Tuesday 19 January 2016

“இந்தியாவின் சாணக்யதனத்தால் இந்தியாவிடம் மண்டியிட்ட நேபால்………”

உலகத்திலே ஐரோப்பாவை அடுத்து இந்திய நேபாள் நாட்டினர் மட்டுமே இரண்டு நாட்டுக்கும் பாஸ்போர்ட் கூட இல்லாமல் போய் வர வேலை செய்ய குடியமர முடியும். அப்படி ஒரு அன்னோன்ய நாடாக இருந்த இந்திய நேபாள் ரிலேஷன் 2001 மன்னராட்சி முடிவுக்கு வந்ததில் இருந்து நேபாளுக்கு கெட்ட நேரம் ஆரம்பதித்தது. அதற்க்கு பிறகு 2006 ஆம் ஆன்டு வரை உள் நாட்டு போர் 2006 ஆம் ஆண்டு ஒரு வகையில் முடிவுக்கு வந்தாலும் பிரச்சினை நேபாளுக்கு தொடர்ந்து இருந்து கொண்டே தான் இருந்தது.

சமீப கால அதாவது 2015 ஆம் ஆண்டு நேபாளுக்கு மிக மோசமான ஆண்டாக அமைந்தது. ஏற்கனவே நில நடுக்கம் காத்மன்டு மற்றும் பல நேபாள் முக்கிய நகரங்களுக்கு வந்து அனேக மக்கள் வறுமை கோட்டுக்கு கீழ் சென்றது குறிப்படதக்கது. அதன் பிறகு 20 செப்டம்பர் 2015 கொண்டு வர அரசியல் சட்ட மாற்றத்தை இந்தியா எதிர்த்தது. அதாவது மாதேஷி என்னும் ஒரு இனத்துக்கு இந்த புது கான்ஸ்டிடியூஷனில் மிகுந்த பாதிப்புகள் உண்டு பண்ணியது. நேபாள் பெண்ணை மனப்பது, நேபாள் நாட்டின் குடியுரிமை மற்றூம் அவர்களுக்கான சம உரிமை மற்றூம் உள்ளூர் போலீஸின் அட்ராசிட்டியை எதிர்த்து இந்தியா கோரிக்கை வைத்த போது நேபாள் இதை மாற்ற இயலாது என உறுதியுடன் கூறியதால் இந்தியா தன் சானக்யதனத்தை காட்ட தொடங்கியது.

ஏற்கனவே 1989 ஆம் ஆண்டு நேபாள் சைனாவிடம் ஆயுதம் வாங்க எத்தனித்த போது 21 நேபாள் இந்தியா பார்டர்களில் 19 பார்ட்டர்களை இந்தியா மூடி நேபாளை ஸ்தம்பிக்க வைத்தது. இப்போதும் அது போல அனைத்து எல்லைகளையும் இந்தியா மூடியதால் இந்தியாவை பெட்ரோல் டீஸல் மற்றூம் காய்கறி முதல் மருந்துகள் வரை இந்தியாவை நோக்கி எதிர்பார்த்து அன்றாடம் வாழ்க்கையை நடத்தும் நேபாளுக்கு சோதனைகாலம் ஆரம்பம் ஆகியது. 104 ரூபாய் ஒரு லிட்டர் பெட்ரோல் என விற்ற பெட்ரோல் 300 – முதல் 500 வரை லிட்டருக்கு விற்க ஏற்கனவே 400 கோடி அமெரிக்க டாலர்கள் நேபாளின் நில நடுக்க பேரிடருக்கு வந்த உதவியை அரசு மக்களூக்கு வழங்காமல் பெரும் போராட்டம் எங்கும் வெடிக்க நேபாள் இனிமேல் தனியார் கார், வண்டிகள் தொழிற்சாலைக்கு பெட்ரோல் இல்லை என அறிவிக்க அக்டோபர் 1 2000க்கு மேற்பட்ட தொழிற்ச்சாலைகள் முட, ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு மூன்றூ முதல் நாலு நாள் வரை வரிசையில் காக்கும் கொடுமை இன்றூ அந்த நாட்டில் காணமுடியும். அனைத்து வெளி நாட்டின் விமானங்களுக்கு பெட்ரோல் இல்லாமல் போக அனைத்து உள் வெளி நாட்டி சர்வீஸ்களும் 85% போக்குவரத்தை நிறுத்த மக்கள் நடராஜா மற்றூம் சைக்கிள் சவாரி மூலம் தான் பயணத்தை தொடர முடிந்தது.

நேபாள் சைனாவுடன் பெட்ரோல் ஒப்பந்தத்தை போட இந்தியா இன்னும் இறுக்கி இருந்த கொஞ்ச நஞ்ச முக்கிய எல்லைகளையும் மூடி நெருக்கடி கொடுக்க கடைசியில் நேபாள் மண்டியிட்டு இந்தியாவின் வழிக்காட்டுதலின் படி ஆட்சி நடத்துவதாக அறிவித்து கையேந்தி நிற்பது தான் ஆக லேட்டஸ்ட் செய்தி. போன மாதம் இந்தியாவின் போலீஸ் நாலு நேபாள் கடத்தல் காரர்களை அந்த நாட்டுகுள் துரத்தி சென்று சுட்டு கொன்று நேபாளை மிரள வைத்தது. ஐ நா, அமெரிக்கா, பிரிட்டன் என அத்தனை நாட்டுக்கும் நேபாள் இந்தியாவுக்கு நெருக்கடி கொடுங்கள் என கூறியும் எந்த ஒரு நாடும் இதை கண்டுகொள்ளவே இல்லை என்றாலும் இந்தியாவின் பீகார் தேர்தல் பிஜேபிக்கு சாதகாமாக இல்லாமல் போனது இதுவும் ஒரு விஷயமே.

0 comments:

Post a Comment