Saturday 23 January 2016

60 செகண்டுகளில் ஹார்ட் அட்டாக் ஏற்பட்டவர்களை காப்பாற்றும் வீட்டு மருந்து....!!

60 செகண்டுகளில் ஹார்ட் அட்டாக் ஏற்பட்டவர்களை காப்பாற்றும் வீட்டு மருந்து....!!


இயற்கை மருத்துவர் ஜான் கிறிஸ்டோபரின் 35 வருடங்கள் மருத்துவ சேவையில், ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு பாதிக்கபட்டவர்கள் இந்த எளிய மருத்துவத்தால் ஒருநபர் கூட இறந்ததில்லை என்று சொல்கிறார். ஆனால் பாதிக்கப்பட்டவரின் மூச்சு நின்று விடாமல் இருக்க வேண்டும். இவருடைய மிளகாய் பொடி தேநீர் 60 செகண்டுகளில் பழைய நிலைக்கு திரும்ப கொண்டு வந்து, சில நிமிடங்களில் பாதிக்கப்பட்டவர்கள் நடமாட தொடங்கி விடுவார்கள் என்கிறார். அதனால் வீட்டில்மிளகாய் பொடி தயாராக வைத்திருக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறார்.


எவ்வாறு செய்வது:


ஒரு டீஸ்பூன் மிளகாய்பொடியை மிதமான சுடு தண்ணீரில் நன்றாக கலக்கி குடிக்க வைக்க வேண்டும்.


பாதிக்கப்பட்டவர் நினைவுடன் இருந்தால் சிறிதளவு பொடியை விரல்களில் எடுத்து நாக்கின் அடியில் வைக்க வேண்டும். இது ஒரு முதலுதவி மருந்து போன்றது.


 மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு செல்லவேண்டும். மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இறந்துவிடாமல் உதவும். இவ்வாறு செய்வதால் அவர்களை காப்பாற்றுவது உறுதி என்கிறார். எவ்வாறு வேலை செய்கிறது:


காரமான மிளகாய் பொடியில் 90,000 கார யூனிட் (H.U. heat unit) இருப்பதாகவும், இதுவே ஹாரட் அட்டாக் ஏற்பட்டவரை திரும்பவும பழை நிலைக்கு கொண்டு வருவதாக கூறுகிறார்.

கமல்ஹாசனின் புதிய கெட்-அப்

கமல்ஹாசன் அடுத்து தமிழ், தெலுங்கில் உருவாக உள்ள அப்பா அம்மா ஆட்டம் என்ற படத்தில் நடிக்கப் போகிறார். இந்தப் படத்தை கமல்ஹாசன் மலையாளத்தில் நடித்த சாணக்யா என்ற படத்தை இயக்கிய ராஜீவ்குமார் இயக்கப் போகிறார். கமல்ஹாசன் ஜோடியாக முன்னாள் ஹீரோயின் அமலா நடிக்க உள்ளார். இந்தப் படம் கமல்ஹாசனின் வழக்கமான பாணியிலிருந்து முற்றிலும் விலகி நகைச்சுவை கலந்த ஒரு படமாக உருவாக உள்ளது என்று தெரிகிறது.

இந்தப் படத்திற்காக கமல்ஹாசன் தன்னுடைய தோற்றத்தை மாற்றியுள்ளார். வித்தியாசமான ஹேர்ஸ்டைலுடன், மீசையில்லாமல் பார்ப்பதற்கு மைக்கேல் மதன காமராஜன் படத்தின் காமேஸ்வரை ஞாபகப்படுத்துவது போல அந்தத் தோற்றம் உள்ளது. படத்திற்குப் படம் தன்னுடைய தோற்றத்தை மாற்றிக் கொண்டு நடிக்கும் கமல்ஹாசன் புதிய படத்திற்காக மாற்றிக் கொண்டுள்ள தோற்றம் அவருடைய ரசிகர்களைக் கவரும் விதத்தில் உள்ளது.

படப்பிடிப்புக்கு முன் இந்தத் தோற்றம் மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏனென்றால் மாற்றங்களின் மொத்த உருவம் கமல்ஹாசன்தானே.

தேவாவை ஓடவிட்ட வாலி, வைரமுத்து!

ஆர்மோனிய பொட்டியில் நாலு கட்டையை உருவிட்டு ‘இந்தாங்க…’ என்று கொடுத்தால் கூட அதிலும் அசத்தலாக ஒரு ட்யூன் போட்டுக் கொடுப்பார் தேவா. யாழினிது, குழலினிது, தேனினிது, தேவா இனிது என்று வரிசைப்படுத்துகிற அளவுக்கு நல்ல மனுஷர். ‘கொடுக்கறதை வாங்கிக்குங்க’ என்று வற்புறுத்துகிற இசையமைப்பாளர்கள் மத்தியில், ‘கேளுங்க கொடுக்கிறேன்’ என்கிற தாராள மனசு அவருக்கு. ‘இந்த பாட்டை அந்த பாட்டுல மிக்ஸ் பண்ணி, அந்த சந்தத்தை இந்த சந்தத்துல கலந்து கொடுத்தா நல்லாயிருக்குமா?’ என்று சங்கதீம் தெரியாத தற்குறி கேட்டாலும், ‘அதுக்கென்ன ட்ரை பண்ணுவோமே?’ என்பார் மெர்க்குரி பல்பு போல முகத்தை வைத்துக் கொண்டு.

அதற்காக கலைவாணியை கள்ளத்தோணியில் சென்று சந்தித்தவரல்ல அவர். இசைஞானி இளையராஜாவின் ட்யூன் எது, தேவாவின் ட்யூன் எது என்கிற திகைப்பை ரசிகனுக்கு ஏற்படுத்தி, பல முறை தன் ட்யூனை முணுமுணுக்க வைக்கிற அளவுக்கு தேர்ந்த இசைத்தோணிதான் அவர். அதனால்தான் ரஜினி, கமல், அஜீத், விஜய் என்று அவரால் டாப் நட்சத்திரங்களை தன் வெள்ளை ஜிப்பா பைக்குள் போட்டுக் கொண்டு நடக்க முடிந்தது. வளைஞ்சு கொடுக்கறதெல்லாம் ரப்பர்னா, தேவாவும் ரப்பர்தான். தழைஞ்சு கொடுப்பதெல்லாம் நாணல் என்றால் தேவாவும் நாணல்தான். அசைஞ்சு கொடுப்பதெல்லாம் காற்று என்றால் தேவாவும் காற்றுதான். அவரிடம் பேசிக் கொண்டிருந்தால், முப்பத்திரண்டு பற்களில் முப்பதுக்கு ‘சுளுக்கு’ நிச்சயம். முப்பது வருஷ சோகத்தையும் முப்பது நிமிஷங்களில் கரைத்துவிடுகிற அற்புத மூலிகை அவரது ஹாஸ்யம்.

சினிமா ஓடுகிறதோ, இல்லையோ? கலெக்ஷ்ன் ஆகிறதோ, இல்லையோ? படம் எடுத்தவருக்கு துட்டு தேறியதோ, இல்லையோ? ஆனால் சம்பந்தப்பட்ட படங்களுக்கும் படத்தில் நடித்தவர்களுக்கும் ஜனவரி ஒண்ணாந்தேதி அன்று ஒரு சடங்கு இருக்கும். அந்த பைன் ஆர்ட்ஸ். இந்த பைன் ஆர்ட்ஸ். அந்த நிறுவனம் இந்த நிறுவனம் என்று சுமார் ஒரு டசன் அமைப்புகள் போட்டி போட்டுக் கொண்டு விருதுகள் கொடுப்பார்கள். மொத்தமா போட்டாக் கூட நாலு பேரீச்சம் பழத்துக்கு உதவாத அந்த விருதுகளை வழங்க, இன்விடேஷன் என்ன? மாலைகள் என்ன? சால்வைகள் என்ன? என்ட்ரி பாஸ் என்ன? என்று அமர்க்களப்படுத்துவார்கள். அதுபோன்ற நேரங்களில் ‘தேவா எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்’ என்று அள்ளிக் கொண்டு போக ஒரு குரூப் தயாராக இருக்கும். ‘பழகுனவங்க கூப்பிடுறாங்க. போகலேன்னா மனசு கஷ்டப்படுவாங்க’ என்பதற்காகவே இஷ்டப்பட்டு கிளம்புவார் தேவாவும்.

அப்படி போன இடத்தில்தான் சமுதாயத்தில் பெரிய அந்தஸ்திலிருக்கும் ஒருவர் தேவாவின் மனசை இன்னும் நோகடித்து அனுப்பினார். சோசியத்துல அனுகூல சத்ரு என்றொரு பதம் உண்டு. ‘சொந்த வீட்ல இருக்காரு. ஆனாலும் வீட்டை சேதப்படுத்தாம போக மாட்டாரு’ என்பார்கள் சில கிரகங்களை. அப்படியொரு கிரகம் தேவாவையும் பிடித்து ஆட்டியது ஒரு விழாவில்.

இதுபோன்ற மேதைகளும் அறிஞர்களும் கலந்துக்கிற விழான்னா ஆர்வமா போவார் தேவா. அவங்க அனுபவத்தை அங்க சொல்வாங்க. அதுல ஏதாவது ஒரு விஷயம் நமக்கு உந்துதலா இருக்கும்ல. அதுக்காகதான் நான் மறுக்காம போற வழக்கத்தை வச்சுருக்கேன் என்பார்.

ஒருமுறை அப்படி போனப்பதான், ஒரு அறிஞர் தேவாவை புகழ்ந்து பேச எழுந்தார். ‘தேவா இருக்காரே… அற்புதமான மியூசிக் டைரக்டர். அவர் பாட்டெல்லாம் இளைஞர்கள் மத்தியில் தேசிய கீதம். ஒரு படத்துல அவர் ஒரு பாட்டு போட்ருப்பாரு பாருங்க. அடடா…’ன்னு சொல்லிட்டு பாடவே ஆரம்பித்துவிட்டார். அவரு தொண்டையை செருமிகிட்டு பாட ஆரம்பிக்கும்போதே என்ன பாட்டா இருக்கும்னு ஆர்வமா காதை தீட்டிகிட்டு கேட்க தயாராகிவிட்டார் தேவா. அந்த கொடுமைய ஏன் கேட்கிறீங்க? இசைஞானி இளையராஜா இசையமைச்ச சூப்பர் ஹிட் பாட்டான ‘என்னை தாலாட்ட வருவாளா’ன்னு பாட ஆரம்பிச்சுட்டாரு. ஜனங்களும் புரியாம பயங்கரமா கை தட்டுறாங்க. தேவாவுக்கு கை காலலெல்லாம் உதற ஆரம்பிச்சுருச்சு’.

உடனே ‘அது நான் இசையமைச்ச பாட்டு இல்லே’ன்னு சொல்ல நினைச்சு எழுந்துவிட்டார். அவரு விட்டால்தானே? ‘சார்… உட்காருங்க. என்ன சொல்ல வருவீங்கன்னு எனக்கு தெரியும். அது என்னோட பாட்டு இல்லேன்னு சொல்வீங்க. அவ்வளவுதானே? அவர் இசையமைச்ச பாட்டை கூட என்னுது இல்ல. எல்லாம் கலைவாணி சரஸ்வதி கொடுத்தது’ன்னு சொல்லிடுவாரு. அந்தளவுக்கு தன்னடக்கம். அதான் தேவா சார்’ என்றார்.

இன்னொரு பாட்டு கேளுங்க. என்று அவர் இன்னொரு பாட்டை பாட்டை எடுத்துவிடுறார். கடவுளே… அதுவும் தேவா பாட்டு இல்ல. மறுக்கறதுக்காக இவர் எழும் போதெல்லாம், சும்மா உட்காருங்க சார்… போதும் உங்க தன்னடக்கம்’ என்று அடக்கி அடக்கியே நெருக்கி தள்ளினார் . இப்படி வரிசையா நாலு பாட்டு பாடுனாரு. நாலும் தேவாவுடையது இல்ல.

இந்த தர்ம சங்கட அனுபவத்தை நீங்க தேவாவே சொல்லி கேட்க வேண்டும்! அதுதான் தேவானுபவம்!

தி.நகரில் பெரிய பங்களா. சொந்தமாக பிரமாண்டமான ஸ்டூடியோ. படகு கார் என்றெல்லாம் தேவா, ‘ராஜ’தேவாவாக இருந்தாலும், பழசை மறக்கிற வழக்கம் அவருக்கு இல்லை. இளம் வயது கஷ்டங்களை அவருக்கேயுரிய நகைச்சுவையோடு அவர் சொன்னால், ஒரு முறை காலச் சக்கரத்தில் ஏறி அவரோடு ட்ரிப் அடித்த சுகம் கிடைக்கும்.

நான் துர்தர்ஷன்ல வேலை பார்த்துகிட்டு இருந்த நேரம். மைலாப்பூர்ல இருந்து சேப்பாக்கத்துக்கு ஒரு ஓல்டு ஸ்கூட்டர்லதான் போவேன். தினமும் பதினாறு ரூபாய்க்கு பெட்ரோல் போடுவேன். அப்ப ஒரு லிட்டர் ரேட் அதுதான். அதுக்கு மேல காசும் இருக்காது. தினமும் பதினாறுக்கு மேல போட்டதில்ல என்பதால், என்னை பார்த்தாலே பங்க் பசங்க, ‘டேய்… பதினார்ரூவா வருதுரா’ன்னு கிண்டல் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. எனக்கு அவமானம் புடுங்கி திங்கும். ஒரு நாளாவது அஞ்சு லிட்டர் பெட்ரோலை மொத்தமா போட்டு இவனுங்க மூக்கை உடைக்கணும்னு ஆத்திரமா வரும். ஆனால் பொருளாதாரம் பூதாகாரமா இருக்கும். முடியாது.

பொறுத்து பொறுத்து பார்த்துட்டு ஒரு தடவ 500 ரூபா கடன் வாங்கிட்டு கௌம்பிட்டேன். பங்க்ல நுழையும்போதே ‘டேய்… பதினார்ரூவாடா’ன்னா ஒருத்தன். இருடி இரு… இன்னைக்கு இருக்கு உன் மூக்குக்கு பிளாஸ்த்ரின்னு நினைச்சுகிட்டு ஸ்டைலா வண்டிய நிறுத்துனேன். அவன் பட்டனை அழுத்துறதுக்கு முன்னாடியே ‘தம்பி… டேங்க்கை ஃபில் பண்ணு’ன்னு சொல்லிட்டு அவன் முகத்தை பார்க்குறேன்… பய அசந்துட்டான். இருந்தாலும், ‘சார் வேணாம் சார். வழக்கமா என்ன போடுவீங்களோ, அதை மட்டும் போடுங்க’ன்றான். ‘இல்லப்பா. காசு இருக்கு. ந்தா பாரு’ என்று 500 ரூபாயை எடுத்து நீட்டுறேன். அவன் விட்றதா இல்ல. ‘வேணாம் சார். சொன்னா கேளுங்க’ன்றான்.

‘தம்பி… நான்தான் பணம் இருக்குன்னு சொல்றேன்ல? நீ தைரியமா போடு’ன்னு நான் பிடிவாதம் பண்றேன். அந்த தம்பி ஒரு பதிலை சொல்லுச்சு பாருங்க. நான் துடிச்சு போயிட்டேன்.

‘சார்… வருஷக்கணக்கா பதினாறு ரூபாயை தாண்டி நீங்க பெட்ரோல் போட்டதேயில்ல. டேங்க்ல அந்த அளவுக்கு மேல இருக்குற இடமெல்லாம் துரு பிடிச்சு போயிருக்கும். இப்ப பெட்ரோலை ஃபுல்லா போட்டா அந்த துருவெல்லாம் அப்படியே ட்யூப் வழியா கார்ப்பரேட்டருக்கு போய் அடைச்சுரும். அதுக்காகதான் சொல்றேன். வேணாம்’னான். அடப்பாவி… ஒரு மனுஷனை கேவலப்படுத்த எப்படியெல்லாம் ட்யூஷன் படிச்சுட்டு வர்றானுங்கன்னு நினைச்சு நான் ஆடிப்போயிட்டேன்!

தேவா என்கிற சமாதானப்புறா, ‘புறா ஃபிரை’ ஆன கதை ஒன்றும் இருக்கிறது. அது ஹன்ட்ரண்ட் பர்சென்ட் சிரிப்பு.

வாலியும் வைரமுத்துவும் அவரது இசைக்கு பாட்டு எழுதியிருக்கிறார்கள். ஆனால் இவருக்கு தெரியாமல் அவரையும், அவருக்கு தெரியாமல் இவரையும் எழுத வைப்பாராம். ஏன்? ரெண்டு பேருக்குமே மயிரிழை அளவுக்கு ஈகோ ஓடிய காலம் அது. வைரமுத்துவை காலையில் வரச்சொல்லிவிட்டார் தேவா. அவரும் வந்து விட்டார். முதல் மாடியில் கம்போசிங். பாட்டும் ட்யூனும், பன்னும் டீயும்போல மிக்ஸ் ஆகுற நேரத்தில்தான், தேவாவை வெக்ஸ் ஆக்குகிற செய்தி வந்தது. அவரது உதவியாளர் அப்படியே நைசாக வந்து தேவாவின் காதில் கிசுகிசுத்தார். சார்…. கீழே வாலி சார் வந்துருக்காரு. வரச்சொன்னீங்களாமே?

‘அவரை மதியானம்ல வரச்சொன்னோம். இதுவேற வம்பாப் போச்சே’ என்று மிரண்ட தேவா, முன்னால் அமர்ந்திருக்கும் வைரமுத்துவிடம், ‘சார்… நீங்க எழுதிகிட்டேயிருங்க. லேசா வயித்துல வலியிருக்கு. ந்தா வந்துர்றேன் என்று வாசல் வரைக்கும் கேஷுவலாக நடந்துபோய்… அப்புறம் வீறு கொண்டு ஓட ஆரம்பித்தார் கீழே. ‘ஐயா… வாங்க வாங்க. ட்யூன் போட்டுடலாமா?’ என்று கேட்டுக் கொண்டே கீழே தயாராக இருந்த இன்னொரு கீ போர்டில் ட்யூன் போட ஆரம்பித்துவிட்டார். சரியாக ஐந்து நிமிடம். அவர் வரிகளை கோர்க்க ஆரம்பித்த நேரத்தில், ‘ஐயா… எழுதிகிட்டேயிருங்க. நேத்து சாப்பிட்ட சப்பாத்தி ஒத்துக்கல. வந்துர்றேன்’ என்று வாசல் வரைக்கும் அதே நிதான நடை நடந்து அதற்கப்புறம் திடுதிடுவென ஓட ஆரம்பித்தார் மாடிக்கு. அங்கே வரிகளை முடித்திருந்தார் வைரமுத்து.

இப்படி மாறி மாறி ஓடி ஓடியே ஒரே நேரத்தில் இரண்டு பாடல்களை எழுத வைத்து இருவரையும் சந்திக்க விடாமலே அனுப்பிய சாமர்த்தியம் இப்போதுள்ள எந்த இசையமைப்பாளருக்கும் வராது.

தேவாவின் கதைகளை கேட்டால், அது அவரது பாடல்களை விடவும் இனிப்பாக இருக்கும். இசையால் மட்டுமல்ல, குணத்தாலும் அவர் தேனிசைத்தென்றல்தான்!

'நேதாஜி ஒரு போர்குற்றவாளி' - பிரிட்டனுக்கு நேரு எழுதிய கடிதம்!

நேதாஜி சுபாஷ் சந்திர போஸை போர்குற்றவாளி என குறிப்பிட்டு , சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான நேரு, பிரிட்டிஷ் அரசுக்கு எழுதிய கடிதம் உள்பட பல முக்கிய ஆவணங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று வெளியிட்டார்.

கடந்த அக்டோபர் 14-ம் தேதி நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் குடும்பத்தினர் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார். அப்போது  நேதாஜி தொடர்பான ஆவணங்கள் விரைவில் வெளியிடப்படும் என அவர்களிடத்தில் பிரதமர் உறுதியளித்திருந்தார்.

அதன்படி,  நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 120வது பிறந்தநாளான இன்று, அவரது மரணம் தொடர்பான 100க்கும் மேற்பட்ட ஆவணங்களை, நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி வெளியிட்டார். இந்த ஆவணங்கள் அனைத்தும் தேசிய ஆவணக் காப்பகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த ஆவணங்களில் நேதாஜி குறித்து, பிரிட்டன் அரசுக்கு நேரு எழுதிய கடிதமும் ஒன்று. அந்த கடிதத்தில் நேதாஜியை நேரு 'ஒரு போர்க்குற்றவாளி ' என குறிப்பிட்டுள்ளார் நேரு.  இது குறித்த ஆவணமும் வெளியிடப்பட்டுள்ளது. அதே வேளையில் நேதாஜியை போர்குற்றவாளி என நேரு குறிப்பிட்ட கடிதத்தை  காங்கிரஸ் கட்சி ஏற்றுக் கொள்ள மறுத்துள்ளது. மேலும் நேதாஜி விமான விபத்தில் இறந்ததை நேரு நம்பவில்லை என மற்றொரு ஆவணம் தெரிவிக்கிறது.

நேதாஜி மரணம் அடைந்தவுடன்,  நேதாஜியின் மகளுக்கு காங்கிரஸ் கட்சி 6 ஆயிரம் ரூபாய் வழங்கியதாகவும்,  அதனை நேதாஜியின் குடும்பத்தினர் வாங்க மறுத்தது தொடர்பான ஆவணங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

நன்னக்கு பிரேமதோ -திரைவிமர்சனம்

1150 திரையங்கில் சங்கராந்தி தின சிறப்பாக ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் நன்னக்கு பிரேமதோ. இப்படம் தற்போது பாக்ஸ் ஆபிஸ் கலக்க்ஷன் அள்ளி வருகிறது. ஜூனியர் என்.டி.ஆர் நடித்த படங்களிலேயே இப்படத்தில் செம ஸ்டைலிஷாக விருந்து படைத்துள்ள படம் நன்னக்கு பிரேமதோ.
கதை

லண்டனில் மிக செழிப்பாக வளர்ந்த இளைஞர் அபியாக இருக்கும் ஜூனியர் என் டி ஆர், இவரது தந்தை சுப்ரமணியன் (ராஜேந்திர பிரசாத்) மரணப்படுக்கையில் உள்ள போது சில வருடங்களுக்கு முன்பு தன்னை ஏமாற்றி அவமானப்படுத்திய ஜகபதி பாபு பற்றியும் இன்னும் 30 நாட்களில் நான் சாகப்போகிறேன் அதற்கு முன் நான் பட்ட அவமானம் போல் அவனும் படவேண்டும், அப்போது தான் என மனம் சாந்தியடையும் என்று அவரது மகனான ஜூனியர் என் டி ஆரிடம் சொல்கிறார். அதன் பிறகு ஜூனியர் என் டி ஆர், ஜகபதி பாபு தேடி சென்று அவரை ஒன்னும் இல்லாதவனாக செய்து எப்படி அவமானப்படுத்துகிறார் என்பதே கதை.
ஜூனியர் என்.டி.ஆர்

மிக ஸ்டைலிஷாக ஒரு ஹீரோவை பார்த்து நீண்ட நாட்கள் ஆனது, அந்த ஆசையை ஜூனியர் என்.டி.ஆர் இப்படத்தின் மூலம் தீர்த்துள்ளார். அவர் வைத்திருக்கும் தாடியும், உடையும் ஒவ்வொரு காட்சிக்கும் கம்பீரத்தை தருகிறது. மேலும் எந்த காரியத்தையும் கூலாக செய்யும் நபராக கலக்குகிறார். அது மட்டுமில்லாமல் சண்டை காட்சிகளில் ரிஸ்க் எடுத்து செய்திருப்பது தெரிகிறது. என்ன சில செண்டிமெண்ட்டான காட்சிகளில் முக அசைவுகள் சுத்தமாக சரியில்லை அதில் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம்.
ராகுல் ப்ரீத்தி

வழக்கம் போல் வில்லனுக்கு மகளாக வரும் கதாநாயகி, படத்தில் கிளாமரை அள்ளி வீசியுள்ளார். தன் கனவில் வரும் ஒரு சம்பவத்தை கண்டு அடிக்கடி அலறுவதும், தன் தாயை ஜெயிலில் பார்த்து உருகுவதும் நல்ல நடிப்பை வெளிபடுத்தியுள்ளார். மேலும் இப்படத்தில் அவரே டப்பிங் பேசியது வரவேற்கத்தக்க விஷயம்.
ஜகபதி பாபு

படத்தின் மிகப்பெரிய பலம், தன் செய்யும் ஒவ்வொரு வேலையிலும் சாமர்த்தியமாக திகழ்வது அடடா போடா வைக்கிறது. அதும் ஜூனியர் என்.டி.ஆர்க்கு நிகராக பக்கா ஸ்டைலிஷான வில்லனாக இருக்கிறார்.
ராஜேந்திர பிரசாத்

ஜூனியர் என்.டி.ஆரின் தந்தையாக நடித்திருக்கும் ராஜேந்திர பிரசாத், இப்படி ஒரு தந்தை இல்லையே என்று நம்மை ஏங்க வைக்கிறார். நேர்த்தியான ஒரு யதார்த்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்
கிளாப்ஸ்

1. ஜூனியர் என்.டி.ஆரின் ஸ்டைலிஷான நடிப்பு.

2. படத்தின் பின்னணி இசை மற்றும் பாராட்டத்தக்க ஒளிப்பதிவு

3. இரண்டாம் பாதியின் வேகம், யூகிக்க முடியாத திரைக்கதை
பல்ப்ஸ்

1. மெதுவான முதல் பாதி- கதைக்குள் செலவே சில நேரம் ஆகிறது

2. பார்த்து பழகி போன கதை

3. யதார்த்தத்தை மீறிய ஹீரோயிசம் மற்றும் சண்டைக்காட்சிகள்

இயக்குனர் சுகுமார் அப்பா, மகன் உணர்ச்சிகளை கருவாய் கொண்ட கதை களத்தை மாஸ் படங்களுக்கு இணையாக அதே சமயம் படுஸ்டைலிஷாக கொடுத்துள்ளார். கண்டிப்பாக ஜூனியர் என்.டி.ஆரின் ரசிகர்களுக்கு செம்ம விருந்தாக அமைந்துள்ளது இந்த படம்.

மொத்தத்தில் நன்னக்கு பிரேமதோ -- பாச போராட்டத்தில் ஒரு மாஸ் படம்

‘சீவலப்பேரி பாண்டி -2’… நெப்போலியன் கேரக்டரில் கார்த்திக்..!

நடிகர் நெப்போலியனின் சினிமா வாழ்க்கையில் திருப்புமுனையை உண்டாக்கிய படம் ‘சீவலப்பேரி பாண்டி’. இப்படத்திற்கு ராஜேஷ்வர் கதை எழுத பிரதாப்போத்தன் இயக்கியிருந்தார். இப்படம் 1994ஆம் ஆண்டு வெளியானது.

இப்படத்திற்கு கதை எழுதிய ராஜேஷ்வர்தான் கார்த்திக் நடித்து மாபெரும் ஹிட்டடித்த அமரன் படத்தை இயக்கியிருந்தார். தற்போது இவர் ‘சீவலப்பேரி பாண்டி’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கவிருக்கிறாராம்.

ஆனால் இதன் முதல் பாகத்தில் நடித்த நெப்போலியனுக்கு பதிலாக இரண்டாம் பாகத்தில் நவரச நாயகன் கார்த்திக்கை நடிக்க வைக்க இருக்கிறாராம்.

சிலநாட்களுக்கு முன்பு இவர்கள் இருவரும் இணைய அமரன் 2 படம் உருவாக உள்ளதாக செய்திகள் வந்தன. அதன் விளம்பரங்களும் நாளிதழ்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆனால் அப்படம் போஸ்டரோடு நின்றுபோனது. எனவே ‘சீவலப்பேரி பாண்டி’யாவது படப்பிடிப்பு வரை செல்வாரா? என்று ரசிகர்கள் கேட்கத் தொடங்கி விட்டனர்.

செண்டிமெண்டை அடித்து நொறுக்கிய ரஜினி முருகன்

ரஜினி முருகன் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் பட்டையை கிளப்பி வருகின்றது. இந்நிலையில் இப்படத்தின் வசூல் தற்போது வரை ரூ 25 கோடியை தாண்டியுள்ளதாக கூறப்படுகின்றது.

இதுநாள் வரை தேதி அறிவித்து தள்ளிப்போய் ரிலிஸான எந்த படங்களும் பெரிய அளவில் வெற்றி பெற்றது இல்லை.

இதில் அஜித் நடித்த வரலாறு மட்டுமே விதிவிலக்காக இருந்தது, தற்போது இந்த லிஸ்டில் ரஜினிமுருகனும் இணைந்து செண்டிமெண்டுகளை எல்லாம் அடித்து நொறுக்கி பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்றுள்ளது.

ஸ்மார்ட் மாணவியை மென்டலாக்கிய அதிகாரிகள்..! - இப்படியும் நடக்குமா தமிழகத்தில்?

திருச்சி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி ஒருவரது விடைத்தாளில் ஏற்பட்ட மதிப்பெண் குளறுபடிக்காக, மாணவியை மெண்டலாக்கிய கல்வித் துறை அதிகாரிகளின் செயல் தற்போது அம்பலமாகியுள்ளது.

திருச்சி, துறையூர் பகுதியைச் சேர்ந்தவர் ஞானசேகரன். நெசவுத் தொழிலாளி. இவர் மகள் சாந்தினி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). துறையூரில் இருக்கும் ஒரு அரசுப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். கடந்தாண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதினார். தேர்வில் நல்ல மதிப்பெண் எடுக்க வேண்டும் என்பதற்காக இரவு, பகலாக நன்றாக படித்தார். பெற்றோரும், 'மகள் நல்ல மதிப்பெண் எடுத்துத் தேறிவிடுவாள்' என நம்பிக்கையோடு ஊக்கம் அளித்தனர். தேர்வு நாளும் வந்தது. அனைத்துப் பாடங்களையும் நன்றாக எழுதிய திருப்தியில் இருந்தார் சாந்தினி. தேர்வு முடிவைப்  பார்த்தபோது அதிர்ந்தே போனார். 'சாந்தினி ஃபெயில்' எனக் காட்டியது ரிசல்ட். கதறியழுதவரை யாராலும் சமாதானம் செய்ய முடியவில்லை.


'நன்றாகப் படிக்கும் மாணவி ஃபெயிலாக வாய்ப்பில்லையே' என ஆசிரியர்களும் அதிர்ந்து போனார்கள். மதிப்பெண் பட்டியலைப் பார்த்தபோது கூடுதல் அதிர்ச்சி. மாணவி எடுத்த மதிப்பெண்கள் பின்வருமாறு: தமிழ்-93, ஆங்கிலம்-75, கணிதம்-73, அறிவியல்-2, சமூக அறிவியல்-100 எனக் காட்டியது. 'எல்லா பாடத்திலும் நல்ல மதிப்பெண் இருக்கும்போது அறிவியல் பாடத்தில் மதிப்பெண் குறைய வாய்ப்பில்லை' என சமாதானம் செய்த ஆசிரியர்கள், மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க அறிவுறுத்தினர்.

இங்குதான் சர்ச்சை ஆரம்பமானது. மறுகூட்டல் விண்ணப்பத்தை பார்த்த அதிகாரிகளுக்கு குளறுபடி நடந்திருப்பது புரியவந்தது. மாணவியின் ஒரிஜினல் விடைத்தாளில் என்ன கண்டார்களோ தெரியவில்லை. அடுத்த நாளே, மாணவி படிக்கும் பள்ளி தலைமை ஆசிரியையை தொடர்பு கொண்டு மாணவியை அழைத்து வரச் செய்தனர்.

அங்கு நடந்ததை விவரித்தார் மாணவியின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர்.

 "டி.பி.ஐ வளாகத்தில் உள்ள அரசுத் தேர்வுகள் துறை இயக்குனரகத்துக்குள்ள சாந்தினியையும் அவரது அப்பா, அம்மாவையும் கூட்டிக்கிட்டு போனாங்க. சாந்தினி பெற்றோரை வெளியே உட்காரச் சொல்லிவிட்டு, ஒரு அதிகாரியோட அறைக்குள்ள கூட்டிட்டுப் போனாங்க. அங்க அந்த அதிகாரி, 'இங்க பாரு. மறுகூட்டலுக்கு எல்லாம் விண்ணப்பிக்க வேண்டாம். மறு தேர்வை எழுது. அறிவியல் பேப்பர்ல 2 மார்க் வர்றதுக்குக் காரணம். அப்ப மனநிலை சரியில்லாம இருந்தேன். மாத்திரை சாப்பிட்டதால, மாத்தி எழுதிட்டேன்னு லெட்டர் எழுதிக் கொடு'ன்னு எழுதி வாங்கிட்டார். சாந்தினியும் அழுதுட்டே வெளிய வந்துச்சு. இந்த விஷயத்தை வெளியில் சொல்லக் கூடாதுன்னு மிரட்டி அனுப்பிட்டாங்க" என்றார் வேதனையோடு.


இதையடுத்து மறுதேர்வுக்கு விண்ணப்பித்தார் மாணவி சாந்தினி. அந்தத் தேர்வில் சாந்தினி எடுத்த மதிப்பெண் என்ன தெரியுமா? 93 மதிப்பெண்கள்! இப்போது மொத்த மதிப்பெண் 434. தற்போது பிளஸ் 1 அறிவியல் பிரிவில் சேர்க்கப்பட்டு படித்து வருகிறார். மாணவி விவகாரத்தில் என்ன நடந்தது? என்பதை அறிய ஆர்.டி.ஐ மூலம் மனு செய்தார் சட்டப் பஞ்சாயத்து இயக்கத் தலைவர் சிவ இளங்கோ. அதில் கிடைத்த தகவல்கள் ஒவ்வொன்றும் அதிர்ச்சி ரகம்.

அதைப் பற்றி நம்மிடம் விவரித்த சிவ இளங்கோ, "கடந்த ஆண்டு 14.9.15 அன்று ஆர்.டி.ஐ மூலம் விடைத்தாளைக் கேட்டு மனு அனுப்பினோம். எந்தப் பதிலும் இல்லை. மேல்முறையீட்டில், தகவல் ஆணையர் கிறிஸ்டோபர் நெல்சன், ' விடைத்தாளைக் கொடுக்கத் தேவையில்லை' என பதில் அனுப்பினார். இதனால் அதிர்ந்து போன நாங்கள், அவருக்கு ஒரு பதில் அனுப்பினோம். 'ஆர்.டி.ஐ சட்டத்தின்படி விடைத்தாளைக் கொடுக்க இடமுள்ளது. தேவைப்பட்டால் ஒவ்வொரு சனிக்கிழமையும் நாங்கள் ஆர்.டி.ஐ குறித்த இலவச பயிற்சி வகுப்பு நடத்துகிறோம். வந்து கலந்து கொள்ளுங்கள்' என கடிதம் அனுப்பினோம். அதன்பிறகே எங்களுக்கு மாணவி எழுதிய அனைத்து விடைத்தாள்களும் கிடைத்தன.

சிவ இளங்கோ

மாணவி 2 மதிப்பெண் எடுத்ததாகச் சொல்லப்படும் விடைத்தாளில் உள்ள கையெழுத்து அவருடையது இல்லை. எங்களுக்குக் கொடுப்பதற்காக யாரையோ வைத்து எழுதியுள்ளனர். அந்தத் தாளில், 'மலேரியா எப்படிப் பரவுகிறது?' என்ற கேள்விக்கு, 'எங்கள் பகுதியில் மலேரியா பாதிப்பு கிடையாது. எப்படிப் பரவுகிறது என உங்களுக்குத் தெரிந்திருக்குமே? பத்தாம் வகுப்பு மாணவியிடம் கேட்கலாமா? மலேரியாவைக் கட்டுப்படுத்த சட்டப்படி நடவடிக்கை எடுங்கள். இதை என்னிடம் கேட்க உங்களுக்கு அறிவே இல்லையா? இத்துடன் எனது விண்ணப்பத்தை முடித்துக் கொள்கிறேன்' என ஒரு பதில் எழுதப்பட்டுள்ளது.


அடுத்து, மழைநீர் சேமிப்பு பற்றிய ஒரு கேள்விக்கு, 'மழைநீரை சேமிக்கத் தெரியாத கழுதைகள்தானே நாம். மரம் இல்லாத இந்த உலகில் நான் வாழ விரும்பவில்லை. சீக்கிரம் சாகப் போகிறேன். இதைப் படிக்கும் நீங்களும் சாகத்தான் போகிறீர்கள்' என பதில் எழுதப்பட்டுள்ளது. அனைத்து பாடங்களிலும் நல்ல மதிப்பெண் எடுத்த மாணவி, அறிவியல் பாடத்தில் இப்படியொரு பதிலை எழுதுவாரா? அதுவும் மறுதேர்வில் 93 மதிப்பெண்ணை அந்த மாணவி எடுத்திருக்கிறார்.


ஆசிரியர்கள் செய்த பெருந்தவறால் அந்த மாணவிக்கு மென்டல் பட்டம் கட்டிவிட்டார்கள் அதிகாரிகள். மாணவி பிளஸ் 2 முடித்துவிட்டு எங்கு சென்றாலும், பத்தாம் வகுப்பில் ஃபெயில் என்றுதானே இருக்கும்? இந்தத் தவறுக்கு உடந்தையாக இருந்த தலைமை ஆசிரியைக்கு மாவட்டக் கல்வி அதிகாரியாக புரமோஷன் கொடுத்திருக்கிறார்கள். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பள்ளிக் கல்வித் துறை செயலர் சபீதாவுக்கு கடிதம் எழுதியிருக்கிறோம். நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் சட்டரீதியான முயற்சிகளை மேற்கொள்வோம்!" என்றார் அதிர்ச்சி விலகாமல்.

ஒரு அப்பாவி மாணவியின் எதிர்காலத்தை, சிலரின் கவனக் குறைவும் அதிகார துஷ்பிரயோகமும் சீர்குலைக்க முடியுமென்றால், தாயுள்ளம் கொண்ட அரசு என்பதெல்லாம் வெற்று வேஷம்தானா? 

மாதவன் கொடுத்த முத்தம், சர்ச்சையில் சிக்கினார் குஷ்பு

காபி வித் டிடி நிகழ்ச்சியில் கமல் வந்தபோது கமலிடம் முத்தம் வாங்கியதால் சர்ச்சை உருவானது. அதெப்படி ஒரு டிவி நிகழ்ச்சியில் முத்தம் வாங்கலாம் என பலரும் சர்ச்சையைக் கிளப்பினர். இந்நிலையில் மீண்டும் இதே போன்றதொரு பிரச்னை அரங்கேறியுள்ளது.

ஜி தமிழ் சேனலின் பிரபல நிகழ்ச்சியான சிம்ப்ளி குஷ்பூ நிகழ்ச்சியில் குஷ்புவுடன் வாரா வாரம் நடிகர் நடிகைகள் பலரும் வந்து தங்களது அனுபவங்கள், சினிமா கெரியரில் நடந்த உன்னதமான நிகழ்வுகளை பகிர்ந்துவருகிறார்கள். இதில் இறுதிச்சுற்று படம் வெளியாவதை முன்னிட்டு நடிகர் மாதவன் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

அதில் ஒரு கட்டமாக மாதவன் குஷ்புவின் கன்னத்தில் முத்தமிட சர்ச்சை உருவாகிவிட்டது. அதெப்படி ஒரு திருமணமான ஆண், இன்னொரு திருமணமான பெண்ணுக்கு அனைவரும் பார்க்கும் டிவி நிகழ்ச்சியில் முத்தமிடலாம். இருவரும் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும் என மாதவன், குஷ்புவை சமூக வலைதளங்கள் உள்ளிட்டவற்றில் சாடி வருகிறார்கள்.

இன்னொரு பக்கம் , இதே காட்சி படத்தில் இருந்தால் பேசாமல் இருப்பார்கள் , இதில் தவறேதும் இல்லையே. இருவரும் ஒரே துறையச் சேர்ந்தவர்கள், நண்பர்கள் இருவரின் வீட்டார்களுக்குப் பிரச்னை இல்லாத வேளையில் உங்களுக்கென்ன என இன்னொரு பக்கம் ஆதரவுகளும் குவிந்தவண்ணம் உள்ளன.

ஸ்தம்பித்த பாஸ்போர்ட் ஆபிஸ், அரசாங்க வண்டியில் அஜித்- முழுத்தகவல்கள்

அஜித் தும்மினால் கூட அது சமூக வலைத்தளங்களில் ட்ரண்ட் தான் போல. அந்த வகையில் நேற்று இவர் பாஸ்போர்ட் ஆபிஸிற்கு வந்தார்.

இதை அறிந்த ரசிகர்கள் உடனே எல்லோரும் அங்கு கூட, கிட்டத்தட்ட 1000 கணக்கானோர் வந்தனர். ஏதோ அஜித் படம் முதல் நாள் ரிலிஸ் போல் ஆகிவிட்டது அந்த இடம்.

அதில் கூடுதல் ஸ்பெஷலாக குட்டிதலயும் வர, ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகமாகியது. தன் பணிகளை முடிந்த அஜித் வெளியே வருகையில் ரசிகர்கள் பலரும் விசில் அடித்து ஆரவாரம் செய்தனர்.

பின் அரசாங்க வண்டியில் அஜித்தை அழைத்து சென்றனர், அஜித் சென்ற சில மணி நேரம் கழித்து ஷாலினி கிளம்பினார்.

பலரும் தங்கள் சந்தோஷங்களை பகிர்ந்து கொண்டனர், குறிப்பாக குட்டிதலயை பார்த்தது மிகவும் சந்தோஷம் என கூறினர்.

இளம் நடிகருக்காக ஒன்று சேரும் ரகுமான், முருகதாஸ்

இந்தியா சினிமாவின் நம்பர் 1 இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான். அதேபோல் தமிழ் சினிமாவிலிருந்து ஹிந்தி சினிமாவிற்கு சென்று வெற்றி கொடி நாட்டியவர் முருகதாஸ்.

இவர்கள் இருவரும் அதர்வாவிற்காக ஒன்று சேரவுள்ளனர், நீங்கள் நினைப்பது போல் படத்தில் இல்லை. முருகதாஸின் உதவி இயக்குனர் இயக்கிய கணிதன் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்காக தான்.

இதில் ரகுமான் பாடல்களை வெளியிட முருகதாஸ் அதை பெற்றுக்கொள்ளவிருக்கின்றாராம்.

விளம்பர நடிகர்களுக்கு பாடம் கற்பித்த 68 வயது முதியவர்..!

சில மாதங்களுக்கு முன் மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி இந்துலேகா சோப் விளம்பரத்தில் நடித்திருந்தார்.

அந்த சோப்பை பயன்படுத்தினால் நீங்கள் சிகப்பழகை பெறுவீர்கள் என அந்த விளம்பரத்தில் தெரிவித்திருந்தார்.

ஆனால் அதை பயன்படுத்திய வயநாடு பகுதியைச் சேர்ந்த சிற்பி கே சித்து என்ற நுகர்வோர் சிகப்பழகு கிடைக்கவில்லை என வழக்கு தொடுத்திருந்தார்.

மனுவை விசாரித்த நுகர்வோர் நீதிமன்றம் இந்துலேகா நிறுவனத்திற்கும் மம்மூட்டிக்கும் சம்மன் அனுப்பியது.

இந்நிலையில் அந்த நிறுவனம் தனது தவறை ஒப்புக் கொண்டு அந்த சிற்பிக்கு ரூ. 30,000 கொடுத்தது. இதுகுறித்து அந்த 68 வயது முதியவர் கூறியதாவது…

“பணத்திற்காக நான் இதை செய்யவில்லை. ஆனால் இதில் உள்ள உண்மையை கொண்டு வரவே இப்படி வழக்கு தொடுத்தேன்.

ஒரு பொருளின் விளம்பரத்தில் நடிப்பவர்கள் அந்த பொருளின் தரத்திற்கு பொறுப்பேற்க வேண்டும்.

ஏனென்றால் அவர்களை நிறைய ரசிகர்கள் பின்பற்றுகின்றனர். தரமற்ற பொருட்களுக்கு நடிகர்கள் ஆதரவளிக்க கூடாது” என்றார் அந்த சிற்பி.

இந்த சிற்பி சமூகத்தை செதுக்க பிறந்தவரோ? வாழ்த்துக்கள் ஐயா..!

கபாலி காட்சிகள் திருப்தியில்லை.. ரீ ஷுட் செய்யும் ரஞ்சித்..!

கபாலி படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு விரைவில் மலேசியாவில் தொடங்கவுள்ளது. இதற்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மலேசியா செல்லவிருக்கிறார்.

இதனிடையில் ஏற்கெனவே மலேசியாவில் படமாக்கப்பட்ட சில காட்சிகள் இயக்குனருக்கு திருப்தியளிக்கவில்லையாம்.

எனவே, அந்த காட்சிகளையும் சில மாறுதல்களோடு மீண்டும் எடுக்க இருக்கிறாராம்.

இதன் படப்பிடிப்பு முடிவடைந்த பின்னர் அங்கிருந்து நேராக ஷங்கரின் ‘2.0’ படப்பிடிப்புக்காக அமெரிக்கா செல்கிறாராம் ரஜினி.

அங்கு இரண்டு மாதம் படப்பிடிப்பில் இருக்கும் ரஜினிகாந்த், தேர்தல் நேரத்தில் வாக்களிக்க மட்டுமே இந்தியா வரக்கூடும் என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இளையராஜா - "16 வயதினிலே'' எஸ்.பி.பி-யை நீக்கிவிட்டு மலேசியா வாசுதேவனை ஏன் பாடவைத்தார்...?

"16 வயதினிலே'' படத்தில், எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடவேண்டிய ஒரு பாடலை, அவருக்கு தொண்டை கட்டிக்கொண்டதால் மலேசியா வாசுதேவன் பாடினார்.

"16 வயதினிலே'' படத்தின் பாடல் பதிவு அனுபவம் பற்றி இளையராஜா தொடர்ந்து கூறியதாவது:-

"பட்ஜெட் படம் என்னும்போது செலவுகளை ஆரம்பத்தில் இருந்தே மட்டுப்படுத்தியாக வேண்டும். அதை மனதில் வைத்தே என் இசை சம்பந்தப்பட்ட பாட்டு விஷயத்தில் நானும் முயற்சி செய்தேன். அந்த அடிப்படையில்தான் கவிஞரின் உதவியாளர் கண்ணப்பனிடம் பாட்டுக்கான சம்பளத்தை பாதியாக குறைத்துக்கொள்ளச் சொன்னேன்.

நான் கேட்டுக்கொண்ட சம்பளக் குறைப்பு பற்றி கண்ணப்பன் கவிஞரிடம் சொல்லியிருக்கிறார். அவரோ, "பணம் என்னடா பணம்! அதெல்லாம் ஒரு விஷயமா! வா, ராஜாவுக்கு நாம பாட்டு எழுதிட்டு வரலாம்'' என்று புறப்பட்டு நேராக வந்துவிட்டார்.

பாடல் வரவேண்டிய இடத்துக்கான காட்சியை கவிஞரிடம் பாரதி விவரித்து சொன்னார். உடனே என்னைப் பார்த்த கவிஞர் "என்ன டிïன்?'' என்று கேட்டார்.

நான் பக்கவாத்தியங்களோடு அந்த மெட்டை பாடிக்காட்டினேன். பாரதி, அரைகுறை மனதுடன் "ஓகே'' செய்த மெட்டு அது.

"16 வயதினிலே'' கிராமத்து பின்னணியில் அமைந்த படம் என்பதை மனதில் கொண்ட கவிஞர், சிறிது நேரம் யோசித்துவிட்டு, "செவ்வந்திப்பூ முடிச்ச சின்னக்கா ஹோய் சின்னக்கா'' என்று எழுதினார்.

இரண்டாவது பாடல், மயிலிடம் சப்பாணி பாடுவதுபோல் வருகிறது. சந்தைக்குப் போகும் சப்பாணியும் மயிலும் நடந்து போகும் வழியில் பாடும் பாட்டு. மயில் வருத்தத்தில் இருக்க அவளை சப்பாணி சந்தோஷப்படுத்த முயற்சிக்கிற மாதிரியான பாட்டு.

இதில் சப்பாணி (கமலஹாசன்) பாடிக்கொண்டே போக, இடையில் ஒரு ஹம்மிங்கோடு ஒரு பெண் குரல் ஒன்று ஒலிக்கிறது.

மயிலும் சப்பாணியும் எங்கிருந்து வருகிறது அந்தப் பெண் குரல் என்று தேடித்தேடி பார்க்கிறார்கள். கடைசியில் ஒரு கிழவி பாடுவதாக காட்டப்படும் என்று பாரதி, கவிஞரிடம் விளக்கினார்.

நானும் பாரதியும் ஏற்கனவே இந்தப் பாட்டி பற்றி யோசித்து வைத்திருந்தோம். "என்ன பாட்டி! மஞ்சக் குளிச்சிருக்கியே!'' என்று கேட்டு, "பழைய நினைப்புடா பேராண்டி'' என்று சொல்லும் கிராமத்துப் பேச்சை நினைவில் வைத்திருந்தோம். அதாவது, இப்படி கிழவி சொல்கிற மாதிரி முடிந்தால் நன்றாக இருக்கும் என்பது எங்கள் கருத்து. ஆனால் அதை கவிஞரிடம் சொல்லவில்லை.

கவிஞரோ பாடலை "ஆட்டுக்குட்டி முட்டையிட்டு'' என்று தொடங்குவதாக அமைத்து கிழவி காட்டப்படும்போது "பழைய நினைப்புடா பேராண்டி... பழைய நினைப்புடா!'' என்று அவள் சொல்வது போல் முடித்தார்.

நாங்கள் சொல்லாமலே, கவிஞர் எங்கள் மனதில் இருந்ததை எழுதியது எங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. கவிஞருக்கு இருந்த சரஸ்வதி கடாட்சம் அது.

"செவ்வந்தி பூ முடிச்ச'' பாடலை எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தை பாட வைக்கலாம் என்று முடிவு செய்து, ரிகர்சலுக்கு அழைத்தோம். பாலு வந்தார். ரிகர்சல் எல்லாம் முடிந்து கிளம்பும்போது பாலுவை தனியாக அழைத்தேன். "பாலு ராத்திரியெல்லாம் வெளியே சுத்தறதை விட்டுடு. நண்பர்களுக்காக வெளியே போனேன். விடிய விடிய ஊர் சுத்தினதுல தொண்டை கட்டிக்கிட்டுதுன்னு சொல்லாதே. இல்லேன்னா இந்தப் பாடல் வேறு யாருக்காவது போய்விடும்'' என்று சொன்னேன்.

பாலுவும் `சரி' என்று சொல்லிப் போனதோடு சரி.

மறுநாள் காலை 7 மணிக்கு ஏவி.எம்.மில் பாடலுக்கான மிïசிக்கையெல்லாம் கம்போஸ் செய்து விட்டேன். `டிபன் பிரேக்'கை தொடர்ந்து காலை 9 மணிக்கு மேல் பூஜை தொடங்கியது.

ரிகர்சல் தொடங்கி பாடலுக்கான வடிவங்களை தயார் செய்த நிலையில் 11 மணி.

பாலு அப்போதும் வரவில்லை. ஆளாளுக்கு தேடினோம். 11-30 மணிக்கு பாலு என்னிடம் நேராக வந்து, "டேய்! தொண்டையெல்லாம் கட்டிப் போச்சுடா...'' என்று, கட்டைக்குரலில் விஷயத்தை சொன்னான்.

"பார்த்தியா? நேத்தே நான் சொன்னேன் இல்லையா? அதையே செஞ்சிட்டு வந்து நிக்கறியே'' என்றேன்.

என்னிடமும் பாரதியிடமும் `சாரிடா' என்று சொல்லிவிட்டு பாலு கிளம்பிவிட்டான்.

எல்லாம் ரெடியாகிவிட்டது. ஜானகி கோரஸ் ரிகர்சல் கூட முடிந்து விட்டது.

பாலுவுக்குப்பதிலாக யாரை பாட வைப்பது? அப்போது  `டிராக்'கை தனியாக ரெக்கார்டு செய்யும் பழக்கம் கிடையாது. மேலும் அது பூஜையின்போது பதிவு செய்யப்படும் பாட்டு. பாடுபவர் இருக்க வேண்டும்.


யோசித்தேன். என் கண்ணில் பூஜைக்கு வந்த மலேசியா வாசுதேவன் பட்டார்.

மலேசியா வாசுதேவனை அழைத்தேன். "இந்தப் பாட்டை கத்துக்கோ'' என்று பாடலை சொல்லிக் கொடுத்தேன்.

அதன்படி வாசுவும் பாட, பாடலை பதிவு செய்தேன்.

மதிய உணவுக்குப்பிறகு, "ஆட்டுக்குட்டி முட்டையிட்டு'' பாடலை பதிவு செய்யவேண்டும்.

இதை சப்பாணி போலவே பாட வைக்க வாசுவை தயார் செய்தேன்.

ஆனால் வாசுவோ ரிகர்சலில் எல்லாம் சரியாக பாடிவிட்டு, "டேக் போகும்போது மாற்றி பாடிவிட்டார். `பாடத் தெரியாதவன் போல் பாடினால் நமக்கு பாடத்தெரியாது என்று எல்லோரும் நினைத்து விடுவார்களோ' எனப்பயந்து, சாதாரண பின்னணி பாடகர் போல

பாடிவிட்டார்.இதுவரை வராத பாடலாக இருக்க வேண்டும் என நான் எடுத்த முயற்சியெல்லாம் இப்போது விழலுக்கிறைத்த

நீராகிவிட்டது.இப்போதும் அந்தப் பாடலை நீங்கள் கேட்டுப் பாருங்கள். ஒரு அறியாத பட்டிக்காட்டான் பாட்டில் வரும் எளிமைத்தனம் அதில் இருக்காது. விவரம் புரிந்த கிராமத்தான் பாடுவது போல்தான் இருக்கும்.

இதுபோன்ற இழப்புகள் ஒரு இசையமைப்பாளர் என்ற முறையில் ஏராளம்.

அடுத்த பாடல் ரெக்கார்டிங் செய்யவேண்டிய நேரம் வந்தது.

மயில் (ஸ்ரீதேவி) தன் கற்பனையில் தனக்கு வரும் காதலன் எப்படி இருப்பான் என்று கனவு காணும் மனநிலையில் பாடும் பாட்டு என்று பாரதி சொன்னார்.

அப்போதெல்லாம் எந்த டைரக்டரும் இசையமைப்பாளரிடம் `இந்தப்பாடல் இதுபோல இருக்கலாம். அல்லது இந்த மாதிரி இருக்கலாம்' என்று அபிப்ராயமோ, ஆலோசனையோ சொல்வது கிடையாது. பாடல் சூழ்நிலையை விளக்கிவிட்டு, அத்துடன் விட்டுவிடுவார்கள். இசையமைப்பாளரும், கவிஞரும் என்ன கொடுக்கிறார்களோ, அதை அப்படியே ஏற்றுக்கொள்வார்கள்.

தேவைப்பட்டால் சிறுசிறு மாற்றம் வேண்டுமென்று கேட்பார்கள். அதை அவர்களும் உடனே செய்து விடுவார்கள்.

அந்தப் பாடல் காட்சிக்கு சில டிïன்களை போட்டேன். எதுவும் பாரதிக்கு பிடித்த மாதிரி தெரியவில்லை. பின்னர் ஒரு டிïனை போட்டு, "பாரதி! இது நன்றாக இருக்கும்'' என்று வற்புறுத்தினேன். அதுதான் "செந்தூரப்பூவே...'' பாடல் மெட்டு. மெட்டு நன்றாக அமைந்துவிட்டதால் மேற்கொண்டு `டிïன்' எதுவும் கம்போஸ் செய்யாமல் விட்டுவிட்டேன். அதனால் அந்த டிïன்தான் அந்தக் காட்சிக்கென்று முடிவாகிவிட்டது.

"இந்த மெட்டுக்கு கவிஞரை வைத்து பாட்டு எழுதச் சொல்லலாமா?'' என்று பாரதியிடம் கேட்டேன். "புதிதாக யாரையாவது வைத்து எழுதலாம்'' என்றார் பாரதி. அதோடு நில்லாமல், "ஏன் அமரனே எழுதட்டுமே'' என்றார்.

அமர் உள்பட எங்கள் எல்லோருக்குமே கவிஞர் கண்ணதாசன் மட்டுமே கவிஞராகத் தெரிந்தாரேயன்றி, வேறு யாரையும் கவிஞராகக் கருத முடியவில்லை. `அமரன் எழுதட்டும்' என்று பாரதி சொன்னதற்கு நான் பதில் ஒன்றும் சொல்லவில்லை. அமரன் வேண்டாம் என்று தடுக்கவும்  இல்லை.

தனி ஒருவராக 20 அடி ஆழ கிணறு வெட்டி தண்ணீர் வரவைத்து விவசாயி சாதனை!

சென்னிமலை அருகே உள்ள கொத்தம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி. இவர் விவசாயம் செய்து வருகிறார். இவரது மனைவி பூங்கொடி. இவர்களுக்கு குப்புசாமி என்ற ஒரு மகன் உள்ளார். இவர் ஈங்கூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் படித்து வருகிறார்.

பழனிசாமிக்கு சொந்தமாக 3 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் விவசாயம் செய்து வரும் அவர், விவசாயத்துக்காக அந்த பகுதியில் பொது கிணற்றில் 2 நாட்கள் முறை வைத்து தண்ணீர் எடுத்து விவசாயம் செய்து வந்தார். இந்த நிலையில் அந்த கிணற்றிலும் வருடத்தில் பாதி நாட்கள் தண்ணீர் இல்லாமல் விவசாயம் பாதிக்கப்பட்டது.

இதனால், விவசாய வேலையில் ஈடுபட்டு வந்த பழனிச்சாமி, அப்பகுதியில் உள்ள பிளாஸ்டிக் கதவுகள் தயாரிக்கும் கம்பெனியில் லாரிகளில் வந்து இறங்கும் லோடுகளை இறக்கும் லோடு மேனாகவும் பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில், தனது விவசாய நிலத்தில் ஒரு கிணறு வெட்ட எண்ணியிருக்கிறார். 'அப்படி கிணறு வெட்டினால் அந்த தண்ணீரை நம் தேவைக்கு உபயோகபடுத்தி கொள்ளலாமே' என்று நினைத்திருக்கிறார். உடனே நிலத்தடி நீர் மட்டம் பார்க்கும் ஒருவரிடம் போய் கேட்க, அவரும் நிலத்தின் ஒரு இடத்தை குறித்து கொடுத்திருக்கிறார்.

இயந்திரம் வைத்து கிணறு வெட்டும் அளவிற்கு வசதி இல்லாததால் குறித்து கொடுத்த இடத்தில் பழனிசாமி தன்னந்தனியாக கிணறு தோண்ட தொடங்கியிருக்கிறார். சுமார் 20 அடி ஆழம் கிணறு வெட்டி அந்த கிணற்றில் தண்ணீர் வரவழைத்திருக்கிறார்.

இதுகுறித்து பழனிச்சாமி கூறுகையில் "கடந்த 1½ ஆண்டு காலமாக கொஞ்சம் கொஞ்மாக கிணற்றை வெட்டினேன். வேலைக்கு போய் விட்டு நேரம் கிடைக்கும்போதெல்லாம் உளி, சுத்தி, மண் வெட்டி உதவியுடன் மண்ணை வெட்டி கூடையில் எடுத்து பக்கத்தில் கொட்டினேன். இந்த கிணற்றில் இருந்து மண்ணை வெளியில் எடுத்து வர வசதியாக படிகள் அமைத்து அதன் மூலம் மேலே வந்து தொடர்ந்து கிணறு வெட்டினேன். சுமார் 20 அடி தோண்டியதும் கிணற்றில் நீருற்று வரத் தொடங்கியது. அதனால், 20 அடி ஆழத்துக்கு மேல் என்னால் தோண்ட முடியவில்லை. கிணறு வெட்ட என் மனைவியும், மகனும் உதவிக்கு வர எண்ணினார். ஆனால் நான் வேண்டாம் என்று கூறி தனி ஒரு ஆளாக இந்த கிணற்றை தோண்டி உள்ளேன். ஆனால் மோட்டார் வைக்க மின் வசதி இல்லாததால் அதற்காக காத்திருக்கிறேன்" என்றார்.

இதையடுத்து பக்க வாட்டு பகுதிகளை சரி செய்து மண் சரியாத வகையில் அமைத்திருக்கிறார். தற்போது இந்த கிணற்றில் 5 அடிக்கு தண்ணீர் உள்ளது. மேலே இருந்து சுமார் 10 அடி ஆழத்துக்கு, 2 அடி அகலத்தில் படியும் அமைத்திருக்கிறார்.

மேலும், இந்த கிணற்றில் தண்ணீர் வற்றாமல் இருக்க, அப்பகுதியில் உள்ள தனது நிலத்திலிருந்து மழை காலத்தில் வெளியேறும் தண்ணீர் பள்ளத்தில் சென்று வீணாவதை தடுக்க, கிணற்றின் அருகே மழை நீர் சேமிப்பு தொட்டி ஒன்றையும் அமைத்துள்ளார். அந்த தொட்டியை சுமார் 6 அடி ஆழத்துக்கு அமைத்து அதிலிருந்து வெளியேறும் தண்ணீர் கிணற்றில் விழும் வகையில் பைப் அமைத்து கிணற்றுடன் இணைத்துள்ளார்.

இத்தகைய பெரும்முயற்சி செய்து சாதனை படைத்த இந்த ஏழை விவசாயை பார்க்கும் போது 'முயற்சித்  திருவினை யாக்கும் முயன்றின்மை இன்மை புகுத்தி விடும்' என்ற வள்ளுவரின் குறல் தான் நினைவுக்கு வருகிறது.

மீண்டும் நிகழ முடியாத முன்னுதாரணம்! - எம்.ஜி.ஆர். நூற்றாண்டு தொடக்கம்

 நன்றாக நினைவிருக்கிறது எனக்கு. கடந்த 2008-ல் தீபாவளிக்கு மூன்று வாரங்களே இருந்த அக்டோபர் முதல் வாரத்தின் வெள்ளிக்கிழமை அது. சென்னை புரசைவாக்கத்தில் மோட்சம் திரையரங்கம் அமைந்திருக்கும் மில்லர்ஸ் சாலையைக் கடந்து வில்லிவாக்கம் செல்வதற்காக பைக்கில் விரைந்துகொண்டிருந்தேன். காலை 11 மணிக்கு அந்தத் திரையரங்கை நெருங்கியபோது போக்குவரத்து நெருக்கடி. பேண்ட் வாத்தியம் முழங்க “புரட்சித் தலைவர் வாழ்க! பொன்மனச் செம்மல் வாழ்க! தர்மத்தின் தலைவன் வாழ்க! எங்கள் தங்கம் வாழ்க! எங்க வீட்டுப் பிள்ளை வாழ்க” என்ற கோஷங்கள் காற்றைக் கிழித்தன.

வெள்ளை பேண்டும் மஞ்சள் கட்டம்போட்ட சட்டையும் தலையில் ஆரஞ்சு நிற சன் ஷேட் தொப்பியும் அணிந்து நடுவில் நின்றுகொண்டிருந்தார் எம்.ஜி.ஆர். அவரது வலப்புறம் நடிகை லதாவும் இடப்புறம் அந்தத் தாய்லாந்து நடிகையும் பிரமாண்ட ப்ளக்ஸ் பேனரில் நின்றுகொண்டிருந்தார்கள். அந்த பேனருக்கு மாலை அணிவித்துக்கொண்டிருந்தபோது எம்.ஜி.ஆர். எப்படித் தங்களுக்குள் பதிந்திருக்கிறாரோ அதே வரிசையில் கோஷங்களை எழுப்பிக்கொண்டிருந்தார்கள். அந்த ரசிகர்கள் கூட்டத்தில் நாற்பது வயதுக்கும் குறைவான இளைஞர்கள் சரிபாதிக்கும் மேலாக இருந்தார்கள்.

100க்கும் அதிகமான பெண்களையும் பார்க்க முடிந்தது. எம்.ஜி.ஆர். நடித்து, இயக்கி, தயாரித்த அந்தப் படம் 35 ஆண்டுகளுக்குப் பின் வெளியானபோது அங்கே திரண்டு நின்ற அவரது ரசிகர்கள் ஒரு புதுப்பட வெளியீட்டைப்போல் கொண்டாடியது ஆச்சரியத்தை அளித்தது. தீபாவளிக்குப் புதுப்படம் வெளியாகும்வரை அந்தத் திரையரங்கில் ‘உலகம் சுற்றும் வாலிப’னுக்குக் கூட்டம் குறையவில்லை. தினசரி அந்தப் பாதையில் பயணித்து வந்த நானே இதற்குச் சாட்சி.

இன்று மோட்சம் திரையரங்கம் தன் சேவையை நிறுத்திக் கொண்டுவிட்டது. ஆனால் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ திரைப்படம் டிஜிட்டல் முறையில் மீள்பதிவு செய்யப்பட்டு வேறொரு மால் திரையரங்கில் வெளியாகலாம். அப்போதும் இந்த ரசிகர் கூட்டத்தை அதே உற்சாகத்தோடு அங்கே காண முடியும். அதுதான் எம்.ஜி.ஆர். எனும் ஒப்பிடமுடியாத நட்சத்திரம் ஏற்படுத்திச் சென்றிருக்கும் தாக்கம்.

திராவிட இயக்கத்தின் அறுவடை

அவதார புருஷர்களைப் பற்றி புராணக் கதைகள் வழியாக அறிந்திருந்த தமிழர்களுக்கு, தர்மத்தின் காவலனாக எம்.ஜி.ஆர். திரைப்படம் வழியே வசீகரித்த வரலாறு ஒரே நாளில் நடந்த திருப்பம் அல்ல. திராவிட இயக்கத்தின் பிரச்சாரக் கருவியாகத் திரையிலும் அரசியல் மேடைகளிலும் கவனம்பெறத் தொடங்கிய ஒரு வளரும் நட்சத்திரம், அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியோரின் திராவிட பகுத்தறிவு இலட்சியவாதத்தை உள்வாங்கிக்கொண்டிருந்தாலும் அதைத் தனக்கான பாதையாக அவர் முன்வைக்கவில்லை.

மாறாக, திரைப்படங்களின் வழியாகத் தன்னை ஊருக்கு உழைக்கும் ஏழைப்பங்காளன் என்ற புனித பிம்பமாக முன்னிறுத்திக்கொண்ட துருவ நட்சத்திரமாக எழுந்து நின்றார். அந்தப் புனித பிம்பம்தான் பின்னாளில் அரசியல் களத்திலும் அவருக்குக் கைகொடுத்தது.

சிறுசிறு வேடங்கள் ஏற்று நடித்துப் பின் கதையின் நாயகன் ஆனார். அதன் பின் சாகச நாயகனாகவும் அதற்கும் பின் நல்லவர்களைக் காக்கத் தீயவர்களை அடக்கி ஒடுக்கும் அவதார நாயகனாகவும் உயர்ந்து நின்ற எம்.ஜி.ஆர்., அரசியலிலும் பல்வேறு தடைகளைத் தாண்டித் தமிழர்களின் மனதில் இடம் பிடித்தார். தொடர்ந்து பதிமூன்று ஆண்டுகள் முதலமைச்சராக அவர் அமர்ந்தது தமிழக அரசியல் வரலாற்றின் தற்செயல் நிகழ்வு அல்ல.

விளிம்பு நிலை மக்களின் ரட்சகர்

‘புரட்சித் தலைவர்’, ‘மக்கள் திலகம்’ என்று ரசிகர்களாலும் தொண்டர்களாலும் அழைக்கப்பட்ட எம்.ஜி.ஆர். தன்னிடம் உதவி என்று கேட்டவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் அள்ளி அள்ளி வழங்கியவர் எனப் போற்றப்படுகிறார். ஏழை மற்றும் விளிம்பு நிலை மக்கள் மீதான அவரது பரிவும் கவனமும் தனித்துவமானது. தன் பால்ய காலத்தில் தாயார் சத்யபாமா, அண்ணன் சக்ரபாணி ஆகியோருடன் வறுமையும் பட்டினியும் சூழ, கும்பகோணத்தில் வசித்தபோது பெற்ற வாழ்வனுபவத்திலிருந்து அவர் பெற்றுக்கொண்டது.

இந்த அனுபவம்தான் அவரது பல திரைப்படங்களில் ‘ஏழைப்பங்காளன்’ காட்சிகளாக உருமாறியது. பின்பு அவர் அரசியலுக்கு இடம்மாறியபோது சமூகநலத் திட்டங்களிலும் பிரதிபலித்தது.

கேரளப் பெற்றோருக்கு இலங்கையில் பிறந்து, சிறு வயதிலேயே அப்பாவை இழந்தவர் எம்.ஜி.ஆர். குடும்பம் குடந்தைக்குப் புலம்பெயர்ந்தது. சிறு வயதில் பாண்டிச்சேரியில் முகாமிட்டிருந்த பாய்ஸ் நாடகக் கம்பெனியில் சேர்ந்து தமிழகம் முழுவதும் நாடோடியாய் அலைந்து திரிந்தார். திரைப்படங்களில் நடிக்க தாமதமாகவே வாய்ப்பு கிடைக்கிறது. நாயகனாக நடிக்கும் வாய்ப்பு அதைவிடத் தாமதமாகிறது.

நாயகனாக நிலைபெற்ற பிறகு அதில் திருப்தி அடைய மறுத்துப் புதிய சாகசத்தில் இறங்குகிறார். தன் வாழ்க்கையோட்டத்தின் வரைபடத்தைப் பிரதிபலிக்கும் விதமாகத் தான் நடித்து இயக்கிய படத்துக்கு ‘நாடோடி மன்னன்’ என்ற தலைப்பிட்டு ஒரு படத்தைத் தயாரித்து, இயக்கி, நடிக்க முடிவுசெய்கிறார். அந்தப் பட வெளியீட்டுக்கு முன் “ படம் வெற்றியடைந்தால் நான் மன்னன்; தோல்வி அடைந்தால் நாடோடி” என்று கூறியிருக்கிறார். அந்தப் படம் மாபெரும் வெற்றி பெற்று, திரை உலகின் முடிசூடா மன்னராக அவரை மாற்றியது. சாகச முயற்சி சாதனையாக மாறியது.

தனிப் பிறவி

எம்.ஜி.ஆருக்குப் பிறகு வந்த பலரிடத்தில் அவர் பாணியிலான கதைகளைத் தொட்டுக்கொண்டு நடிப்பதன் மூலம் மக்களிடம் செல்வாக்கை வளர்த்துக்கொண்டு அரசியலில் இறங்கலாம் என்ற எண்ணத்தையும் முயற்சியையும் பார்க்க முடிகிறது. திரை பிம்பத்தைக் கட்டமைக்கும் முயற்சிகள் பல வெற்றியடைந்தும் இருக்கின்றன. ஆனால் யாராலுமே எம்.ஜி.ஆர். அளவுக்கு அதில் வெற்றிபெற முடியவில்லை.

சினிமாவில் பெரும்பாலான நாயகர்கள் எம்.ஜி.ஆரைப் போல தர்மத்தைக் காக்கவே போராடுகிறார்கள். ஆனால் யாராலும் ‘தர்மத்தின் தலைவ’னாக, ‘மக்கள் திலக’மாக உருப்பெற முடியவில்லை. தன் படங்கள் மூலமாகச் சமூக உளவியலில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது எம்.ஜி.ஆரின் தனிப் பெரும் சாதனை. அந்த வகையில் அவர் தனிப் பிறவி. மீண்டும் நிகழ முடியாத முன்னுதாரணம்.

கமல், ரஜினி அலையில் தாக்குப்பிடித்த நாயகர்கள்! 80களின் சினிமா

 ‘ஜப்பானில் கல்யாணராமன்’ படத்தின் க்ளைமாக்ஸ் சண்டைக் காட்சி. கப்பலில் இருந்து கீழே விழும் நாயகன் கமல் ஹாசன், வில்லன் சத்யராஜின் கால்களில் சிக்கியுள்ள கயிற்றைப் பிடித்து மேலே ஏறுவார். ‘‘இவ்ளோ பெரிய ஹீரோ. வில்லனில் உதவியோடு ஏன் மேலே ஏற வேண்டும்” என்று படம் வெளியான 1985 ல் கமல் ரசிகர்கள் கேள்வியை எழுப்பினர். நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள வந்த கமலிடம் அப்போது அதற்கு விளக்கம் கேட்கப்பட்டது. ‘வில்லனாக நடித்திருந்தாலும் சத்யராஜ் மீது எனக்கு எப்போதுமே நம்பிக்கை உண்டு.

நிஜ வாழ்க்கையில் அவரை ஒரு தன்னம்பிக்கை நிறைந்த மனிதராகத்தான் பார்க்கிறேன். அந்த நம்பிக்கைதான் அந்தக் காட்சியைப் படமாக்கும்போதும் எனக்கு வந்தது” என்று சொன்னார். அதே நம்பிக்கையோடுதான் அடுத்தடுத்த ஆண்டுகளில் ராஜ்கமல் இண்டர்நேஷனல் பிலிம் தயாரிப்பில் தான் எடுத்த ‘விக்ரம்’, ‘கடமை கண்ணியம் கட்டுப்பாடு’ ஆகிய படங்களில் சத்யராஜுக்கு அழுத்தமான கதாபாத்திரங்கள் கொடுத்தார் கமல்.

இப்படிப்பட்ட காலகட்டம்தான் தமிழ் சினிமாவின் எண்பதுகளின் கட்டம். திரைத்துறையில் நம்பிக்கை அதிகமாகவும் பொறாமைக் குணம் குறைவாகவும் நிரம்பியிருந்த காலம் அது.

எம்.ஜி.ஆர்., சிவாஜியை அடுத்து அதே வரிசையில் ரஜினி, கமல் இருவரும் முன்னணி நாயகர்களாக ஒரு இடத்தை உருவாக்கி அதைத் தக்கவைத்துக்கொள்ளப் போராடிக்கொண்டிருந்த நேரம். அப்போது சத்யராஜ், விஜயகாந்த், கார்த்திக், பிரபு, மோகன், முரளி ஆகியோரும் களத்தில் இருந்தனர். ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாணியைப் பின்பற்றினார்கள்.

ராஜாவின் இசை

சமூகம் சார்ந்த படங்கள் வந்து கொண்டிருந்த காலகட்டத்தில் கதையின் கோணத்தை மாற்றி குணச்சித்திர விஷயங்களைச் சேர்த்து கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை ஏவி.எம், கவிதாலயா உள்ளிட்ட சில நிறுவனங்கள் கையில் எடுத்தன. அந்த நிறுவனங்களின் படங்களில் ரஜினி, கமல் இருவரில் ஒருவர் இடம் பிடித்தது அப்போதைய மற்ற நடிகர்களுக்கு கிடைக்காத ஒரு வாய்ப்பு என்றே சொல்லலாம்.

இசையமைப்பாளர் இளையராஜா ‘பிரியா’ படத்தில் ‘ஸ்டீரியோ போனிக்’ என்ற புதிய தொழில்நுட்ப இசையைப் புகுத்தி தனது இசையில் குறிப்பிட்ட சில வித்தியாசமான சத்தங்களை கொண்டு வந்தார். கதை, கதாநாயகர்களுக்கு இணையாக இளையராஜாவின் இசைக்கு மவுசு ஏற்பட்டது. மோகன், முரளி, ராமராஜன் மாதிரியான நாயகர்களின் படங்கள் இளையராஜாவின் இசை அமைந்தாலே படம் ஹிட் என்ற நிலைமை இருந்தது.

புதியவர்களை நம்பிய விஜயகாந்த்

தனக்கு அமையும் கதைகளில் மனதுக்குப் பிடித்தமான கதைகளைத் தேர்வு செய்து நடித்து வந்த விஜயகாந்த் ஒருகட்டத்தில் ஆபாவாணன், ஆர்.கே. செல்வமணி மாதிரியான ஜெயிக்க வேண்டும் என்று வந்த புதிய இயக்குநர்களைத் தன் பக்கம் இழுத்துக்கொண்டார். அதனால்தான் ‘செந்தூரப்பூவே’, ‘ஊமை விழிகள்’, ‘புலன் விசாரணை’ மாதிரியான படங்களைக் கொடுத்துத் தனித்து நின்றார். ரஜினிக்கு இணையாகப் பேசவும் பட்டார்.

நடிகர் மோகன் படங்களில் அவரது மேனரிஸம்தான் ஸ்பெஷல். ‘நம் பக்கத்து வீட்டுப் பையன் மாதிரிப்பா..!’ என்று அந்த நாட்களில் அவரும் ஒரு பட்டாளத்தைச் சேர்த்தார். அவரது படங்களுக்கு இளையராஜா பெரிய பலம். ‘குங்குமச் சிமிழ்’, ‘மௌனராகம்’, ‘உதய கீதம்’ இவை மோகனின் வெற்றிப் பட்டியலில் முக்கியமான படங்கள்.

சத்யராஜிடம் இருக்கும் தனித்துவம்தான் அவரது இன்றளவும் திரைப்பயணத்தைத் தீர்மானித்து வருகிறது. பார்வை, நக்கலான பேச்சு, எந்தக் கதாபாத்திரத்தையும் ஏற்கும் துணிச்சல்தான் இப்போதும் ஆடுகளத்தில் நின்றுகொண்டிருக்கிறார். அவரைப் பட்டை தீட்டியவர்களில் இயக்குநர் மணிவண்ணன் முக்கியமானவர். அதை சத்யராஜ் பல இடங்களில் பதிவு செய்துவருகிறார். படத்தின் பட்ஜெட், சூழல் உணர்ந்து சம்பளம், கால்ஷீட் உள்ளிட்ட விஷயங்களில் கெடுபிடி இல்லாமல் தன்னை இயக்குநர்களுக்கு அர்ப்பணிப்பவர். தயாரிப்பாளர்களுக்குப் பிடித்தமான நடிகரும்கூட.

அப்பாவின் பிள்ளைகள்

பாரதிராஜாவின் ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தின் வெற்றியால் உயரம் கண்டவர் கார்த்திக். அந்தப்படம் வெளியான அந்தக் காலகட்டத்தில் பதின் வயதினர் பலரும் தங்களை ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தில் வந்த விச்சுவாகவும், மேரியாகவும்தான் நினைத்துக்கொண்டனர். அந்த வெற்றியில் இளையராஜாவின் பங்களிப்பு அதிக கார்த்திக்கைப் போல அப்பாவின் நிழலில் நின்று வளர்ந்த மற்றொரு நாயகர் பிரபு.

சிவாஜியுடன் சேர்ந்து நடித்துக்கொண்டிருந்த வரைக்கும் பெரிதாக அடையாளம் எதுவும் இல்லை. ‘அக்னி நட்சத்திரம்’, ‘நினைவுச் சின்னம்’, ‘சின்னதம்பி’ மாதிரியான படங்கள் அவருக்குத் திருப்புமுனை. சின்ன வயதில் சிவாஜியைப் பார்த்த மாதிரி இருக்கிறார் என்றே பலரும் சொன்னார்கள்.

ரஜினி கமல் நட்பும் ராஜ்யமும்

இன்றைய இளம் தலைமுறை விஜய், அஜித் ரசிகர்களுக்குள் நேரடியாகவும், சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும் வாக்குவாதங்கள் எப்படி நடக்கிறதோ, அதேபோல எம்.ஜி.ஆர்., சிவாஜி ரசிகர்களுக்குள் அந்தக் காலகட்ட பின்னணியில் சண்டைகளும், சர்ச்சைகளும் இருக்கவே செய்திருக்கிறது. அதுவே ரஜினி, கமல் இருவரது ரசிகர்களுக்குள் சண்டை வந்ததில்லை.

அதற்கு முக்கியக் காரணம், தனித்தனிப் பாதையைத் திரையில் வகுத்துக்கொண்டதுடன், மேடையில் அவ்வப்போது இருவரும் ஒன்றாகச் சேர்ந்து, ‘நாங்கள் மிக நெருக்கமான நண்பர்கள். நீங்களும் அப்படித்தான் இருக்க வேண்டும்’ என்று பதிவு செய்து வந்தனர். அதை இன்றைக்கும் கடைப்பிடித்து வருகிறார்கள்.

எந்த மாதிரியான கதையைத் தேர்வு செய்ய வேண்டும், தன்னை யார் இயக்க வேண்டும், எந்த நிறுவனத்துக்குப் படம் பண்ண வேண்டும் இப்படி எல்லாவற்றையும் திட்டமிட்டுக்கொண்ட ரஜினி, கமல் இருவரும், தாங்கள் வளந்துவரும் போதே தனக்கான ரசிகர் பட்டாளத்தையும் வளர்த்தெடுத்தார்கள். ‘மாஸ்’ ஹீரோ என்ற அடையாளத்தைப் பெற்ற பிறகும் அதைச் செய்தார்கள். அந்தக் காலகட்டத்தில் உதித்த மற்ற ஹீரோக்கள் அதைச் சரியாகச் செய்தார்களா என்றால் இல்லை. படம் நடிப்பது மட்டுமே இலக்காகக் கொண்டதோடு சரி. ஆனால், ரஜினி, கமல் இருவரும் ரசிகர்களுக்கான படங்கள் கொடுப்பதில் தெளிவாக இருந்தனர்.

குறிப்பாகத் தங்களை நேசிக்கும் ‘ஏ; ‘பி’ அன்ட் ‘சி’ வரிசை ரசிகர்களுக்கான படங்களை மாறிமாறிக் கொடுப்பதிலும், அதற்கான அதிகம் மெனெக்கெடு வதிலும் நேரம் செலுத்தினார்கள். இந்த ரசிகர்கள் பட்டாளமே அவர்களது படங்களின் வியாபார வளர்ச்சிக்குப் பெரிய பாலமாகவும் இருந்தது.

இன்றளவும் அந்த ‘மாஸ்’ சமஸ்தானம் இருக்கவும் செய்கிறது. அப்படிப்பட்ட ரஜினி- கமல் என்கிற இருபெரும் நட்சத்திரங்களின் அலையில் தாக்குப்பிடித்து நின்ற சத்யராஜ், விஜயகாந்த், மோகன், முரளி, கார்த்திக், பிரபு ஆகியோர் அதன் காரணமாகவே திரை வரலாற்றிலும் இடம்பிடித்திருக்கிறார்கள்.