியை முடித்துக் கொண்டு வடபழனியில் இருந்து நானும் புகைப்படக்காரரும் திரும்பிக் கொண்டிந்தோம்.

வடபழனி பேருந்து நிலையத்துக்கும் விஜயா மருத்துவமனைக்கும் இடையில் காலை 11 மணி அளவில் ஒரு விபத்து நடக்கிறது. முன்னால் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பெரியவர் ஒருவரை பின்னால் வந்து கொண்டிருந்த வேன் ஒன்று மோதிவிட,  நிலைகுலைந்து  கீழே விழுகிறார் அந்த பெரியவர். அவருக்குப் பின்னால் வந்து கொண்டிருந்த நாங்கள்,  எங்கள் இரு சக்கர வாகனங்களை நிறுத்திவிட்டு அவரை தூக்கி நிறுத்த முயன்றோம். மனிதாபிமானம் நிறைந்த பொதுமக்கள் சிலரும் நம்மோடு இணைந்தார்கள்.

பின்னந்தலையில் அடிபட்டவர் தொடர்ந்து வாந்தி எடுத்ததும்,  அவரின் முகத்தை கழுவிவிட்டு அவரை நிழலான பகுதிக்கு கொண்டு சென்றோம். கூட்டம் சேர்ந்தது. அவரைப் பார்த்த பலரும் ‘’இவரு ரஜினி படத்துல நடிச்சவர்தானே...? ‘’ என்று கேள்வி கேட்டுக்கொண்டே கடந்து போனார்கள். தொடர்ந்து வாந்தி எடுத்துக் கொண்டிருந்தார்.

 உழைப்பாளி படத்தில் ரஜினி, சிவன் வேடத்திலும்,  ஐயராக ஒருவர் அவர் பின்னாலும் அமர்ந்து கொண்டு வருவார்களே...அந்த ஐயராக வரும் குருக்கள்தான் காயமடைந்த பெரியவர் ராமகிருஷ்ணன்.

செல்போன் வைத்திருந்த பலரும் 108 ஆம்புலன்ஸுக்கு போன் செய்து போராடினோம். அரை மணி நேரம் ஒரு மணி நேரம் ஆனது ஆம்புலன்ஸ் வந்தபாடில்லை.

"கிண்டியில இருக்கோம் சார்...ஆலந்தூர்ல இருக்கோம் சார்...வர ஒரு மணி நேரம் ஆகும் பரவாயில்லையா...?" என்று அலட்சியமாக இருந்தது ஆம்புலன்ஸ் தரப்பின் இருந்து வந்த பதில்கள்.

சரி...ஆட்டோவை நிறுத்தலாம் என்று பார்த்தால்,  கை காட்டும் ஆட்டோக்கள் பலவும்  எங்களை கண்டு கொள்ளாமலே கடந்து சென்றன. அவர் எடை அதிகமாக இருந்ததால் தூக்குவதில் சிரமம் இருந்தது. பக்கத்தில் இருக்கும் விஜயா மருத்துவமனைக்குக் கூட அவரை தூக்க முடியாமல் ஆட்டோவை தேடியே அங்கிருந்தவர்கள் அலைந்து கொண்டிருந்தார்கள்.

நிச்சயமாக ஆம்புலன்ஸ் வராது என்று தெரிந்தால் கூட அடுத்து என்னவென்று யோசித்திருக்கலாம். ஆனால் வரும் ஆனால் வராது என்கிற நிலை இருந்ததால் அருகில் பேருந்து நிலையம் அருகே இருந்த போலீஸ் பூத்துக்கு போனால் அது 12 மணி அளவிலும் பூட்டப்பட்டிருந்தது. கிட்டத்தட்ட 1 மணி நேரம் வரையிலும் மிக முக்கியமான இடத்தில் டிராஃபிக் போலீஸ் யாருமே இதை கவனிக்கவில்லை.

கடைசியாக அவரின் உறவினருக்கு அவரது செல்போன் மூலம் தொடர்பு கொண்டோம். அவர்களும் வந்து சேர ஒரு மணி ஆகும் என்று சொல்ல,  அந்த நேரத்தில் கருணை நிறைந்த ஆட்டோகாரார் ஒருவர் வண்டியை நிறுத்த,  அருகில் இருந்த மருத்துவமனையில் அவரை கொண்டு போய் சேர்த்தோம். இப்போது அவர் முதலுதவி பெற்று வருகிறார். தங்கள் பணிகளை எல்லாம் நிறுத்திவிட்டு அந்த சாலையில் தங்கள் வாகனங்களை ஓரங்கட்டிவிட்டு உதவியவர்களால் மட்டுமே மனிதம் தழைத்துக் கொண்டிருக்கிறது.

விபத்து சிறியதோ பெரியதோ,  ஆம்புலன்ஸ் வரும் என்ற நம்பிக்கையை பொதுமக்கள் இழந்துவிட்டால் எப்படி அவர்கள் உதவ முன்வருவார்கள்? சென்னை போன்ற பெருநகரத்திலேயே ஆம்புலன்ஸ்கள் தட்டுப்பாட்டில்தான் இருக்கின்றனவா? விபத்து நடந்து ஆட்டோக்கள் உதவ முன் வந்தால்,  அவர்களுக்கு சிக்கலாகும் என பயப்படுகிறார்களே...இதற்கு முடிவே இல்லையா?  ஒரு விபத்து இப்படி பல கேள்விகளை முன் நிறுத்துறது.

சாமான்ய மனிதனுக்கும் சட்டம் சரிசமமாகும் வரை இங்கே எதுவும் கேள்விகளே!

நாக்கை துருத்தி... கையை ஓங்கி... தஞ்சை கோர்ட்டில் டென்ஷனான விஜயகாந்த்!

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பேனரை  சேதப்படுத்தியதாக தொடரப்பட்ட  வழக்கில்,  தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஜாமீன் பெற தஞ்சாவூர் வந்திருந்தார். அப்போது நீதிமன்ற வளாகத்தில் ஏற்பட்ட தள்ளு முள்ளுவில் தேமுதிக நிர்வாகி ஒருவரை விஜயகாந்த் அடிக்க பாய்ந்ததால் சிறுதி நேரம் பரபரப்பு நிலவியது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 28-ம் தேதி,  மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண உதவிகள்  வழங்க கோரி, தேமுதிக தலைவர் விஜயகாந்த தலைமையில் தஞ்சாவூர் தபால் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.

அப்போது,  ஆர்ப்பாட்ட மேடை அருகே இருந்த பேருந்து நிறுத்தத்தில் வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா பேனரை தேமுதிக தொண்டர்கள் கிழித்தெறிந்தனர். அதனைத் தொடர்ந்து அங்கு வந்த அதிமுகவினர் விஜயகாந்த் பிளக்ஸ் பேனரை  கிழித்து, அங்கிருந்த தேமுதிக தொண்டர்கள் சிலரையும் கடுமையாகத் தாக்கினர். இனிமேல் தஞ்சாவூருக்குள் விஜயகாந்த்தை நுழைய விடமாட்டோம் என்று அதிமுகவினர் சபதமும் போட்டனர்.

பின்னர் விஜயகாந்த் மீது வன்முறையை தூண்டுதல், பொதுசொத்தை சேதப்படுத்துதல் போன்ற பிரிவுகளில் அதிமுகவினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கும் போடப்பட்டது. அதில் முதல் குற்றவாளியாக விஜயகாந்த் சேர்க்கப்பட்டார்.

இந்நிலையில் இவ்வழக்கில் ஜாமீன் பெற இன்று (வியாழன்) காலை 12 மணியளவில்,  விஜயாகாந்த் தஞ்சை கோர்ட்டில் ஆஜரானார். அப்போது அங்கு தேமுதிகவினர், ஏராளமானோர் கூடியிருந்தனர். ஒருகட்டத்தில் விஜயகாந்தை பார்க்க தொண்டர்கள் ஆர்வ மிகுதியால் ஒருவரையொருவர் முண்டியடித்தனர். அதனால் ஏற்பட்ட தள்ளு முள்ளுவில் விஜயகாந்த் சிக்கிக் கொண்டார்.இதனையடுத்து எரிச்சலடைந்த விஜயகாந்த்,  நிர்வாகி ஒருவரை அடிக்க, நாக்கை துருத்திக்கொண்டு கையை ஓங்கினார். இதனால் அந்த இடத்தில் சலசலப்பும் பரபரப்பும் நிலவியது.

பின்னர் நீதிபதி முன்பு ஆஜரான விஜயகாந்திற்கு ஜாமீன் வழங்கப்பட்டது.  இதேபோன்ற பேனர் பிரச்னையில் அதிமுகவினர் மீது, தேமுதிகவினர் கொடுத்த புகார் கிடப்பில் போடப்பட்டுள்ளது குறிப்பிடத்ததக்கது. 

ஜிம்முக்கு போறதுக்கு முன்னாடி இந்த 7 விஷயங்களை படிச்சுட்டு போங்க!

ஜிம்முக்குச் செல்ல வேண்டும், உடற்பயிற்சி செய்து உடலை முறுக்கேற்ற வேண்டும் என பலருக்கும் ஆசை இருந்தாலும், ஜிம்மில் முறையான சில விதிமுறைகளைக் கடைப்பிடிக்காமல், உடல் வலி ஏற்பட்டு ஓரிரு நாட்களுக்குப் பின்னர் ஜிம்முக்குச் செல்வதையே நிறுத்திவிடுபவர்கள்தான் அதிகம். ஜிம்முக்குச் செல்பவர்கள் இந்த ஏழு விஷயங்களைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும்.

1.ஜிம்முக்குச் செல்லும்போது டிஷர்ட், டிராக் பேன்ட், ஸ்போர்ட்ஸ் ஷூ அணிந்து செல்வது அவசியம். உடைகள் இறுக்கமாக இல்லாமல் தளர்வானதாக இருப்பது அவசியம்.

2.முதன்முதலில் ஜிம்முக்குச் செல்லும்போது, ஃபிட்னெஸ் டெஸ்ட் எடுக்க வேண்டும். உடலின் நெகிழ்வுத்தன்மை, உடல் வலிமை, கார்டியோ உடற்பயிற்சிகளைச் செய்யும் திறன், உடலின்  சமநிலைத்தன்மை, பி.எம்.ஐ மதிப்பு போன்றவற்றைப் பரிசோதித்து, அதன் பிறகே உடற்பயிற்சிகளைத் தொடங்க வேண்டும்.

 3. உடற்பயிற்சி தொடங்குவதற்கு முன்பு, ஐந்து நிமிடங்கள் வார்ம்அப்  பயிற்சிகள் அவசியம். வார்ம்அப் பயிற்சிகளுக்குப் பிறகு, ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகளைச் செய்ய வேண்டும். அப்போதுதான்,  உடற்பயிற்சி செய்வதற்கு உடலில் உள்ள தசைகள் ஒத்துழைக்கும். தசைப்பிடிப்பு உள்ளிட்ட தசையில் ஏற்படும் கோளாறுகளும் தவிர்க்கப்படும்.

4. உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் அதிகமாக கார்டியோ பயிற்சிகளைச் செய்வதால் உடல் எடை குறையும். ஆனால், உடல் ஃபிட் ஆக இருக்காது. அடிக்கடி சோர்வு ஏற்படும். எனவே, ஒரு மணி நேர உடற்பயிற்சியில் 40 நிமிடங்கள் கார்டியோ பயிற்சிகளையும், 20 நிமிடங்கள் வலுவூட்டும் பயிற்சிகளையும் செய்ய வேண்டும். உடல் எடையை அதிகரிக்க விரும்புபவர்கள், 70 சதவிகிதம் வலுவூட்டும் பயிற்சிகளையும், 30 சதவிகிதம் கார்டியோ பயிற்சிகளையும் செய்ய வேண்டும்.

5. 'உடற்பயிற்சியின்போது தண்ணீர் குடிக்கக் கூடாது' என்று சிலர் சொல்கிறார்கள். இது தவறு.  நாக்கு உலரும்போதுதெல்லாம் 50 மி.லி தண்ணீரைப் பருக வேண்டும். உடற்பயிற்சி முடிந்தவுடன் 15 நிமிடங்கள் கழித்து, தேவையான அளவு தண்ணீரைக் குடிக்கலாம்.

6. வாரத்துக்கு ஒரு நாள் உடற்பயிற்சிக்கும் ஓய்வு கொடுக்க வேண்டும். தசைகளுக்கு ஓய்வு கொடுத்தால் மட்டுமே, அடுத்த வாரம் முறையாக உடற்பயிற்சி செய்ய இயலும். எனவே, ஆர்வக்கோளாறில் ஜிம்மில் சேர்ந்ததும் ஏழு நாட்களும் பயிற்சி செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

7. உடற்பயிற்சிகள் அனைத்தையும் முடித்தவுடன் தசைகளின் இறுக்கத்தை  தளர்த்தும் வண்ணம் சில  ஸ்டிரெட்ச்சிங்  பயிற்சிகளை செய்ய வேண்டும். 3 முதல் 5 நிமிடங்கள் வரை செய்யும் இந்தப் பயிற்சியை, உடற்பயிற்சியாளர் கண்காணிப்பில் செய்ய வேண்டியது அவசியம்.

பூச்சி மருந்து தெளிப்பானிலும் ஜெ. ஸ்டிக்கர்... ஆவேசமடைந்த விவசாயிகள்!

கோவையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட இலவச மருந்து தெளிப்பானில் பெரிய அளவிலான ஜெயலலிதாவின் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்ததால் ஆவேசமடைந்த விவசாயிகள்,  "ஸ்டிக்கர் ஒட்டாம எதையும் கொடுக்க மாட்டீங்களா..?" என கோபமாக கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தானிய சேமிப்பு குறித்து விவசாயிகளுடனான ஆலோசனைக் கூட்டம்,  கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடந்தது. இந்த ஆலோசனைக்கூட்டத்தில் கோவை, திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தின் முடிவில் விவசாயிகள் அனைவருக்கும் இலவசமாக மருந்து தெளிப்பான் வழங்கப்பட்டது.

தனியார் நிறுவனத்திடம் கொள்முதல் செய்யப்பட்ட அந்த மருந்து தெளிப்பான்களில்,  பெரிய அளவிலான முதல்வர் படம் ஒட்டப்பட்டிருந்தது. அதிகாரிகள் அதை விவசாயிகளுக்கு தர முற்பட்டபோது ஜெயலலிதா படம் ஒட்டியிருந்ததை கண்ட விவசாயிகள், "இதில் எதற்கு இவ்வளவு பெரிய ஜெயலலிதா பட ஸ்டிக்கர் ஒட்டியிருக்கிறீர்கள்?" என அதிகாரிகளிடம் சண்டையிட்டனர்.

மேலும், ஆவேசமடைந்த சில விவசாயிகள், முதல்வர் ஜெயலலிதா பட ஸ்டிக்கரை கிழித்தெறிந்தனர். மேலும் செய்தியாளர்களிடமும் தங்கள் ஆதங்கத்தை கொட்டித் தீர்த்தனர்.

"விவசாயிகளுக்கு வழங்கும் மருந்து தெளிப்பானில் அம்மா ஸ்டிக்கர் ஒட்டி கொடுப்பது எங்களுக்கு கேவலமாக இருக்கிறது. இதை எப்படி நாங்கள் எடுத்துச் செல்ல முடியும்? அரசு வழங்கும் ஒரு பொருளில் ஜெயலலிதா படம் இடம்பெறுவது நாங்கள் ஏதோ கட்சிக்காரர்கள் போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது. முதல்வர் படமாக இருந்தாலும் அதை இவ்வளவு விளம்பரப்படுத்த வேண்டிய அவசியமில்லை. அரசாங்க முத்திரையை போட்டு கொடுக்கலாம். அதற்காக இப்படியா?" என கொந்தளித்தனர் விவசாயிகள்.

ஒருவழியாக அதிகாரிகள் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

Wednesday 24 February 2016

ஜான்சன் & ஜான்சன் பவுடரால் கருப்பை கேன்சர்:பலியான பெண் குடும்பத்திற்கு ஐநூறு கோடி ரூபாய் ஃபைன்!

நம் நாட்டைப் பொறுத்த வரை இங்குள்ள மக்களின் உயிரை கொஞ்சம் கொஞ்சமாக குடிக்கும் நோக்கில் விற்பனை செய்யப்படும் பொருட்கள் தடை செய்யப்பட்டு கொஞ்ச வாரங்களில் மறு படியும் விற்கப்படுவது சகஜமான விஷய மாகி விட்டது..அதிலும் ஜனங்களின் உயிரோடு விளையாடும் பல பொருட்களை இந்தியாவெங்கும் உள்ள கடை களில் தாராளமாகக் கிடைக்கின்றன. சாம்பிளுக்கு சொல்வதானால்…

நிமுசுலிட் (Nimesulide)

இந்த நிமுசுலிட் என்பது ஒரு வலிநிவாரணி மாத்திரை. இம்மாத்திரை அமெரிக்க, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் அறிமுகப்படுத்தபடவே இல்லை. ஆனால் இந்தியாவில் இம் மாத்திரை அதிகம் கிடைக்கிறது. அந்நாடுகளின் மார்க்கெட்டுகளில் விற்கப்படாததற்கு காரணம் என்னவென்று தெரியுமோ? இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், கல்லீரல் செயலிழப்பு ஏற்படும். மேலும் காய்ச்சலுடன் உள்ள குழந்தைகளுக்கு இம்மாத்திரையைக் கொடுக்கவே கூடாது. ஆனால் இந்தியாவில் இம்மாத்திரையை பல டாக்டர்களே சிபாரிசு செய்வார்கள்.

மேகி

சில நாட்களுக்கு முன்பு மேகியில் அளவுக்கு அதிகமாக மோனோசோடியம் க்ளுடமேட் (MSG) மற்றும் ஈயம் (Lead) இருப்பதாக சோதனையில் தெரியவந்தது நினைவிருக்கும். இதிலுள்ள MSG-யை அதிகமாக உடலில் சேர்த்து வந்தால் கல்லீரல் பிரச்சனைகள், மூளை பாதிப்பு மற்றும் உடல் பருமன் போன்றவை ஏற்படக்கூடும். மேலும் MSG-யானது ஒருவரை அப்பொருளுக்கு அடிமைப் படுத்திவிடும்.

கோலா

காற்றூட்டப்பட்ட பானங்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்பது நன்கு தெரிந்ததே. மேலும் இது உடல் பருமனை அதிகரிக்கக் கூடியதும் கூட. ஆனால் கருப்பாக இருக்கும் அனைத்து பானங்களும், இன்னும் மோசமானது. ஏனெனில் இவற்றில் அஸ்பார்டேம் என்ற செயற்கை சுவையூட்டி, உடலுக் குள் செல்லும் போது மெத்தனாலாக மாறுகிறது. அதிலும் சூடான நிலையில் மெத்தனால் வாயு உடலுக்குள் செல்லும் போது, அது பார்வையை இழக்கச் செய்யும்.

சிகரெட்

இந்தியாவில் சிகரெட்டை கட்டாயம் தடை செய்ய வேண்டும். ஏனெனில் இது தான் இந்தியாவில் பல மக்களின் உயிரைக் குடிக்கிறது. இதில் உள்ள நிக்கொடின் என்ற வேதி பொருள் மனிதனின் நுரையிரலை அழிக்கும் தன்மையுடையது மேலும் நாளடைவில் இது கேன்சரை உருவாக்கும் குணம் உடையது.

இந்த வரிசையில் இன்றளவும் பரவலாக பயன்படுத்தப்பட்டு வரும் ஜான்சன் & ஜான்சன் நிறுவனத் தின் தயாரிப்பான, அதன் டால்க்களில் கேன்சரை உருவாக்கும் கெமிக்கல் பொருட்கள் இருப்பதாக, கிட்டத்தட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் அமெரிக்காவில் இன்றும் ரிக்கார்ட் செய்யப் பட்டுள்ளன. அத்துடன் , “Johnson’s No More Tears baby shampoo“வில் கூட மிகுந்த நச்சு பொருட்கள் கலந்திருப்பதாக அமெரிக்க நுவர்வோர் அமைப்புகள் கடுமையாக குற்றம்சாட்டி வருகின்றன.

மேலும் அமெரிக்காவில் 2009-ம் ஆண்டு, பல்வேறு அமைப்புகள் சேர்ந்து “பாதுகாப்பான அழகு சாதன பொருட்களுக்கான” விழிப்புணர்வு பிரச்சாரம் ஒன்றை தொடங்கினார்கள். அந்த பிரச்சாரத் தின் மூலம், ஜான்சன் & ஜான்சன் நிறுவன தயாரிப்புகள் பற்றி பல்வேறு கேள்விகளை எழுப்பிய துடன் மட்டுமல்லாமல், அந்த பொருட்களை புறக்கணிக்குமாறும் மக்களிடம் வலியுறுத்தினார்கள். இதனால் கடும் நெருக்கடிக்கு ஆளான ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் , தங்களுடைய நிறுவனத் தின் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான தயாரிப்புகளில் பயன்படுத்தப்படும் , dioxane மற்றும் formaldehyde-டை, இனிமேல் பயன்படுத்த போவதில்லை என்று 2012-ம் ஆண்டு தெரிவித்தது. dioxane மற்றும் formaldehyde இரண்டுமே மனித உடலில் கேன்சரை உருவாக்குபவை என்பது குறிப்பிடத் தக்கது.

இதனிடையே இந்தியாவில், மும்பையில் உள்ள ஜான்சன் அன்ட் ஜான்சன் நிறுவனத்தில் தயா ரிக்கப்பட்ட, குழந்தைகள் பவுடரில் நச்சுத்தன்மை வாய்ந்த பொருட்கள் இருப்பதாக புகார் எழுந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த 2007ம் ஆண்டு, அந்நிறுவனத்தின் மீது வழக்கு தொடரப் பட்டது. விசாரணையில் குழந்தைகளுக்கு பயன்படுத்தப்படும் பவுடரை நச்சுத்தன்மை வாய்ந்த எதிலீன் ஆக்சடை கொண்டு ஸ்டெரிலைஸ் செய்யப்படுவதால் பவுடரில் நச்சுத்தன்மை கொண்ட பொருட்கள் இருந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மும்பை முலுந்தில் உள்ள ஜான் சன் அன்ட் ஜான்சன் ஆலையில், அழகுசாதன பொருட்கள் தயாரிக்கும் உரிமத்தை, 2013-ம் ஆண்டு உணவு மற்றும் மருந்து நிர்வாகம் சஸ்பெண்ட் செய்து வைத்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அமெரிக்காவின் அலபாமாவில் வசித்து வந்த plaintiff Jacqueline Fox என்ற பெண்மணி, கடந்த சில வருடங்களுக்கு முன் மிசோரி நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில், கடந்த 35 வருடங்களாக ஜான்சன்&ஜான்சன் பேபி பவுடர் மற்றும் Shower to Shower பவுடரை தன் அந்தரங்க சுகாதாரதிற்காக உபயோகபடுத்தி வந்ததாகவும், அதன் காரணமாகவே தனக்கு கருப்பை கேன்சர் ஏற்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டி இருந்தார்.

கருப்பை கேன்சர் இருப்பதாக 2013-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், இந்த வழக்கு விசார ணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட காலத்திற்கு முன்பாகவே, கடந்த ஆண்டு Jacqueline காலமாகி விட்டார். இதையடுத்து, அவருடைய மகன் ஜேக்கி பாக்ஸ் வழக்கை தொடர்ந்து நடத்தினார். இந்த வழக்கில் நேற்று முன்தினம் – அதாவது திங்கள் (22.02.14) மாலை வழங்கப்பட்ட தீர்ப்பில், “ஜான் சன்&ஜான்சன் நிறுவனம் தவறு செய்திருப்பது மட்டுமல்லாமல், அவற்றை பொது மக்களுக்கு தெரிவிக்காமல் அலட்சியமாக இருந்தது, தவறை மறைத்து சதித்திட்டம் தீட்டியது மற்றும் மோசடி செய்துள்ளது” என்று கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து Jacqueline வழக்கறிஞர் Ted G. Meadows கூறுகையில் “*ஜான்சன்ஸ் & ஜான்சன்ஸ் நிறுவன பவுடர்களில் கலந்திருக்கும் டால்க்(Talc) கேன்சரை உருவாக்கும் என்பது அந்த நிறுவனத் தின் உரிமையாளர்களுக்கு பத்தாண்டுகளுக்கு முன்பே தெரியும்.ஆனால், விற்பனையை மட்டுமே கருத்தில் கொண்டு, அதை பற்றிய உண்மையை மக்களிடமிருந்து அவர்கள் மறைத்து விட்டனர். அதை பற்றிய ஒரு எச்சரிக்கையை கூட, ஜான்சன்ஸ்&ஜான்சன்ஸ் நிறுவன தயாரிப்புகளில் வெளி யிட அவர்கள் தயாராக இல்லை. தெரிந்தே இந்த விவகாரத்தை, அந்நிறுவனத்தினர் மறைத் திருக்கிறார்கள். டால்க் பற்றிய அந்நிறுவன டாக்குமன்ட்களை படித்தால், பீதியூட்டும், ஆத்திர மூட்டும் வகையிலான விஷயங்களும், கார்பரேட் பேராசைகளும், மனித உயிரின் மீதான அவர்களின் அலட்சியமும் தெரிய வருகிறது” என்றும், தெரிவித்துள்ளார்.

மேலும், இதை முன் வைத்தே தான் வாதிட்டதாகவும், Jacqueline போன்ற அற்புதமான பெண்மணி நீண்டநாள் வாழ்ந்திருக்க வேண்டியவர் என்றும், இருப்பினும் அவருடைய வழக்கில் நீதி பெற்றுத்தந்ததை மிகப்பெரும் கவுரமாகவும், மகிழ்ச்சியாகவும் கருதுவதாக வழக்கறிஞர் Ted G. Meadows குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு விசாரணையின்போது Jacqueline வழக்கறிஞர் Ted G. Meadows தரப்பில் 1977 -ம் ஆண்டு ஜான்சன் & ஜான்சன் நிறுவனதிற்குள் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவில் அளிக்கப்பட்ட குறிப்பை, முக்கிய ஆதாரமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது

தற்போது கார்பரேட் நிறுவனங்களுக்கான ஊடகமான ப்ளூம்பெர்க் வெளியிட்டுள்ள தகவலின்படி “வழக்கை விசாரித்த நீதிபதிகளான foreman, Krista Smith ஆகியோர், வழக்கறிஞர் Ted G. Meadowsன் வாதத்தை ஏற்று கொண்டதாகவும், ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் டாக்குமென்ட்களே அந்நிறுவனத்தின் தவறுகளுக்கு உறுதியான சான்றாக இருந்ததாக நீதிபதிகள் நம்பியதாகவும்” குறிப்பிட்டுள்ளது.

இதையடுத்தே, ஜான்சன் &  ஜான்சன் டால்க் பயன்படுத்தியதால் கருப்பை கேன்சர் வந்து பலியான ஜாக்குலின் குடும்பத்திற்கு ஐநூறு கோடி ரூபாய் நிவாரணம் அளிக்க Missouri நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது

“இனிமே யாரும் இப்படிப் பண்ணாதீங்க ப்ளீஸ்..!’’ - குமுறும் லட்சுமி ராமகிருஷ்ணன்

‘என்னம்மா இப்படிப் பண்றீங்களேம்மா...’ - ’சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியில் போகிற போக்கில் லட்சுமி ராமகிருஷ்ணன் சொல்லிய ஒரு கேப்ஷன்தான்,

இப்போது தமிழக தேர்தல் திருவிழாவையே  துவக்கி வைத்திருக்கிறது. கோடிகளைக் கொட்டி தி.மு.க. வெளியிடும் தேர்தல் விளம்பரங்களில், ‘என்னம்மா இப்படிப் பண்றீங்களேம்மா’ என்பதுதான் ஹேஷ்டேக் போல உள்ளது. இடையில் திடீரென லட்சுமி ராமகிருஷ்ணனே அந்த பிரசாரத்தை ஆதரிக்கிறார் என்பது போல செய்திகள் வெளியாக, ’என்ன நடக்கிறது?’ என்று அவரிடமே கேட்டேன்.

குமுறிக் கொட்டத் தொடங்கி விட்டார். ‘’என்னைக் கேக்காம என்னைப் பத்தி எப்படி தப்பான தகவல் பரப்பலாம். எனக்கும் குடும்பம் இருக்கு. என் பொண்ணு அமெரிக்காவில இருந்து வந்திருக்காங்க. அவங்ககூட எனக்கு நேரம் செலவழிக்க முடியலை. இது பத்தி நான் எங்கேயும் எந்த இடத்துலயும் பெரிசா பதில் சொன்னதே இல்லை. அப்புறம் ஏன் எல்லாரும் என்னை டார்கெட் பண்றீங்க!

இந்த ஒரு சின்ன வார்த்தை எங்கே போய் நிக்குதுனு பாருங்க. சின்னச் சின்னதா கிண்டல் பண்ணி, கடைசியில தமிழ் நாட்டோட முதலமைச்சரவே கிண்டல் பண்ற அளவுக்கு வளர்ந்து நிக்குது. அந்த அரசியல் விளம்பரம் லட்சுமி ராமகிருஷ்ணன்ங்ற ஒரு சாதாரண மனுஷிய டார்கெட் பண்ணல. அதுக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. தமிழ்நாட்டு அரசியல் பத்தி விளம்பரம் பண்றாங்க. அதனால அது பத்தி என்கிட்ட கேக்குறதே தேவையில்லாத விஷயம்.

அந்த வார்த்தை என்னை ஏன் இவ்ளோ சுத்துதுனு தெரியலை. முன்னாடி சிவகார்த்திகேயன் அந்த வார்த்தைக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லைனு சொல்லியிருந்தாரு. ’என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா’ பாட்டு ஹிட் ஆனதுக்கு லட்சுமி மேடம் காரணம் இல்லை. பாட்டை உருவாக்கின டீம்தான் காரணம்’னு சொல்லியிருந்தாரு. அதான் எனக்கு கோபம் வந்து ட்வீட் பண்ணேன். ஏன்னா, அப்போ அது எனக்கு பெரிய ஆதங்கமா இருந்தது. என்னதான் கோடி கோடியா சம்பளம் வாங்குற ஹீரோ ஆகிட்டாலும், எனக்கு சிவா இன்னமும் பழைய சிவாதான். என் வீட்டுப் பையனாதான் அவரைப் பார்க்கறேன். கதை விவாதத்துல எல்லாம் என் கூடவே பல நாள் கலந்துட்டு இருக்காரு. அப்படி இருக்கும்போது, அப்படி ஏன் சொல்லணும். அதான் நான் அப்படிக் கேட்டிருந்தேன்.

எல்லாத்துக்கும் மேல விஜய் டிவி ஷோவுலயும் என்னை அவமானப்படுத்தினாங்க. என்னை மாதிரியே கெட்டப் போட்டுக்கிட்டு, ஒருத்தர் மேல கை வைக்கிற மாதிரியெல்லாம் நடிச்சு, என் சுயமரியாதைய சீண்டியிருந்தாங்க. அதை ஒரு தடவ செஞ்சா பரவாயில்லை. திரும்பத் திரும்ப அதை கிண்டலடிச்சு பெரிசாக்கிட்டாங்க. அதனாலதான் நான் கோபப் பட்டேன். ஆனா, இப்போ நிலவரம் வேற. இந்த பிரச்னைல என்னை இழுக்கறது தேவையில்லாத விஷயம்.

என்னை அவங்க டார்கெட் பண்ணல, அப்படி இருக்கும் போது நான் ஏன் ரியாக்ட் பண்ணணும் பதில் சொல்லணும். இன்னைக்கு வந்திருந்த டெய்லி பேப்பர்ல இருக்கறதுகூட நான் சொல்லாதது. அந்த பத்திரிகைல கேட்டப்ப, ‘எதுவும் சொல்ல விரும்பல’ன்னுதான் சொல்லியிருந்தேன். அவங்களா ஏதோ எழுதிட்டாங்க. இத்தோட இதை விட்ருவோம்!’’

- சாந்தமாக முடித்துக் கொள்கிறார் லட்சுமி ராமகிருஷ்ணன்.

மாண்புமிகு முதல்வர் 'அம்மா' வுக்கு ஒரு தமிழனின் பகிரங்க கடிதம்!

மாண்புமிகு முதல்வர் 'அம்மா' புரட்சித்தலைவி செல்வி ஜெயலலிதா அவர்களுக்கு வணக்கம்!

இந்தக் கடிதத்தின் வார்த்தைகளை நீங்கள் கருத்தில்கொள்ளாமல், அது எந்த உணர்வில், எந்த மனநிலையில் எழுதப்பட்டதோ, அதை மட்டுமே நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன் அம்மா.

ஆம்... ’அம்மா’தான். வெறும் உதட்டசைவில் மட்டுமல்ல; மனதின் அடியாழத்திலிருந்தே சொல்கிறேன். நீங்கள் எனக்கு அம்மாதான்... உங்களது மந்திரிகள், கட்சிக்காரர்களைப் போல் உங்களிடமிருந்து எனக்கு எந்த தேவையும் இல்லை. இருந்தாலும் நீங்கள் எனக்கு அம்மாதான். முதலில் உங்களுக்கு என் இதயங்கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள். நீங்கள் நீண்ட ஆரோக்கியத்துடன் நெடுநாள் வாழ எல்லாம் வல்ல இயற்கையை வேண்டுகிறேன்.... வாழ்த்துக்கள் அம்மா...!!!

ஆனால், இந்தக் கடிதம் நான் உங்களை வாழ்த்த மட்டும் எழுதப்பட்ட வெறும் வாழ்த்து மடல் அல்ல. அதை உங்கள் கட்சிக்காரர்கள் விதம்விதமாக வீதியெங்கும் பேனர்களாக இந்நேரம் நிறைத்திருப்பார்கள். உங்களுடன் நான் கொஞ்சம் உரையாடவே விரும்புகிறேன். இந்தக் கடிதத்தை நீங்கள்  படிப்பீர்களா என்பது நிச்சயமில்லை. அது என் நோக்கமும் இல்லை. என் மன அழுத்தத்தில் இருந்து விடுபடவே இந்தக் கடிதம். என் விரக்தி, என் கோபம் இந்த வார்த்தைகளில் வழிந்து ஓடி விடாதா என்ற ஏக்கத்தில்தான் இந்த கடிதத்தை எழுதுகிறேன்...

அம்மா... உங்களை நான் முதன்முதலாக பார்த்தது என் 7 வயதில். அப்போது நான் இரண்டாம் வகுப்பு மாணவன். தஞ்சையில் நடந்த ‘எட்டாவது உலக தமிழ் மாநாட்டில்’ கலந்து கொள்வதற்காக நீங்கள் வந்திருந்தீர்கள். வீதியெங்கும் மக்கள் கூட்டம், என்னை என் அப்பா தோள் மீது தூக்கி வைத்து உங்களைக் காண்பித்தார். உண்மையைச் சொல்லவேண்டுமானால், அப்போது உங்கள் மீது ஒரு பிரமிப்பு ஏற்பட்டது. ஆண்கள் நிறைந்திருந்த அந்த மேடையில் தனியொரு பெண்ணாக கம்பீரமாக நீங்கள் நின்று கூட்டத்தினரை எதிர்கொண்டது, இன்றும் நினைவில் நிழலாடுகிறது. வீதி நண்பர்கள், உறவினர்கள் என அனைவரிடமும், உங்களைப் பார்த்ததை மகிழ்வுடன் ஒரு வாரத்திற்கு சொல்லிக் கொண்டே இருந்தேன்...

சில மாதங்கள் சென்றது. எங்கள் வீட்டிலும், எங்கள் கிராமத்திலும், உங்கள் வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு நடந்த திருமணம் குறித்துப் பேசத் துவங்கினார்கள். 'பல கோடி செலவழித்து நடந்த திருமணம், ஒரு லட்சம் பேர் கலந்து கொண்டார்களாம், மிக டாம்பீகமான ஆடம்பரம்' என்று துவங்கும் அவர்கள் பேச்சு, இறுதியில் கோபமாக முடியும். ஏனெனில் அப்போது எங்கள் கிராமத்தில் நிலவிய வறுமை. உங்களது ஆடம்பரங்கள், அவர்களைக் கிண்டல் செய்வதாக இருந்திருக்கலாம். கோபமூட்டியிருக்கலாம் என நினைக்கிறேன்.

அதே சமயம் மன்னார்குடி பின்னணி கொண்ட சிலர்,  மிரட்டி இடங்கள் வாங்குவது, சொத்துக் குவிப்பது என வரைமுறை இல்லாமல் செயல்படுவதாகவும் அவர்கள் பேசிக் கொண்டிருப்பார்கள். எனக்கு இது புரியாவிட்டாலும், உங்களைப் பற்றி பேசுகிறார்கள் என்ற ஈர்ப்பே அந்த உரையாடலில் கலந்து கொள்ள காரணமாக அமைந்தது. உங்கள் மீது பலர் அவதூறு பேசினாலும், எங்கள் கிராமத்து பெண்கள் உங்கள் பக்கமே நின்றார்கள்... உங்களை அவர்கள் தங்கள் பிரதிநிதியாக பார்த்தார்கள்...

பின்பு தேர்தல் வந்தது, வீதியெங்கும் ‘ஒரு ரூபாய் சம்பளம் வாங்கும் சீமாட்டிக்கு, எங்கிருந்து வந்தது இவ்வளவு பணம்’ என்று போஸ்டர்கள் பளிச்சிட்டன. அதில் நீங்களும், உங்கள் தோழி சசிகலாவும் நகைகள் அணிந்திருக்கும் படங்கள் இருந்தது... எங்கள் வீட்டு சுவற்றிலும் அது ஒட்டப்பட்டு இருந்தது, ஆனால் இரவோடு இரவாக யாருக்கும் தெரியாமல் நான் கிழித்தெறிந்தேன். எனக்கு அப்போது எந்த அரசியல் புரிதலும் இல்லாவிட்டாலும், உங்களை எனக்குப் பிடித்திருந்தது, அதற்கு உங்களை நேரில் பார்த்தது கூட ஒரு காரணமாக இருக்கலாம்.

அரசியல் களம் சூடு பிடித்தது! வெள்ளித் திரையின் சூப்பர் ஸ்டார் உங்களுக்கு எதிராக கருத்து தெரிவித்தார். அரசியல் அரங்கில் உங்களுக்கு எதிராகப் பெரிய அணி திரண்டது. கருணாநிதியின் அரசியல் சாதுர்யம், மூப்பனாரின் அரவணைக்கும் திறன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் நல்லக்கண்ணுவின் பிம்பம் எல்லாம் கரம் கோர்த்தது. தேர்தல் முடிவுகள் வெளியாகின. உங்கள் கட்சி படுதோல்வி அடைந்ததாக என் சித்தப்பா கூறினார். எங்கள் கிராமத்தில் இருந்த ஆண்கள் எல்லாம் மகிழ்வுடன் கருணாநிதியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள சிறப்பு பேருந்துகள் அமர்த்திப் புறப்பட்டனர். ஆனால், அப்போதும் எங்கள் ஊர் பெண்கள் உங்கள் தோல்வியை ரசிக்கவில்லை.

அப்போது எங்கள் வீட்டருகே இருக்கும் ஒரு அத்தை சொன்னது நன்றாக நினைவிருக்கிறது, “நான் அந்தம்மாவுக்கு எதிராத்தான் ஓட்டு போட்டேன். ஆனா, அவங்க தோத்துப் போவாங்கனு நினைக்கலை. பயமா இருக்கு. எங்கே திரும்ப கிராமம் முழுக்க சாராயம் பரவிடுமோ..” என்று பதபதைத்தார். ஆம், எனக்கு உறைத்தது, உங்களால்தான் சாராய சாவுகள் குறைந்தது என்று அவர்களது நம்பிக்கை. அதில் அப்போது உண்மையும் இல்லாமல் இல்லை.
 
மீண்டும் தி.மு.க ஆட்சி. வருடங்கள் உருண்டோடின, வழக்கமான அரசியல் சலிப்புகள் வந்தது. மீண்டும் தேர்தல் அறிவிப்பு, தி.மு.க ஒரு வரலாற்று பிழையை செய்தது... ஜாதி கட்சிகளை மட்டும் இணைத்து ஒரு கூட்டணி அமைத்தது. நீங்கள் பலமான கூட்டணி அமைத்தீர்கள்... தமிழ் மாநில காங்கிரஸ், இந்திய தேசிய காங்கிரஸ், பா.ம.க, கம்யூனிஸ்டுகள் என கூட்டணி அமைத்து, மீண்டும் அரியணை ஏறினீர்கள்.

அந்த ஆட்சிக் காலத்தில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், பேருந்து ஓட்டுனர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.  வேலை நிறுத்தம் என்பது அனுமதிக்கப்பட்ட ஒரு போராட்ட வழிமுறை என்பதை அவர்கள் உணர்ந்திருந்தார்கள். ஆனால் நீங்கள் அதை உணர்ந்தீர்களா என தெரியவில்லை. எஸ்மா சட்டத்தைப் பாய்ச்சினீர்கள். ஆயிரக்கணக்கில் அரசு ஊழியர்களை கைது செய்தீர்கள். நான் உங்கள் தைரியத்தைக் கண்டு வியந்தேன்.

தவறான முடிவாக இருந்தாலும், ஓட்டு வங்கி அரசியலில் இருப்பவர்கள் அரிதினும், அரிதாக எடுக்கும் முடிவுகள் இவை. குறிப்பாக அத்தியாவசிய தேவைகளை கட்டமைக்கக்கூடிய அரசு இயந்திரம் முடங்கிய அந்த சமயம் வேறு எந்தகட்சியாவது இத்தகைய துணிச்சலான முடிவெடுத்திருக்குமா எனத் தெரியவில்லை. அதனாலேயே ஒட்டுமொத்த அரசு ஊழியர்களும் உங்களுக்கு எதிராக நின்றார்கள்.

அடுத்தடுத்து மதமாற்ற தடைச் சட்டம், கோவில்களில் ஆடு - கோழி பலியிட தடை- பொடாவில் வைகோவை கைது செய்தது என உங்கள் துணிச்சலை நிரூபித்துக்கொண்டே இருந்தீர்கள். இது உங்களுக்கு எதிராக ஒரு வலுவான கூட்டணி அமைய வித்திட்டது. இதுவே பாராளுமன்ற தேர்தலில் நீங்கள் படு தோல்வி அடைய காரணமாக அமைந்தது.

பின்பு, அனைத்து சட்டங்களையும் ரத்து செய்தீர்கள். இதுதான் நீங்கள் முதன்முறையாக சறுக்கிய இடம் என நினைக்கிறேன். இது மட்டுமல்லாமல் 2004ல், மிகபெரிய பேரிடர் தமிழகத்தைப் புரட்டிப் போட்டது. யார் எது வேண்டுமானாலும் சொல்லட்டும், அப்போது உங்கள் அரசு மோசமாகச் செயல்படவில்லை. (சிறப்பாக செயல்பட்டது என்று கூறவில்லை..!).

மீண்டும் தேர்தல்... மீண்டும் கூட்டணி... மீண்டும் தி.மு.க ஆட்சி... இரண்டு ரூபாய் அரிசி திட்டம், 2 ஏக்கர் இலவச நிலத் திட்டம் என அவர்கள் ஆட்சியை சிறப்பாகவே தொடங்கினார்கள். ஆனால், நில ஆக்ரமிப்பு, அபகரிப்பு, மதுரையில் ஒரு பவர் சென்டர், தடி எடுத்தவனெல்லாம் தண்டல்காரன் என அவர்களின் வெற்றி மமதை, நேரடியாக மக்களைப் பாதித்தது. இதில் ஈழப் பிரச்சனையும் சேர்ந்து கருணாநிதி மீதும், அவர் சகாக்களின் மீதும் ஒரு வெறுப்பை உண்டாக்கியது. நீங்கள் அல்ல, மக்கள் ஒரு வாய்ப்புக்காகக் காத்திருந்தார்கள். சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க - தே.மு.தி.க கூட்டணி வெற்றி பெற்றது. உங்கள் மொழியில் சொல்ல வேண்டுமானால், உங்கள் தலைமையிலான கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது.

தி.மு.க-வால், எதிர்கட்சித் தலைவர் பதவியைக் கூடப் பெற முடியவில்லை! ஆனால் ஒன்று அம்மா எப்போதெல்லாம் திமுக எதிர்கட்சியாகிறதோ அப்போதெல்லாம்தான் அதன் செயல்பாடு வீரியமாக இருக்கும் என்பார்கள். ஆனால் உங்கள் கட்சி எதிர்கட்சியாகிறபோது நீங்கள் அந்தளவிற்கு செயல்புரிந்தாக கேள்வியுற்றதில்லை. உங்கள் கட்சிக்காரர்களும் தத்தம் தொழில்களில் முடங்கிப்போய்விடுவார்கள். திமுக மீதும் 'இந்த முறை இந்தம்மாவிற்கு போடுவோம்' என்ற மக்களின் வழமையான எண்ணத்தின் மீதும் உங்களுக்கு அந்தளவிற்கு நம்பிக்கை

எண்பதுகளில் பிறந்த என் தலைமுறையினர் அரசியல் விழிப்புணர்வு பெற்ற காலம் இது. உங்கள் ஆட்சிக் காலத்தை உன்னிப்பாகக் கவனித்தோம். நான் உங்கள் அனைத்து முடிவுகளையும் ஆராயத் தொடங்கினேன். உங்கள் அனைத்து நடவடிக்கைகளையும் விவாதத்துக்கு விட்டேன். எனக்கு இப்போது உங்கள் பலங்கள் எல்லாம் பலவீனமாக தெரிய தொடங்கியது.

தி.மு.க நில ஆக்கிரமிப்பில் ஈடுபடுகிறது என்றால், பல பவர் சென்டர் இருக்கிறது என்றால், அதற்கான தொடக்கமும் நீங்கள்தான் அம்மா. 1991-96 ல் நீங்கள் என்ன செய்தீர்களோ அதைத்தான் அவர்கள் 2006-11ல் செய்தார்கள். ஈழப் பிரச்னையில் தமிழின தலைவர், தமிழினத்திற்கு எதிராக தன் பெண்டு, தன் பிள்ளை நலனுக்காக மிகப் பெரிய துரோகம் செய்தார் என்றால்.... நீங்கள் மட்டும் என்ன செய்தீர்கள் அம்மா...? “போர் ஒன்று நடந்தால், மக்கள் சாகத்தான் செய்வார்கள்” என்றீர்கள் சர்வசாதாரணமாக..!

எனக்கு பாவ, புண்ணியங்களில் நம்பிக்கை இல்லை... ஆனால், என் நண்பன் அடிக்கடி கூறுவான், “அதிமுகவும், ஈழ ஆதரவாளர்களும் எப்போதோ செய்த புண்ணியம்தான், ஈழப் போர் நடந்த காலத்தில் ஜெயலலிதா தமிழகத்தில் ஆட்சியில் இல்லாதது. இருந்திருந்தால், கருணாநிதி போல அவரும் அம்பலப்பட்டு இருப்பார். ஈழ ஆதரவாளர்களும் பல துயரங்களை அனுபவித்திருப்பார்கள்...” என்று! கூடங்குள அணு உலை போராட்டத்தில், நீங்கள் எடுத்த முடிவுகளைப் பார்த்த பின், அவன் சொன்னது உண்மை என்று புரிந்தது.

இன்னொரு நெருங்கிய நண்பர், தீவிர அ.தி.மு.க-காரர். அவர் நீங்கள் தவறான முடிவுகள் எடுக்கும்போதெல்லாம் சொல்வார், “ஏங்க.. அவுங்க நல்லவங்க... ஆனா, பல விஷயம் அவங்க கவனத்துக்கு தெரிவதில்லை.... எல்லாம் சுத்தியிருக்கிறவங்க பண்ற வேலை” என்பார். இது அவரின் கருத்து மட்டுமல்ல, எதிர் முகாமில் இருந்தாலும் உங்கள் மீது அபிமானமுள்ள பெரும்பான்மையானவர்களின் கருத்தும் கூட. நீங்கள் எடுக்கும் முடிவுகளுக்கெல்லாம் அவர்கள்தான் காரணமென்றால், உங்களுக்கு எதற்கு ’காவிரி தாய்’, சமூக நீதி காத்த வீராங்கனை என்றெல்லாம் பட்டங்கள்....? அதையும்கூட அந்த சுற்றியிருக்கிறவர்களுக்கு (சசிகலாவும் திவாகரனும்தான் அவர்கள் என்று நான் சொல்லவில்லை. மற்றவர்கள் சொல்கிறார்கள்) பிரித்துக் கொடுத்துவிடலாமே...?

சொத்துக் குவிப்பு வழக்கில் உங்களுக்கு எதிராக தீர்ப்பு வந்தது. சிறையில் அடைக்கப்பட்டீர்கள். இந்திய வரலாற்றிலேயே முதன்முதலாக ஆட்சியில் இருக்கும் முதல்வர் சிறையில் அடைக்கப்பட்டார் என்ற பெருமையை தமிழகத்திற்கு தேடி தந்தீர்கள். அப்போதும்கூட, தமிழக மக்களுக்கு உங்கள் மீது ஒரு 'Soft Corner' இருந்தது. மன்னித்து விட்டிருக்கலாம் என்று கூட பேசத் துவங்கினர். ஆனால், அப்போது உங்கள் அமைச்சர்கள் செய்த காரியங்கள், உங்கள் மீது ஒரு வெறுப்பை உண்டாக்கியது.

ஒரு குற்றவாளியாக நீங்கள் சிறையில் இருந்தபோது உங்கள் அமைச்சர்கள் தலைமைச்செயலகத்தில் துருத்தித் தெரிந்த உங்கள் படத்தை மேஜையில் வைத்து கும்பிட்டு ஆய்வுக் கூட்டங்களை நடத்தினார்கள். அரசியலமைப்பு சட்டத்தை ஆவணமாக முன்மொழிந்து பொறுப்பேற்ற அமைச்சர்கள் அதையே கேலிக்குள்ளாக்கிய விஷயங்கள் அவை. மொத்த இந்தியாவே தமிழகத்தை முகம் சுளிப்போடு பார்த்த தருணங்கள் அவை அம்மா.

கட்சிக்காரர்கள் உங்கள் மேல் உள்ள மரியாதையில் அலகு குத்தினார்கள், உங்கள் மேல் உள்ள பாசத்தில் மண்சோறு சாப்பிட்டார்கள் என்று நீங்கள் நம்புகிறீர்களா....? நீங்கள் நம்ப மாட்டீர்கள் என்று நான் நிச்சயம் நம்புகிறேன். என் அம்மா நிச்சயம் அவ்வளவு முட்டாள் கிடையாது. சிறையிலிருந்து மீண்டீர்கள். 10 சதவீதத்திற்கும் கீழ் ஊழல் செய்திருந்தால் பிழை இல்லை என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பால் விடுதலையானீர்கள். மீண்டும் தேர்தலில் நின்றதும், வென்றதும் முதல்வராக பொறுப்பேற்றதும் எங்களுக்கு கனவு போல் இருந்தது. நாட்கள் நகர்ந்தன.

காந்தியவாதி சசிபெருமாளின் மரணம் மதுவுக்கு எதிரான தமிழகம் தழுவிய போராட்டங்களுக்கு பிள்ளையார் சுழியாக இருந்தது. தமிழகமே உங்களிடமிருந்து மதுவுக்கு எதிரான ஓர் அரசாணையை எதிர்பார்த்தது. நானும் ஆவலாக இருந்தேன். ஆனால், நீங்கள் மெளனமாக இருந்தீர்கள். மதுவுக்கு எதிராகப் போராடியவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்தீர்கள். எந்தப் பெண்கள் நீங்கள் ஆட்சியில் இருந்தால், சாராய சாவுகள் இருக்காது என்று நம்பினார்களோ, அந்தப் பெண்கள் உங்களுக்கு எதிராக வீதிக்கு வந்து போராடினார்கள். அவர்களில் பலபேர் தாலிக்கு தங்கம் கொடுத்த உங்களால் மன்னிக்கவும் உங்களது அரசு நடத்தும் மதுக்கடைகளால் தாலி இழந்தவர்கள். இன்னமும் போராடுகிறார்கள். நீங்கள் இன்னமும் மெளனமாகத்தான் இருக்கிறீர்கள் அம்மா.

எல்லா எதிர்ப்புகளுக்கு பிறகும், உங்கள் மீது ஒரு பெருங்கூட்டம் நம்பிக்கை வைத்திருந்தது. அது எப்போது சரிந்தது தெரியுமா....? ’அம்மா ஸ்டிக்கர்’களுக்குப் பிறகுதான் .... அம்மா மருந்தகம், அம்மா குடிநீர், அம்மா உப்பு, அம்மா உணவகம் என்று எல்லா திசைகளிலும் நீங்கள் பாடிய சுயபுராணத்தில் லயித்த உங்கள் தொண்டர் படை, கடைசியில் சென்னை பெரு வெள்ளத்தில் சிக்கிய மக்களுக்கு உதவ லாரி லாரியாக, கொண்டு வந்த நிவாரணப் பொருட்கள் மீதும் உங்கள் முகம் பதித்த ஸ்டிக்கரை ஒட்டியது உங்கள் அரசியல் வரலாற்றில் மாபெரும் அசிங்கம். உங்கள் மீது இருந்த கடைசி நம்பிக்கையும் எங்களுக்கு சரிந்த தருணம் அதுதான்!

வரலாறு பல அசாதாரண ஆட்சியாளர்களைச் சந்தித்திருக்கிறது. அவர்களின் வீழ்ச்சிக்கும் சாட்சியாக இருந்திருக்கிறது. அவர்கள் எப்படி வீழ்ந்தார்கள் தெரியுமா அம்மா? மமதை, சுய புராணம் பாடும் ஒரு கூட்டத்தை பக்கத்தில் வைத்திருந்தது, ஜனநாய வழியில் தாங்கள் வெற்றியை தங்களது தனிப்பட்ட வெற்றியாக கருதி செயல்பட்டது இவைதான். துரதிருஷ்டவசமாக அது இங்கேயும் இருக்கிறது. அதை நீங்கள் உணர்கிறீர்களா....? ’மக்களிடையே உள்ள ’ஸ்டிக்கர் வெறுப்பு’ பற்றி எனக்கு தெரியவே தெரியாது’ என்று நீங்கள் சொன்னால், அது கூடத் தெரியாமல் இருக்கும் உங்களை நம்பி நாங்கள் எப்படி எங்கள் மாநிலத்தின் எதிர்காலத்தை ஒப்படைப்பது? ஒருவேளை தெரிந்து நீங்கள் அமைதியாக இருந்தால், அப்போது நீங்களும் அந்த ஸ்டிக்கர்களை ரசிக்கிறீர்கள் என்று எடுத்துக் கொள்ளலாமா?

இன்னொரு புறம் அ.தி.மு.கவினர் உங்கள் பெயர், உருவத்தை பச்சை குத்துவதும், மொட்டை அடிப்பதும் உங்கள் மீது உள்ள பிரியத்தாலா...கண்டிப்பாக இல்லை; அதற்கு வேறு சில காரணங்கள் உண்டு. இதை எப்போதும் உங்கள் அமைச்சரவை சகாக்கள் சொல்ல மாட்டார்கள். ஏனெனில், அவர்கள் ’முன்னாள் அமைச்சராக’ ஆவதை விரும்புவதில்லை.

உங்களின் அரசியல் குரு எனப்படும் எம்.ஜி.ஆரும் ஒரு தருணத்தில்,  'கட்சிக்காரர்கள் தங்கள் கைகளில் கட்சியின் சின்னத்தை பச்சை குத்திக்கொள்ளவேண்டும்' என கட்சியினருக்கு வலியுறுத்தினார். அதற்கு இரண்டாம் கட்டத் தலைவர்கள் சிலர் எழுப்பிய அதிருப்தியில், கட்சியே கொஞ்சம் ஆட்டம் கண்ட வரலாறு உங்களுக்கு தெரிந்திருக்குமா எனத் தெரியவில்லை. எம்.ஜி.ஆரே கொஞ்சம் ஆடிப்போனார். அத்துடன் மவுனமானார். அதிமுகவில் சுயமரியாதை உள்ள தலைவர்கள் இருந்த காலம் அது.

ஆனால் அப்படி சுயமரியாதை உள்ளவர்களை இன்று தேடிப்பார்த்துதான் கண்டுபிடிக்கவேண்டும். இப்போதுள்ளவர்கள் பொய்கள் சொல்லியாவது, உங்களைக் குஷிப்படுத்த வேண்டும். ஆனால், எனக்கு அப்படியான நிர்பந்தம் எதுவுமில்லை. உங்கள் மீதுள்ள பாசத்திலும் அபிமானத்திலும் உண்மையைச் சொல்கிறேன்.

தவறுகளிலிருந்து பாடம் கற்க மறுக்கும்போதுதான் ஒரு தலைவனின் தோல்வி தொடங்குகிறது . நீங்கள் அதைத்தான் தொடர்ந்து செய்கிறீர்கள். வரலாறு தொடர்ந்து உங்களுக்கு வாய்ப்புகளை வழங்கி வருகிறது. பிளசண்ட் ஸ்டே, டான்சிக்கு பிறகு வாய்ப்புகளை வழங்கியிருக்கிறது. குறிப்பாக, தருமபுரியில் மூன்று மாணவிகள் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட பிறகும் உங்களுக்கு வாய்ப்பு வழங்கி இருக்கிறது. ஆனால், அதை நீங்கள் மிக மோசமாகக் கையாள்வதாகவே நினைக்கிறேன் அம்மா.

இந்தக் கடிதத்தை நீங்கள் படிப்பீர்களா என்று எனக்குத் தெரியாது. ஆனால், அம்மாவைத் தவறாகப் பேசுவதை எந்த மகனும் விரும்பமாட்டான். நானும் விரும்பவில்லை. நீங்கள் முன்னெப்போதையும் விட இப்போதுதான் அதிக விமர்சனங்களை எதிர்கொள்கிறீர்கள். ஆனால், அதிலுள்ள உண்மையை புரிந்து கொள்ளாமல், எதற்கெடுத்தாலும் அவதூறு வழக்கு. இதுபோன்ற வழக்குகளில் காட்டும் ஆர்வத்தை, தமிழ் நாட்டின் வாழ்வாதாரப் பிரச்சனைகளில் காட்டியிருந்தால், தமிழகமே உங்கள் பிறந்த நாளுக்கு மனப்பூர்வமாக வாழ்த்தி இருக்கும்.

இப்போதும் உங்களுக்கு வாய்ப்பு இருக்கிறது. இன்னும் தேர்தல் நாள் அறிவிக்கவில்லை. அதனால் சில முடிவுகளை அதிரடியாக எடுக்கலாம். முதலில் இயற்கை வளக்கொள்ளைக்கு எதிராகச் செயல்படுங்கள். கிரானைட் கொள்ளை தொடர்பான சகாயம் அறிக்கையின் மீது நடவடிக்கை எடுங்கள். நீர் வழிப்பாதையிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுங்கள். ஆக்ரமிப்புகள் என்றால் ஏழைகளின் குடிசைகள் மட்டுமல்ல... பெரு நிறுவனங்களின் கட்டிடங்கள், கட்சிக்காரர்கள் கம்பிவளை போட்டு மடக்கியிருக்கும் அரசு நிலங்கள். மதுக்கடைகளை படிப்படியாக மூட அரசாணையிடுங்கள். இவை எல்லாம் உடனே சாத்தியமாகக் கூடியவையே!

நாம் எப்போதும் அம்மாவிடம் அதிக உரிமை எடுத்து கொள்வோம். நம் கோபங்களை, வெற்றிகளை, தோல்விகளை அம்மாவிடம்தான் முதலில் பகிர்ந்து கொள்வோம். நானும், உங்கள் மீது உள்ள கோபங்களை, வருத்தங்களை, உங்களிடமே தெரிவிக்கிறேன், உண்மையான பாசத்துடன். தேர்தலில் வெற்றியோ... தோல்வியோ நான் உங்களை எப்போதும் ’அம்மா’வாகத்தான் பார்ப்பேன். ஆனால், ஒருவேளை தேர்தலில் வெற்றிக் கனி கிட்டாவிட்டால், உங்கள் சுயபுராணம் பாட நீங்கள் சேர்த்து வைத்திருக்கும் கூட்டம் கனிகள் உள்ள இன்னொரு மரத்திற்கு பறந்து போய்விடும். நீங்கள் தனி மரமாக ஆகிவிடுவீர்கள்.

என் கடிதத்தின் ஏதேனும் ஒரு எழுத்து உங்களைக் காயப்படுத்தி இருந்தால் கூட மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்.

மீண்டும் ஒருமுறை பிறந்த நாள் வாழ்த்துகள் அம்மா, நன்றி!

ஆரம்பத்திலிருந்து அஜித்திற்கு மட்டும் தான் மரியாதை கொடுப்பேன், ஏனென்றால்? ராதாரவி ஓபன் டாக்

நடிகர் சங்க தேர்தலின் போது ராதாரவி பேசியது எல்லாம் அனைவரும் அறிந்ததே. அவர் எல்லோரையும் பெயர் சொல்லி தான் அழைப்பார்.

சமீபத்தில் ஒரு பேட்டியில் கூட இதுக்குறித்து இவர் ‘நான் என் சக நடிகர்கள் அனைவரையும் பெயர் சொல்லி தான் அழைப்பேன். ஆனால், அஜித்தை மட்டும் தான் இன்று வரை சார் என்று அழைக்கிறேன்.

ஏனெனில் அவரின் உதவி மனப்பான்மை என்னை மிகவும் கவர்ந்தது, யார் எந்த உதவி கேட்டாலும் லட்சம் லட்சமாக அள்ளிக்கொடுப்பார், அவரை போலவே தற்போது சூர்யா கூட S3 படப்பிடிப்பில் ஒருவரின் கல்விக்காக ரூ 1 லட்சம் கொடுத்தார்’ என கூறியுள்ளார்.

கணிதன் விமர்சனம் - கொஞ்சூண்டு குமாரசாமி! நிறைய்ய நிறைய்ய குன்ஹா!

செய்யாத தப்புக்காக ‘சேதாரம்’ ஆகும் ஒருவன், தப்பு செஞ்சவனுக்கு தருகிற ‘செய்கூலி’தான் கணிதன்! தனி மனித தடால் புடால்கள் இல்லாமல், பொது நோக்கத்திற்காக போர் வாளை வீசியிருக்கும் இப்படத்தின் டைரக்டர் டி.என்.சந்தோஷுக்கு ஒரு வெரிகுட் சர்டிபிகேட் வழங்கலாமா? (போலி சர்டிபிகேட் இல்லேங்க)

எப்படியாவது பிபிசி சேனலில் நிருபராகிவிட வேண்டும் என்று துடிக்கும் டி.வி நிருபர் அதர்வாவுக்கு எந்நேரமும் அதே நினைப்புதான். அந்த நேரம் பார்த்துதான் அவர் வேலை பார்க்கும் துக்கடா டி.வி ஒன்றின் உரிமையாளர் மகள் கேத்ரீன் தெரசா, அதர்வாவின் லைஃப்-ல் கிராஸ் ஆகிறார். காதல்…! முழுசாக ஒரு டூயட் முடிவதற்குள் ட்விஸ்ட்! இன்டர்வியூவின் போது இவர் கொடுத்த சர்டிபிகேட்டுகளை சரிபார்க்க போலீஸ் உதவியை நாடுகிறது பிபிசி சேனல். பார்த்தால்… இவரது போலி சர்டிபிகேட்டை பயன்படுத்தி வெளிநாட்டு வங்கிகளில் கடன் பெறப்பட்டு ஏப்பம் விட்டதாக சொல்கிறது க்ரைம் ரெக்கார்ட்! அதர்வா மட்டுமல்ல, தமிழ்நாட்டிலிருக்கும் ஏராளமான இளைஞர்களின் சர்டிபிகேட்டுகள் சம்பந்தப்பட்ட பல்கலைகழகங்களின் உதவியுடன் போலி எடுக்கப்பட்டு இத்தகைய வெளிநாட்டு வங்கிகளில் பல கோடிகள் ஸ்வாகா செய்யப்பட்டிருக்க, செய்யாத தப்புக்காக ஜெயிலுக்கு போகிறார் ஹீரோ! பெயிலில் வெளியே வரும் அதர்வா, போலிகளை கண்டுபிடித்து தோல் தனியே, ரத்தம் தனியே பிய்த்து எடுப்பதுதான் மீதி!

துப்பறியும் கதைகளுக்குள் தோட்டாவாக பொருந்துகிற அளவுக்கு கூர்மையாக இருக்கிறார் அதர்வா. தட்டிவிட்டால் விண்னென்று ஜம்ப் ஆகிற உடல்வாகு வேறு இருக்கிறதா? ஆக்ஷன் காட்சிகளில், அதிர்கிறது வெண்திரை! அப்பா மகன்களின் உறவில் இருக்கிற தலைமுறை இடர்பாடுகள் இவர் விஷயத்திலும் இருக்கிறது. ஆனால் அதுதான் சுவாரஸ்யம். தாத்தா காலத்திலிருந்து ஆல் இண்டியா ரேடியோவில் செய்தி வாசிக்கிற குடும்பமாக இருந்தாலும், “போதும்டா… எங்க கஷ்டம். நீயாவது வேலைய மாத்திக்கோ” என்று கெஞ்சும் அப்பா நரேனும், “அடைந்தால் பிபிசி” என்று துடிக்கும் மகன் அதர்வாவும் பிரமாதமான டேக் ஆஃப்!

அதர்வா- கேத்ரின் காதல், ஒப்புக்கு ஒத்தடமாக இருந்தாலும் கேத்ரின் அழகு ஆங்காங்கே தூவப்பட்ட ரோசா இதழ்கள். அவருக்கு டப்பிங் கொடுத்த பெண் யாரோ? கொஞ்சல் ஓவர்தான். அது ஒருபக்கம் இருக்கட்டும்… ஆபத்தான இடங்களுக்கு கூடவா இவரையும் சூட்கேஸ் மாதிரி இழுத்துக்கொண்டு போக வேண்டும்? போங்கப்பா… கேத்ரீன் காஸ்ட்யூமருக்கு எக்ஸ்ட்ரா பேமென்ட் கொடுக்கலாம். உடைத்தேர்வுகளில் அப்படியொரு அழகும் நேர்த்தியும்.

போலி சர்டிபிகேட் அடிக்கும் கும்பலோடு குடித்தனமே நடத்தியிருப்பார் போலிருக்கிறது டைரக்டர் டி.என்.சந்தோஷ். இண்டு இடுக்கு விடாமல் இழுத்துப்போட்டு பந்தி வைத்துவிட்டார். இனி எங்காவது நம் சர்டிபிகேட்டுகளை ஜெராக்ஸ் எடுக்கக் கொடுப்பது கூட எவ்வளவு ஆபத்து என்றாகிறது மனசு! அதுமட்டுமல்ல, வசனங்களில் துணிச்சல் வழிகிறது. “அண்ணா யுனிவர்சிடியிலிருந்துதான் சர்டிபிகேட்டுகள் போயிருக்கணும்” என்று அப்பட்டமாக பேசுகிற அளவுக்கு துணிச்சல் மிகுந்த வரிகளை மீண்டும் நினைத்தால் ஆச்சர்யமே மிஞ்சுகிறது. (எப்படிய்யா அனுமதிச்சாங்க?)

நட்புக்காக மட்டுமே கருணாகரன் சிக்கிக் கொண்டு உயிர் பிழைப்பதெல்லாம் ஓணானை இழுத்து வேட்டிக்குள் விட்டுக் கொள்வதை விட கொடுமையானது. காமெடியும் குணச்சித்திரமும் கலந்து கைதட்டல் பெறுகிறார் கருணாகரன். வில்லன் தருண் அரோரா சும்மா பார்வையாலேயே மிரட்டுகிறார். பாக்யராஜ் இருக்கிறார். அதிகம் வேலையில்லை.

தட தட வேகத்தில் செல்லும் திரைக்கதை, இரண்டாம் பகுதியின் கடைசியில் லேசாக பள்ளத்தில் விழுந்து தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடுவதை தவிர்த்திருக்கலாம்.

ட்ரம்ஸ் சிவமணியின் இசையில் எல்லா பாடல்களும் கொள்ளையடிக்கிறது. பின்னணி இசை மட்டும் வேறொருவர். அவரும் கொடுத்த வாய்ப்பை மிக சரியாக பயன்படுத்தியிருக்கிறார்.

கணிதன்- கொஞ்சூண்டு குமாரசாமி! நிறைய்ய நிறைய்ய குன்ஹா!

ஃப்ரீடம் 251: ஆனந்தம் யாருக்கு?

உலகில் இன்றைய தேதிக்கு, ஒருவர் இலவசமாகவோ அல்லது குறைந்த விலைக்கோ ஏதாவது பொருட்கள் அல்லது சேவையை வழங்குகிறார்கள் என்றாலே அதற்கு பின் ஏதாவது அரசியல் கட்டாயமாக இருக்கத்தான் செய்யும். அதுவும் கார்ப்பரேட் நிறுவனங்களை பற்றி சொல்ல வேண்டுமா என்ன...? எந்த ஒரு செயலுக்கு பின்னும் லாப நோக்கத்தோடுதான் செயல்படுவார்கள் கார்ப்பரேட் முதலாளிகள் என்பதற்கு பல நூறு பணக்கார முதலைகளை பட்டியலிட முடியும்.

இந்தியாவில் இன்று செல்போன் பயன்படுத்துபவரின் எண்ணிக்கை மொத்த மக்கள் தொகையில் சுமாராக 70 சதவிகிதம் (84 கோடி பேர்). மீதமுள்ள 30 சதவிகித (36 கோடி பேர்) மக்களை யார் தங்கள் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களாக மாற்றிக் கொள்கிறார்களோ அவர்கள்தான் அடுத்த பல ஆண்டுகளுக்கு இந்தியா எனும் பசுமாட்டின் மடியிலிருந்து தொலைத்தொடர்பு  கட்டணம் எனும் பெயரில் பாலை கறப்பார்கள்.

தொலைத்தொடர்பு நிறுவனங்கள்

இந்தியாவின் தொலைத்தொடர்புத் துறையில் பெரிய மாற்றங்களை கொண்டு வர மல்லுகட்டிக் கொண்டிருக்கிறார் இந்தியாவின் பெரிய பணக்காரர்களில் ஒருவர். சமீபத்தில் தனக்கும், தன் நிறுவனத்தின் பாதுகாப்புக்காகவும் 16,000 ஓய்வுபெற்ற ராணுவ மற்றும் பாதுகாப்பு படை வீரர்களை கொண்ட தனி ராணுவத்தையே அமைத்துக் கொண்டிருக்கிறார் அவர் என்று  அண்மையில் ஒரு செய்தி வெளியாகி பகீர் கிளப்பியது.

இவருக்கு தற்போது இந்தியத் தொலைத்தொடர்புத் துறையில் பெரிய இடத்தை பிடிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது, ஏனெனில் இவர் நடத்தும் மற்ற நிறுவனங்களில் பெரும்பாலானவைகள் தேக்க நிலையிலேயே இருக்கின்றன. சமீபத்தில் இவரின் துணி உற்பத்தி நிறுவனத்தை கூட விற்றுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தன் தடத்தை, இந்திய தொலைதொடர்புத் துறையில் வலுபடுத்திக் கொள்ள இந்த நிறுவனத்தை தொடங்கி இருக்கலாம். தன் நிறுவனத்தின் 4G சேவையை அதிகரிக்க சுமாராக 1 லட்சம் கோடி ரூபாய் செலவு செய்ய இருக்கிறார். அதில் வெறும் 10,000 கோடி ரூபாயை மட்டும் செலவழித்தால் கூட 30 கோடி பேருக்கு 251 ரூபாய்க்கு போனை கொடுத்துவிடலாம்.

இணைய நிறுவனங்கள்

இந்தியாவில் கூகுள் லூம், ஃபேஸ்புக் ஃப்ரீபேசிக்ஸ் போன்றவைகள் மூலம் இணையத்தை இந்தியாவில் அதிகமாக பயன்படுத்த வைக்க முயற்சித்தது அல்லது முயற்சித்துக் கொண்டிருப்பது எல்லாம் நாம் அறிந்ததே. கூகுள், ஃபேஸ்புக், ட்விட்டர், யூடியூப், இன்ஸ்டாகிராம் போன்ற நிறுவனங்களின் வருவாய் அசுர வேகத்தில் வளர வேண்டும் என்றால் அதிக இணைய பயன்பாட்டாளர்கள் வேண்டும், மற்ற நாடுகளில் மல்லுக்கட்டுவதை விட இந்தியாவில் இருக்கும் அரசை சரிகட்டுவது எளிது. எனவே இந்தியாவில் செல்போன் பயன்படுத்துபவரின் எண்ணிக்கையை அதிகப்படுத்தினாலே தானாக இந்தியாவில் இணைய பயன்பாடும் அதிகரிக்கும். அதற்குதான் இந்த ஃப்ரீடம் 251 மொபைல்.

இ - காமர்ஸ் நிறுவனங்கள்

இந்தியாவில் இணைய வசதி அதிகரித்தால் ஆனந்தப்படப் போகும் நிறுவனங்களில் இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கும் பெரும்பங்கு உண்டு. அதிக இணைய பயன்பாட்டாளர்கள், அதிக வாடிக்கையாளர்களாக உருவாவார்கள். இ- காமர்ஸ் நிறுவனங்களின் பலமே அவர்களிடம் இருக்கும் வாடிக்கையாளர்கள் பற்றிய விவரங்கள்தான். அந்த விவரங்கள் அதிகமானால் யாருக்கு என்ன மாதிரியான பொருட்கள் தேவை, இந்தியா முழுவதுமாக எந்த நேரத்தில் எந்த மாதிரியான பொருட்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படும் என்பது போன்ற ஃபிங்கர் டிப்ஸ் விவரங்கள் அவர்களின் கைக்குப் போகும். அடுத்த மாதம் என்ன தேவை என்பதை அறிந்து, உலகிலேயே எங்கு விலை குறைவாக அந்த பொருட்கள் கிடைக்கும் என்பதை கணக்கிட்டு அங்கிருந்து வாங்கி வந்து லோக்கல் கடைகளில் கொடுக்கும் விலையை விட மிகக் குறைந்த விலைக்கு விற்பனை செய்யத் தொடங்குவார்கள். இன்று இ-காமர்ஸில் கிடைக்காத பொருட்களே இல்லை.

அப்படிப்போனால் சில்லறை வியாபாரிகளால், உலகத்திலேயே குறைந்தவிலைக்கு பொருட்களை விற்கும் நிறுவனத்தை எதிர்த்து நிற்க முடியாமல் நொடிந்து போவார்கள். உள்நாட்டு சந்தை சரியத் தொடங்கும், இ - காமர்ஸ் நிறுவனங்கள் இன்னொரு வால்மார்ட்டாக உருவாகும். நாடு நான்கு கால் பாய்ச்சலில் வளரும், மோடியும் என் நாடு வளர்கிறது என்று மார்தட்டி செல்ஃபி எடுத்துக்கொள்வார். ஆனால் தள்ளுவண்டி வியாபாரம், நடைபாதை விற்பனை, சில்லரை வர்த்தகம் என பல வடிவங்களில் வியாப்பித்திருக்கும் சாமான்ய வியாபாரிகளின் நிலை என்னவாகும்...? 

ரஜினியே சொன்ன அடுத்த சூப்பர் ஸ்டார் இவர் தான்

தெலுங்கு திரையுலகின் முன்னணி கதாநாயகர்களுள் ஒருவர் பவன் கல்யாண். வெறித்தனமான ரசிகர்களை தன் வசம் வைத்திருக்கும் அவரை  தெலுங்கு திரையுலகின் பவர்ஸ்டார் என ரசிகர்கள் அழைப்பது நாமறிந்ததே. சமீபத்தில் அவரைப் பற்றி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூறிய விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார் நடிகர் சுனில்.

அவர் பேசுகையில், பிப்ரவரி 19 வெளியாகிய கிருஷ்ணாஷ்டமி படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அப்படத்தின் நாயகன் சுனில், ஒரு முறை ரஜினி பவன் கல்யாணின் ஜல்சா படத்தின் போஸ்டரை பார்த்துவிட்டு, அதில் பவன் கல்யாணின் தனித்துவமான ஸ்டைலினை கண்டு ஆச்சரியப்பட்டதோடு, டோலிவூட்டின் அடுத்த சூப்பர் ஸ்டார் இவராகத் தான் இருப்பார் என ரஜினி கூறிய தருணத்தைப் பகிர்ந்து கொண்டார்.

தமிழ் சினிமாவில் அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என இங்கு பெரும் போராட்டமே நடந்து கொண்டிருக்கையில், தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் தான், தெலுங்கில் அடுத்த சூப்பர் ஸ்டார் என ரஜினி கூறியதாக வெளிவந்துள்ள இச்செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழோ, தெலுங்கோ சூப்பர் ஸ்டாரிடமிருந்தே, சூப்பர் ஸ்டார் என பாராட்டு பெற்ற பவன் கல்யாண்க்கு நிச்சயம் இது கூடுதல் மாஸ் தான். 

குழந்தைகளுக்கு காது குத்தும் போது கவனிக்க வேண்டியவை....?


நமது ஊர்களில் குழந்தைகளுக்கு காது குத்துவது ஒரு வழக்கம். ஆனால் குழந்தைகளுக்கு காது குத்தும்போது ஒரு சில விசயங்களை நாம் பேண வேண்டும்

* காது குத்தும் இடம் சுத்தமானதாக இருக்கிறதா என்று நாம் உறுதி செய்ய வேண்டும். ஏனென்றால் குழந்தைகளின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாகவே காணப்படும்.


* குழந்தைகள் அவர்கள் அணிந்திருக்கும் கம்மல் தோடுகளை இழுப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன. அது அவர்களுக்கு மிகுந்த வலியினை கொடுக்கும்.


* காது குத்திய முதல் நான்கிலிருந்து ஐந்து மாதத்திற்கு குழந்தைகள் அவர்கள் அணிந்திருக்கும் கம்மல், தோடுகளை தொடர்ச்சியாக அணிய வேண்டும்.


* காது குத்தும் கருவி சுத்தமானதாக இல்லை என்றால் காது குத்தப்பட்ட இடத்தில் கிருமிகள் தாக்க அதிக வாய்ப்புள்ளது.


* அவர்கள் அணியக்கூடிய காதணிகள் தரமானதாக இல்லை என்றாலும் இது போன்று கிருமிகள் தாக்க வாய்ப்புள்ளது.


* காது குத்தும் இடத்தை தரமான ஆண்டிசெப்டிக்கை பயன் படுத்தி கழுவவும்.


* சில நேரங்களில், காது குத்திய இடத்தில் சிறிய தழும்புகள் வர வாய்ப்புகள் உள்ளது. இது சில நாட்களில் தானாகவே நீங்கிவிடும். ஆனால் இது கூட பலபெரும் பிரச்சனைக்கு காரணமாக அமையலாம். பெரும்பாலும் காது குத்தும் இடங்களில் கட்டி இருந்தால் இந்த பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் மிக அதிகம். அதனால் காது குத்தும் போது கட்டி இருந்தால் அந்த இடத்தை தவிர்ப்பது நல்லது.


* உங்கள் குழந்தைக்கு இரும்பு போன்றவற்றினால் அலர்ஜி ஏற்படுமானால் அந்த அலர்ஜி, இது போன்ற காதணிகள் அணிவதால் உங்கள் குழந்தையை பாதிக்கலாம்.


* குழந்தைகளின் காதணிகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளாதீர்கள்.


* குழந்தை மருத்துவமனைகளில் இதனை செய்வது நல்லது.


* காது குத்துவது சரியாக செய்யப்படவில்லை என்றால் அது குழந்தைகளுக்குஅதிகமான வலியை ஏற்படுத்தும்.

Tuesday 23 February 2016

தலைவலி அடிக்கடி வருதா? இதுதான் காரணம்..!

 அனைவரும் இன்றைய நாள் நன்றாக இருக்க வேண்டும், எந்த ஒரு டென்சனும் வந்துவிடக் கூடாது என்று அன்றைய தினத்தை ஆரம்பிப்பார்கள். ஆனால் அதை தலைவலி வந்து கெடுத்துவிடும். இந்த தலைவலி வேறு எந்த ஒரு காரணத்தினாலும் ஏற்படுவதில்லை. நாம் செய்யும் செயல்களால் தான் அந்த தலைவலியானது வருகிறது. இதற்காக நாம் நிறைய மாத்திரைகள், வீட்டு மருந்துகள் என்று பல வலிநிவாரணிகளை எடுத்துக் கொண்டாலும், அவை மீண்டும் மீண்டும் வந்து கொண்டு தான் இருக்கின்றன.

அதிலும் அவ்வாறு மாத்திரைகளை எடுத்துக் கொண்டால், அந்த மாத்திரைகளும் உடலும் பெரும் கெடுதலைத் தான் ஏற்படுத்தும். ஆகவே அத்தகைய வலி நிவாரணிகளைப் பயன்படுத்தி சரிசெய்வதை விட, நாம் செய்யும் எந்த செயல்களால், இந்த தலை வலி ஏற்படுகின்றதென்ற காரணத்தை தெரிந்து கொண்டு, அவற்றை சரிசெய்தாலே, எந்த ஒரு வலியும் நம்மை நெருங்காமல் இருக்கும்.

இப்போது எந்த செயல்கள் நமக்கு தலைவலியை உண்டாக்குகின்றன என்பதைப் பற்றி;


ஈரமான கூந்தல்


காலையில் தலைக்கு குளித்ததும், சரியாக காய வைக்காமல், அப்படியே தலையை சீவிக் கொண்டு செல்வார்கள். இதனால் தலையில் நீரானது அப்படியே தங்கிவிடும். பின் அவை தலைக்கு மிகுந்த வலியை உண்டாக்கும். ஆகவே எப்போதும் தலையை ஈரத்துடன் வைக்காமல் இருந்தால், தலைவலி வருவதைத் தடுக்கலாம். அதற்காக ஹேர் ட்ரையரைப் பயன்படுத்தக் கூடாது. ஏனெனில் அவை கூந்தல் உதிர்தலை உண்டாக்கும்.

அளவுக்கு அதிகமான வெப்பம்

வேலையாக வெளியே செல்லும் போது, தலைக்கு தொப்பியை அணிந்து செல்வது நல்லது. ஏனெனில் அளவுக்கு அதிகமான வெப்பம் ஸ்கால்ப்பில் படும் போது, தலைவலியானது உண்டாகும். மேலும் சரியாக உண்ணாமல் வெயிலில் சென்றாலும், சூரியக் கதிர்கள் உடலில் உள்ள எனர்ஜியை ஈர்த்து, பெரும் வலியை உண்டாக்கும். ஆகவே நன்கு சாப்பிட்டு, தலைக்கு தொப்பியை அணிந்து செல்வது நல்லது.

வாசனை திரவியங்கள்

உடலில் வியர்த்தால் அதிக துர்நாற்றம் வருகிறதென்று, சிலர் அளவுக்கு அதிகமாக வாசனை திரவியங்களை உடலில் பூசிக் கொண்டு செல்கின்றனர். இதனால் அந்த செண்ட் வாசனை, அதிக தலைவலியை உண்டாக்கும். ஆகவே வாசனை திரவியங்களை அதிகமாக பயன்படுத்தாமல், மிதமாக உபயோகிப்பது நல்லது.

கம்ப்யூட்டர் திரை

கம்ப்யூட்டரைப் போன்று தான், தொடர்ச்சியாக டிவியை பார்க்கும் போதும் கண்களுக்கு பெரும் எரிச்சல் ஏற்படுகிறது. மேலும் சிலர் டிவியின் உள்ளே போய் பார்ப்பது போல், மிகவும் அருகில் உட்கார்ந்து பார்ப்பர். இதனால் கழுத்து வலி ஏற்படும். ஆகவே அவ்வாறு உட்காராமல், சற்று தொலைவில் உட்கார்ந்து பார்க்க வேண்டும். மேலும் டிவி மிகவும் பிரகாசமாக இருந்தால், அவற்றை கண்களுக்கு இதத்தை தரும் வகையில் சரியாக வைத்து பார்க்க வேண்டும். ஏனெனில் கண்களுக்கு ஏதாவது பிரச்சனைகள் ஏற்பட்டால், அவை தலையையும் நிச்சயம் பாதிக்கும்.

தொலைக்காட்சி திரை

கம்ப்யூட்டரைப் போன்று தான், தொடர்ச்சியாக டிவியை பார்க்கும் போதும் கண்களுக்கு பெரும் எரிச்சல் ஏற்படுகிறது. மேலும் சிலர் டிவியின் உள்ளே போய் பார்ப்பது போல், மிகவும் அருகில் உட்கார்ந்து பார்ப்பர். இதனால் கழுத்து வலி ஏற்படும். ஆகவே அவ்வாறு உட்காராமல், சற்று தொலைவில் உட்கார்ந்து பார்க்க வேண்டும். மேலும் டிவி மிகவும் பிரகாசமாக இருந்தால், அவற்றை கண்களுக்கு இதத்தை தரும் வகையில் சரியாக வைத்து பார்க்க வேண்டும். ஏனெனில் கண்களுக்கு ஏதாவது பிரச்சனைகள் ஏற்பட்டால், அவை தலையையும் நிச்சயம் பாதிக்கும்.

படுக்கையில் படித்தல்


படுக்கும் போது புத்தகத்தைப் படிப்பது என்பது மிகவும் கெட்ட பழக்கம். ஏனெனில் இப்படி படித்தால், கண்கள் மிகவும் கஷ்டப்பட்டு எழுத்துக்களை பார்க்கும். ஆகவே எப்போது படிக்கும் போதும், உட்கார்ந்து படிக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல், வெளிச்சம் குறைவாக உள்ள இடத்தில் உட்கார்ந்து படிப்பதை தவிர்க்க வேண்டும்.

அதிக குளிர்ச்சி

அனைவருக்கும் அளவுக்கு அதிகமாக குளிர்ச்சி உள்ள பானங்களை குடித்தாலோ அல்லது ஐஸ்கட்டிகளை சாப்பிட்டாலோ, தலை சற்று வலிப்பது போல் இருக்கும். ஏனெனில் அவை மூளையை உறைய வைத்துவிடுகிறது. ஆகவே அத்தகைய பொருளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதற்காக குளிர்ச்சியே சாப்பிடக் கூடாது என்பதில்லை. ஓரளவு குளிர்ச்சி உள்ள பொருளை, அளவாக சாப்பிட்டால் நல்லது.

ஆல்கஹால்


ஆல்கஹால் பருகுவதால் கூட தலை வலி உண்டாகும். ஏனெனில் சிலர் ஆல்கஹாலை குளிர்ச்சியாக சாப்பிடுவர். சாதாரணமாக ஆல்கல் சாப்பிட்டாலே, மூளை மிகவும் தளர்ந்து இருக்கும். அதில் குளிர்ச்சியுடன் சாப்பிட்டால், தலை வலி தான் அதிகமாகும். அதிலும் அந்த வலி பருகிய மறுநாள் தான் உண்டாகும். ஆகவே குளிர்ச்சியாக சாப்பிடுவதோடு, அதிகமாக பருகுவதைத் தவிர்ப்பது நல்லது.

சரியான தூக்கம்
தூக்கம் குறைவாக இருந்தாலும், அதிகமான தலை வலி உண்டாகும். ஆகவே ஒருவருக்கு குறைந்தது 6-7 மணிநேர உறக்கம் மிகவும் இன்றியமையாதது. இதனால் மூளை மற்றும் உடல் நன்கு புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

நீண்ட தூர பயணம்
பைக்கில் மிகுந்த வேகத்தில் நீண்ட தூரப்பயணம் செய்வது என்பது மிகவும் அருமையாக இருக்கும். ஆனால் அதையே குளிர் காலத்தில் செய்தால், களி, ஜலதோஷம், போன்றவை ஏற்படும். அதிலும் காலை மற்றும் இரவு நேரங்களில் செல்வது தான் பெரும் பிரச்சனையை உண்டாக்கும். அவ்வாறு பிரச்சனைகள் வரும் போது, நிச்சயம் வராத வலிகள் அனைத்தும் வந்துவிடும். ஆகவே பைக்கில் செல்லும் போது ஹெல்மெட் அல்லது ஏதேனும் துணியைக் கொண்டு, வாய் மற்றும் மூக்கை மறைத்துக் கொண்டு ஓட்ட வேண்டும்.

தமிழ் சினிமாவில் களம் இறங்கும் எம்.ஜி.ஆரின் பேரன்

தமிழ் சினிமாவில் எத்தனை நடிகர்கள் வந்து சென்றாலும் எம்.ஜி.ஆர் எப்போதும் யாராலும் மறக்கமுடியாதவர். ஒரு நடிகர் என்பதை தாண்டி தமிழகத்தில் ஒரு நல்லாட்சியை நடத்தியவர்.

இவரின் வளர்ப்பு மகளான சுதாவின் மகன் ராமச்சந்திரன். இவர் அடுத்து டி.ஆர்.பாஸ்கர் என்பவரின் இயக்கத்தில் கபாலி தோட்டம் என்ற படத்தில் நடிக்கவுள்ளார்.

இவருக்கு இயக்குனர்களான கார்த்திக் சுப்புராஜ், சமுத்திரகனி, பேரரசு ஆகியோர் தங்கள் வாழ்த்துக்களை கூறியுள்ளனர்.

நாங்களும் பிழைக்கணும்… வழி விடுங்க! நடிகர் சங்கத்தின் நியாயமான கோரிக்கை

தென்னிந்திய நடிகர் சங்க துணை தலைவர் பொன்வண்ணன் தலைமையில் செயற்குழு உறுபினர் A.L.உதயா ,நியமன செயற்குழு உறுபினர்கள் லலிதா குமாரி , மனோபாலா ,அஜய் ரத்தினம் ஆகியோர் இன்று தலைமை தேர்தல் ஆணையர் திரு.ராஜேஷ் லங்கோனி அவர்களை தலைமை செயலகத்தில் சந்தித்து மனு ஒன்றை அளித்தனர்.

அதில் கூறியிருப்பதாவது !!

“தென்னிந்திய நடிகர் சங்கத்தின் உறுப்பினர்களில் 1000 க்கும் மேற்பட்டோர் தமிழகமெங்கும் உள்ளனர். அவர்கள் நாடக துறையை சார்ந்தவர்கள். நாடகம் என்பது திருவிழா காலங்களில் மட்டுமே நடத்தப்படும். அதற்கான சூழல் வருடத்தில் ஆறு மாதங்கள் மட்டுமே இருக்கும். அக்காலகட்டத்தில் கிடைக்கும் வருமானத்தில் தான் வருடம் முழுவதும் குடும்பம் நடத்த வேண்டும். நவீன பொழுதுபோக்கு சாதனங்களால் நாடகம் துறை அழிந்து வருகின்ற இந்த காலகட்டத்தில் அதையே நம்பி வாழும் நாடக கலைஞர்கள் மிகுந்த கஷ்டத்தில் வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.

ஆனால் கடந்த பொது தேர்தலில் இருந்து தேர்தல் காலங்களில் நாடகம் நடத்த அனுமதி மறுக்கப்படுவதால் இக்கால கட்டமான மூன்று மாதங்களும் எங்கள் நாடக கலைஞர்கள் வேலைவாய்ப்பை இழக்க நேரிடுகிறது. பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் படிக்கும் அவர்களின் குழந்தைகளுக்கு கல்வி தொகை கட்ட கூட முடியாமல் போகிறது. எனவே இதை தாங்கள் பரிசீலீத்து இந்த காலகட்டத்தில் நாடகம் நடத்துவதற்கு சிறப்ப அனுமதி வழங்கி உதவிடவேண்டும் என்றும் , தற்காக தேர்தல் ஆணையம் விதிக்கும் விதிகளுக்கு கட்டுப்பட்டு அவர்கள் நடப்பார்கள்”. என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது .

தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்த பின், செய்தியாளர்களிடம் துணை தலைவர் .பொன்வண்ணன் கூறியதாவது..

புதிய அணி பொறுப்பேற்றயுடன் , ஏற்கனவே நாடக நடிகர்கள் வைத்த கோரிக்கையை மிக முக்கியமான பிரச்சனையாக எடுத்துக்கொண்டு , கடந்தமுறை தமிழக முதல்வர் அம்மா அவர்களை சந்தித்தபோது இதை அவர்களிடம் ஒரு கோரிக்கையாகவே முன் வைத்தோம் .அப்போது நாடக நடிகர்களுக்கு எங்கள் அரசாங்கம் எப்போதும் முழு ஒத்துழைப்பு தந்து கொண்டிருக்கிறது.தேர்தல் காலகட்டத்தில் நாடக நடிகர்களுக்கு இப்படி ஒரு பிரச்சனை உள்ளதென்றால் அதை கோரிக்கையாக தேர்தல் அதிகாரியை சந்தித்து விண்ணப்பம் கொடுங்கள் என்று அம்மா அவர்கள் ஒரு வழிகாட்டுதலை சொன்னார்கள் .

அதன் அடிப்படையில் இன்று தேர்தல் அதிகாரி திரு.ராஜேஷ் லங்கோனி.IAS அவர்களை தலைமை செயலகத்தில் சந்தித்து மனுவை கொடுத்தோம் , அதற்க்கு தேர்தல் அதிகாரி அவர்கள் ,தேர்தல் காலங்களில் சுதந்திரமாக மக்கள் செயல்படுவதற்க்கு சட்டப்படி எந்த தடையுமில்லை. நான் இது பற்றி விசாரித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறைக்கு தகவல் தெரிவிப்பதாக உறுதி அளித்துள்ளார் . மேலும் முறைப்படி அவர்கள் முழு சுதந்திரமாக நாடகம் நடத்த வழிமுறை செய்கிறேன் என்று உத்திரவாதம் கொடுத்துள்ளார்.

எங்களுக்கு அது மிக சந்தோசமாக உள்ளது .அந்த காலக்கட்டத்தில் எங்களது நாடக நடிகர்கள் கட்சி ரீதியாகவோ அல்லது அரசியல் ரீதியாகவோ நாடகங்கள் போடாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது எங்கள் கடமை . அதற்க்கு நாங்கள் முழுமையாக ஒத்துழைக்க நாடக கலைஞர்களிடம் அறிவுறுத்துவோம். அத்தோடு தேர்தல் அதிகாரி எங்களிடம் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.தேர்தலில் மக்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்து அனைவரும் வாக்களிப்பதற்கான விழிப்புணர்ச்சியை ஏற்ப்படுத்தும் வகையில் நடிகர்களின் வீடியோ பதிவை செய்து தருமாறு கேட்டுக்கொண்டுள்ளனர் . இது போன்ற பொது மக்களினுடைய பணியில் எங்களுடைய உழைப்பும் பங்களிப்பும் இருப்பதை நாங்கள் பெருமையாக நினைக்கிறோம். இந்த விழிப்புணர்ச்சியை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்போம் என்று உத்திரவாதம் கொடுத்துள்ளோம். என்று கூறினார்..

வானத்தைபோல விஜயகாந்த் ஆனார் சிம்பு? ஆஹா இதுவல்லவோ நட்பு!

‘தலைக்கு மேல போயாச்சு. இதில் சாண் என்ன முழம் என்ன?’ என்ற சிந்தனை வந்தாலொழிய இப்படியொரு காரியத்தை செய்திருக்க முடியாது. நேற்று கோவை காவல் நிலையத்தில் நேரில் ஆஜரான சிம்பு, அங்கு நடத்திய போலீஸ் விசாரணையை தைரியமாக எதிர் கொண்டார். அப்போது கேட்கப்பட்ட முப்பத்தைந்து கேள்விகளுக்கும் சளைக்காமல் பதில் சொன்னாராம் அவர். அங்குதான் அனிருத் பற்றியும் கேள்வி கேட்கப்பட்டது. அதிருக்கட்டும்…

அதென்ன வானத்தை போல விஜயகாந்த்? சிம்புவுக்கும் அவருக்கும் என்ன சம்பந்தம்?

அந்த படத்தில் தம்பிகளை ஒண்டியாளாக நின்று வளர்ப்பார் அண்ணன் விஜயகாந்த். அப்போது மழை வந்து வீடு ஓழுகும். தம்பிகள் உறங்க வேண்டுமே என்று ஒரு பெரிய குடையை அவர்களின் தலைக்கு நேராக பிடித்துக் கொண்டு விடிய விடிய உறங்காமல் நின்று கொண்டிருப்பார் கேப்டன். ஜனங்களை தாரை தாரையாக அழ வைத்த பாசக்கார காட்சி அது.

கிட்டதட்ட அப்படியொரு காட்சியை நினைத்துப்பாருங்கள். குடையை பிடித்துக் கொண்டிருப்பவர் சிம்பு. குடைக்கு கீழே நிம்மதியாக உறங்குபவர்தான் அனிருத். இப்படியொரு சென்ட்டிமென்ட் பேக்கேஜில் அனிருத்தை காப்பாற்றியிருக்கிறார் சிம்பு. “இந்த பீப் பாடலுக்கும் அனிருத்துக்கும் சம்பந்தம் இல்லை. இந்த பாடலை பாடியது நான்தான். என்னுடன் அப்போது இருந்தவர்கள் இன்னார்தான் ” என்று சிலரது பெயரையும் அதிகாரிகளிடம் குறிப்பிட்டு விட்டு வந்திருக்கிறார். என்ன காரணத்திற்காகவோ அவர் அனிருத்தை காப்பாற்றியிருக்கிறார் என்றே வைத்துக் கொள்வோம். இக்கட்டான நேரத்தில் நண்பனையும் போட்டுக் கொடுக்காத அவரது நல்ல புத்திக்காக ஒரு வெல்கம்!

முன்னேயே சொல்லியிருக்க வேண்டிய முன் குறிப்பு, ஆனால் பின் குறிப்பாக- முதலில் இந்த பாடலுக்கு இசையமைத்தவர் அனிருத் என்று சிம்புவின் அப்பா டி.ராஜேந்தர் கூறியிருந்ததை இங்கே கருத்தில் கொள்ளவும்!

கொஞ்சம் கூட பொறுப்பே இல்லை….!! அவசியம் படிக்க வேண்டும்!!

ஒரு நாய் கடைக்கு வந்துச்சு..
கடைக்காரர் விரட்டி விட்டார்.. திரும்ப
 திரும்ப அந்த நாய் கடைக்கு வந்துச்சு…

என்னடா பெரிய தொல்லையா போச்சுன்னு வெளிய
 வந்து பார்த்தா அந்த நாய் வாயில
 ஒரு சீட்டும் பணமும் இருந்துச்சு…

கடைக்காரர் ஆச்சர்யமாகி அந்த
 சீட்டை எடுத்து அதில் உள்ள
 சாமான்களை போட்டு, மீதி பணத்தையும்
 அதே பையில் நாய் கழுத்தில்
 மாட்டிவிட்டார். ..

நாய் திரும்பி நடக்க
 ஆரம்பிச்சுது..

. கடைக்காரர் சுவாரசியமாகி நாய்
 பின்னாலே நடக்க ஆரம்பித்தார்..

அந்த நாய் தெருவை கடந்து மெயின்
 ரோட்டிற்கு வந்தது.. அப்போது ரெட் சிக்னல்..

அந்த நாய் ரோட்’டை கடக்காமல் நின்றது…

பச்சை லைட் விழுந்தவுடன் ரோட்டை கடந்தது…

கடைக்காரருக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை…

அது பின்னாலே அதன் வீடு செல்ல
 முடிவெடுத்தார். ..
அந்த நாய் ஒரு பேருந்து நிறுத்தத்தில்
 நின்றது..

ஒரு குறுப்பிட்ட பேருந்து வந்தவுடன் நாய்
 பேருந்தில் ஏறியது..

கண்டக்டரும் நாய் வாயில் இருந்த
 பணத்தை எடுத்துக்கொண்டு ஒரு டிக்கெட்
 கொடுத்தார்..

இரண்டு நிறுத்தங்கள் கடந்து நாய்
 பேருந்தில் இருந்து இறங்கியது…

கடைகாரரும் அதன் பின்னால் இறங்கினார்…

நாய் ஒரு தெருவை கடந்து ஒரு வீட்டின் முன்
 நின்று கதவை தட்டியது…

கதவு திறந்து ஒரு ஆள் வந்தார்…

நாயின் கழுத்தில் உள்ள
 பையை கழட்டி விட்டு நாயை அடித்தார்….
கடைக்காரர் ஓடி சென்று : நிறுத்துங்க?? ஏன்
 அடிக்கறீங்க??

அது எவ்வளவு பொறுப்பா கடைக்கு போயிட்டு,
சிக்னல் மதிச்சு, பஸ்ல டிக்கெட்
 எடுத்துகிட்டு வருது அதை போய்
 அடிக்கறீங்களே …???

அதுக்கு அந்த ஆள் சொன்னார் வீடு சாவிய
 எடுத்துட்டு போகாம வந்து கதவ
 தட்டுது பாருங்க..

நாய்க்கு கொஞ்சம் கூட
 பொறுப்பே இல்லன்னு….

# # # #
நீதி : நமக்கு மேல உள்ள முதலாளிங்க மேனேஜர் எல்லாரும் இப்படி தான்.. நீ எவ்வளவு தான்
 பொறுப்பா இருந்தாலும் உனக்கு நல்ல
 பெயரே கிடைக்காது.

ரஜினி, மோகன்லாலுக்காக வெளிநாட்டு டூப் நடிகர்கள் வருகை

ஆக்‌ஷன் ஹீரோக்கள் ஸ்டன்ட் காட்சியில் நடிக்கும்போது பெரும்பாலும் தாங்களே அக்காட்சியில் நடிக்க எண்ணுகிறார்கள். ரிஸ்க் நிறைந்த காட்சிகளில் ஹீரோக்களுக்கு பதில் டூப் நடிகர்கள் பயன்படுத்தப்படுகின்றனர். அந்த காலம் முதல் இன்றுவரை இந்த பாணி தொடர்கிறது. மலையாளத்தில் மோகன்லால் நடிக்கும் புதுபடம் ‘புலி முருகன்’. இவரது படப்பிடிப்பில் 2 வெள்ளைக்கார நடிகர்கள் சுற்றி வருகின்றனர். இருவரும் மோகன்லாலின் ரசிகர்கள் அவரை காண வந்திருப்பதாக யூனிட்டில் உள்ளவர்கள் சொல்கின்றனர்.

வெளிநாட்டு ரசிகர்களின் புகைப்படத்தை பார்த்த சில நெட்டீஸன்கள் விவாதத்தை தொடங்கி விட்டனர். பிரான்ஸ் நாட்டை சேர்ந்த யன்னிக் பென், டிஜிபிரில் நிவிக் என்ற இரண்டு ஸ்டன்ட் நடிகர்கள்தான் இருவரும். ‘ரேஸ் 2’ உள்ளிட்ட பல இந்தி படங்களில் ஹீரோக்களுக்கு ஸ்டன்ட் காட்சிகளில் டூப் போட்டு நடித்துள்ளனர். இவர்கள் இருவரும் தமிழிலும் ‘மாற்றான்’, ‘புலி’ படங்களில் டூப் போட்டு நடித்துள்ளனர். மோகன்லால் நடிக்கும் படத்தில் அவருக்கு டூப் போடுவதற்காகவே இந்த இருவரும் வந்திருக்கின்றனர் என இணைய தளத்தில் விவாதித்து வருகின்றனர். மோகன்லால் அணிந்திருக்கும் அதே காஸ்டியூம் டூப் நடிகர்களில் ஒருவருக்கு தரப்பட்டிருக்கிறதாம். ரஜினி நடிக்கும் ‘2.0’ படத்துக்கும் ரிஸ்க்கான காட்சிகளில் நடிக்க டூப் நடிகர்கள் வரவழைக்கப்பட்டிருக்கிறார்களாம். 

கத்தி கதை உண்மையானது- இளைய தளபதி ஸ்டைலில் கலக்கிய கிராம மக்கள்

இளைய தளபதி விஜய் திரைப்பயணத்தில் மாபெரும் வெற்றிபடங்களில் ஒன்று கத்தி. இப்படம் வசூல் மட்டுமின்றி விமர்சனங்கள் வாயிலாகவும் பெரிய வரவேற்பு பெற்றது.

இப்படத்தில் கிராம மக்களின் வலியை நகர மக்கள் அறிய வேண்டும் என, விஜய் குடிநீர் செல்லும் குழாயில் உட்கார்ந்து போராட்டம் செய்வார்.

இந்த காட்சியை யாரும் எளிதில் மறந்திருக்க முடியாது, தற்போது இதே ஸ்டைலில் ஹரியாவனவில் உள்ள ஓர் இனத்தை சார்ந்த மக்கள் தங்களுக்கு இட ஒதுக்கீடு கேட்டு நீண்ட நாட்களாக அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

யாரும் கண்டுக்கொள்ளாததால், ஹரியானாவிலிருந்து டெல்லி செல்லும் குடிநீர் குழாயை அடைத்தனர். இதனால், டெல்லியில் சில குடுநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தற்போது உடனே அரசாங்கம் அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தவுள்ளதாம். எது எப்படியோ முருகதாஸ் படத்தில் சொன்னது நிஜத்தில் நடந்த விட்டது.

விஜயகாந்த் மாநாடு... ராமராஜன் கண்டுபிடித்த ரகசியம்!

மக்களுடன் கூட்டணி, தெய்வத்துடன் கூட்டணி எனக்கூறிய விஜயகாந்த், தற்போது மாநாடு நடத்துவது கூட்டம் காட்டி பேரம் பேசுவதற்காக மட்டுமே என்று நடிகரும், அதிமுக தலைமைக்கழக பேச்சாளருமான ராமராஜன் பகீர் குற்றம்சாட்டியுள்ளார்.


திண்டுக்கல் அருகே கன்னிவாடியில் நடைபெற்ற அதிமுக  கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ராமராஜன், " அதிமுக அரசு மட்டுமே எந்த நேரத்திலும் மக்களை சந்திக்கக் கூடியது. பிற கட்சியினர், தேர்தல் நேரத்தில் சினிமா காமெடி போல, நாங்களும் அரசியல் கட்சிகள்தான் என பறைசாற்றிக் கொள்கின்றனர்.

மக்களுடன் கூட்டணி, தெய்வத்துடன் கூட்டணி எனக்கூறிய விஜயகாந்த் தற்போது மாநாடு நடத்துவது கூட்டம் காட்டி பேரம் பேசுவதற்காக மட்டுமே. சினிமாவில் இதுவரை மூன்றரை லட்சம் பேரை சுட்டுக்கொன்று, இளைய சமுதாயத்திடம் தீவிரவாத கலாசாரத்தை ஏற்படுத்தியவர் அவர். இந்தி பேசும் வடமாநிலத்தவரின் தமிழைக் கூட புரிந்து கொள்ள முடியும். ஆனால் விஜயகாந்தின் பேச்சில் தெளிவு இருக்காது.

மக்களிடம் கட்சியை ஞாபகப் படுத்துவற்காகவே, ஸ்டாலின் நமக்கு நாமே 'டூர்' சென்றார். சொந்த சகோதரரை அனுசரிக்க முடியாத ஸ்டாலின், எப்படி நாட்டு மக்களையும், கட்சி தொண்டர்களையும் அனுசரித்து செல்ல முடியும்? அழகிரி கூறியதைப்போன்று, அவர் ‘காமெடி பீஸ்'தான். கருணாநிதியைப் போன்று பட்டிமன்றம், கலை நிகழ்ச்சி போன்றவற்றில், ஜெயலலிதா நேரத்தை வீணடிப்பவர் அல்ல" என்று காரசாரமாக பொளந்து கட்டினார்.

ஹோட்டல்ல சாப்பிடுற பழக்கமா ? முதல்ல இதைப் படிங்க ....

 நம்ம ஊர் ஹோட்டல்களில் எப்படி எல்லாம் டுபாக்கூர் வேலை நடக்குது என்று அந்தக் கடைக்காரர்களிடமே போட்டு வாங்கிய தகவல்கள்..

.
இட்லி: பொதுவா இட்லி மெத்துனு இருக்கணும்னா, ஒரு டம்ளர் இட்லி அரிசிக்கு கால் டம்ளர் உளுந்து தேவை. இரண்டையும் தனித்தனியா ஊறவெச்சு, தனித்தனியாதான் அரைக்கணும். அஞ்சு மணி நேரம் புளிக்கவெச்சு, சுட்டீங்கன்னா பஞ்சு மாதிரி இட்லி தயார். ஆனா, என்ன நடக்குது இங்க? கடை இட்லி அரிசி கால் பங்கு, ரேசன் அரிசி முக்கால் பங்கு, உளுந்து கால் பங்கு, ஜவ்வரிசி முக்கால் பங்கு, நைட்டு ஊறவெச்ச பழைய சாதம் கொஞ்சம், சோடா உப்பு எக்கச்சக்கமா... எல்லாத்தையும் அரைச்சு, மூணு மணி நேரம் வெயில்ல வெச்சுட்டு எடுத்து சுட்டால், கும்முன்னு குஷ்பு இட்லி தயார். அந்த இட்லியும் மீந்துருச்சின்னா, அப்பவும் பிரச்னை இல்லை. அடுத்த நாள் அரைக்கிற மாவுல மீந்துபோன இட்லியைப் போட்டு அரைச்சிடுவாங்க!


சோறு: தரமான சோறுன்னா, சோத்துப் பருக்கையை விரலில் வெச்சு மசிச்சா மை மாதிரி மசியணும். அப்பதான் அது வயித்துக்கு ஒண்ணும் செய்யாது. அப்படி இருந்தா கஸ்டமர்ஸ் நிறைய சாப்பிடுவாங்களே... அதுக்காகத்தான் பெரும்பாலான ஹோட்டல்ல முக்காப் பதத்துல சாதத்தை எடுத்துடுவாங்க. சாதம் பளிச்சுனு வெண்மையா இருக்கவும், லேட் ஆனாலும் காய்ஞ்சு போகாமல் இருக்கவும் சாதம் வேகும்போதே சுண்ணாம்புக் கல்லைத் துணியில் கட்டி சாதத்தில் போட்டுடுவாங்க. அன்லிமிட்டட்னு அகலமா போர்டுல எழுதி இருந்தாலும், இந்தச் சோற்றைக் குறிப்பிட்ட அளவுக்கு மேல நீங்க சாப்பிடவே முடியாது!


புரோட்டா: பல ரோட்டுக் கடை ஹோட்டல்கள்ல மைதா மாவோட சோடா உப்பு கலந்து, அதுல கழிவு டால்டாவை ஒரு பங்கு மாவுக்குக் கால் பங்கு டால்டா கணக்குல (ஹோட்டலுக்குன்னே விக்கிற மலிவு விலை டால்டா!) கலந்து அடிச்சு அரை மணி நேரத்துல புரோட்டா சுடுவாங்க. புரோட்டா சும்மா பூ கணக்கா பொலபொலன்னு உதிரும். ஆனா, அத்தனையும் போங்கு புரோட்டா!


சால்னா : சிக்கன் கடையில் பொதுவா நாம கொழுப்பு, ஈரல், குடல், தலை, தோல், இதெல்லாம் வாங்க மாட்டோம். அதேபோல மட்டன் கடையில குடலோட சேர்ந்து இருக்கிற ஒட்டுக்கொழுப்பு, ஒட்டுக்குடல் வாங்க மாட்டோம். இதை எல்லாம் தூக்கிப்போடாம ஓரமாக் குவிச்சுவெச்சிருப்பாங்க. பழக்கமான கடைக்காரரா இருந்தா விசாரிச்சுப் பாருங்க. 'ஹோட்டல்காரங்க மொத்தமா வாங்கிட்டுப் போயிடுவாங்க’னு அவரும் யதார்த்தமா சொல்லிடுவார். அரைக் கிலோ கறியோட இதை எல்லாத்தையும் ஒட்டு மொத்தமாப் போட்டு தூக்கலா கறி மசாலா, மிளகாய்த் தூள், கொத்தமல்லித்தூள், கொஞ்சம் மரத்தூள் அல்லது குதிரை சாணத்தூள் கலந்து, அஞ்சு ஸ்பூன் அஜினாமோட்டா கலந்து கொதிக்கவெச்சா அரை அண்டா நிறைய திக்கான சால்னா ரெடி!


ஒரு முக்கியமான எச்சரிக்கைங்க... தலையே போனாலும் சரி, (ரோட்டுக்)கடைகள்ல தலைக்கறி மட்டும் சாப்பிடாதீங்க. பொதுவாகவே செம்மறி ஆட்டோட தலையில புழுக்கள் இருக்கும். இது இயற்கையான விஷயம்தான். வீடுகளுக்கு வாங்குறப்ப பெரும்பாலும் வெள்ளாட்டுத் தலை தான் வாங்குவோம். செம்மறி ஆட்டுத் தலை வாங்கினாலும் கடைக்காரரு நம்ம கண்ணுல படாம தலையைக் கொதிக்கிற தண்ணில போட்டுட்டு, அப்புறம் அதை எடுத்து தரையில தட்டோ தட்டுன்னு தட்டி புழுவை எல்லாத்தையும் கொட்டிட்டுதான் மேலேயே எடுத்து வைப்பாங்க. அதை வீட்டுக்கு வாங்கிட்டுப்போய் நல்லா சுத்தம் பண்ணி சாப்பிடுவோம். ஆனா, மொத்தமா ஹோட்டலுக்கு விக்கிறப்ப எல்லாம் செம்மறி ஆட்டுத் தலையை இப்படி சுத்தம் பண்ண மாட்டாங்க. அப்படியே கைமாதான்.


எல்லாத்தையும்விட முக்கியம், ஹோட்டல்களுக்கு சப்ளை செய்யறதுக்குனே பஜாரில் மளிகைப் பொருட்கள் குறைஞ்ச விலைக்கு கிடைக்குது. எல்லாமே கலப் படம். பாலீஷ் செய்யப்பட்ட இலவச ரேசன் அரிசியோட பொன்னி அரிசி கலந்து விக்கிறாங்க. உடைஞ்ச கழிவுப் பருப்பு, கேசரிப் பருப்பைத் துவரம் பருப்புடன் கலக்கிறாங்க. மிளகாய்த் தூள், கொத்தமல்லித் தூள், டீத்தூளோட மரத் தூள், குதிரை சாணத்தையும் கலக் கிறது எல்லாம் சகஜமப்பா. நெய், எண்ணெய் வகைகளோட பன்றி, மாட்டுக் கொழுப்பு, வனஸ்பதி மற்றும் நாள்பட்ட கழிவு எண்ணெயையும் கலப்பாங்க.



சாதாரண ஹோட்டல் களிலும் கையேந்தி பவன் களிலேயுமே இப்படின்னா டாஸ்மாக் பார் பத்திச் சொல்லவே வேணாம். அதிலும் குறிப்பா, சென்னை பேச்சுலர் பாய்ஸ் ரொம்பக் கவனமா இருக்கணும்.

Monday 22 February 2016

ஒரு இசைக்கலைஞனின் தலைமுடி விலை ரூ. 24 லட்சம்!

'தங்களது இசையால் உலகத்தையே கட்டிப் போட்டவர்கள்' என்ற வார்த்தை இன்று பழங்கதையாகி இருக்கலாம். ஆனால், இந்த வார்த்தைகள் முதல் முதலாக பீட்டில்ஸ் இசைக் குழுவுக்காக எழுதப்பட்டதாகத்தான் இருக்கும். அந்தளவுக்கு ரசிகர்களை அவர்களுடைய காலத்திலும் சரி, இன்றும் சரி,  ஆச்சர்யமடைய வைப்பவர்கள். இந்தக் குழுவினர் பயன்படுத்திய கிட்டார், ட்ரம்ஸ் என்று பல பொருட்களை இன்றும் பல கோடிகளில் ஏலம் எடுப்பவர்கள் இருக்கிறார்கள். அப்படி சமீபத்தில் பீட்டில்ஸ் குழுவோடு சம்பந்தப்பட்ட ஒரு பொருள் பெரும் தொகைக்கு ஏலத்துக்குப் போய் இருக்கிறது.

பீட்டில்ஸ் இசைக்குழு,  இசையில் மட்டுமல்லாமல் எல்லாவிதமான கேளிக்கை ஆட்டங்களிலும் செமை ரகளை புரிந்தவர்கள். இன்று 'யோ யோ பாய்ஸ்' ஆட்காட்டி விரலையும் சுண்டு விரலையும் நீட்டிக்கொண்டு, மற்ற விரல்களை மடித்துக்கொண்டு போஸ் கொடுப்பார்களே... அதையும் முதலில் செய்தவர்கள் இவர்கள்தான். இன்றைய ராக் ஸ்டார் வரை எல்லோரும் முடியை நீட்டாக வளர்த்து நம்ம டிஆரைப் போல தலையை சிலுப்பிக் கொண்டு இருக்கிறார்களே... அதேப்போல அந்தக் காலத்தில் முடிவளர்த்து ஆட்டம் போட்டவர்கள் பீட்டில்ஸ் குழுவினர்.

'சண்டை எல்லாம் வேணாம் வாங்க காதல் பண்ணுவோம்'னு ரகளை செய்த பீட்டில்ஸ் குழுவை ஆரம்பித்தவர்களுள் ஒருவரான ஜான் லென்னானும்,  அது போல நீண்ட முடியும் தாடியுமாகத் திரிந்தவர்தான்.

“எல்லாம் சரி. ஆனா, இவங்க தலைமுடியை வெட்ட மறந்துட்டாங்களோ?” என்று ஒரு முறை அப்போதைய அமெரிக்க அதிபர் லிண்டன் ஜான்சன், இங்கிலாந்து பிரதமர் சர் அலெக் டக்ளஸை (Sir Alec Douglas) பார்த்து கேட்டார்.

அவர் அப்படி சொன்னதற்காக இல்லாமல், 1966-ம் ஆண்டு ஒரு திரைப்படத்தில் நடிப்பதற்காக அவரது முடியில் பத்து சென்டி மீட்டரை வெட்டி இருக்கிறார் ஜெர்மன் முடி திருத்துபவர் க்ளாஸ் ப்ராக். வெட்டிய பிறகு அந்த முடியை அவர் பத்திரப்படுத்தி இருக்கிறார். அப்போது வெட்டப்பட்ட அந்த முடியை இப்போது ஏலத்துக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள். பத்து சென்டிமீட்டர் நீளமுடைய இந்த முடிகளை நம்மூர் மதிப்பில் 24 லட்ச ரூபாய்க்கு ஏலம் எடுத்திருக்கிறார், பீட்டில்ஸ் பயன்படுத்தியப் பொருட்களைச் சேகரிக்கும் பால் ஃப்ரேஸர் என்பவர்.

எதிர்பார்த்த தொகையை விட மூன்று மடங்குத் தொகைக்கு ஏலம் போயிருக்கிறது. இவ்வளவு தொகைக்கு முடி ஏலம் போவது பெரிய சாதனைதான். "இந்த அளவு தொகைக்கு அந்த முடி ஏலம் போனதற்கான காரணம், அது ஜான் லென்னானுடைய வாழ்க்கையின் முக்கிய காலக்கட்டத்தோடு தொடர்புடையது” என்பதால்தான் என்று ஹெரிட்டேஜ் ஆக்சன்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த கேரி ஷ்ரம் தெரிவித்திருக்கிறார்.

நம்ம ஏ.ஆர். ரஹ்மான் கூந்தலை வெட்டினப்போ யாரும் எடுத்து வச்சிருக்கீங்களா மக்களே...?!