Monday 25 January 2016

ரத்தப் கொதிப்பை தடுக்க உதவும் உணவுகள்!

நம்மைச் சுற்றி எல்லா இடத்திலும் மூன்று நபருக்கு ஒருவர் ரத்தக் கொதிப்பு உடையவராகத் தான் இருக்கின்றார். இது உலகெங்கிலும் உள்ள ஆய்வு முடிவு. குறிப்பாகச் சொல்லப்போனால், 30 வயதினை அடையும் முன்பே 20-25 சதவீத மக்கள் ரத்தக் கொதிப்பு நோய்க்கு ஆளாகின்றனர். மூட்டு வலி, முதுகு வலி போல், முதலில் எந்த அறிகுறியும் பலருக்கு ரத்தக் கொதிப்பு காட்டுவது இல்லை. அநேகருக்கு பல காலம் ரத்தக் கொதிப்பு இருந்தும், நலமோடு இருப்பது போலவே இருப்பர். மாரடைப்பு (அ) பக்கவாதம் போன்ற பாதிப்புகள் திடீரென ஏற்படும்போதே ரத்தக் கொதிப்பு பாதிப்பு தெரியவரும்.

இதன் காரணமே நன்றாக இருக்கிறேன் என்று சொல்லும் ஒருவரையும், மருத்துவர் சில அடிப்படை மருத்துவ பரிசோதனைகளை செய்துக் கொள்ள சொல்கின்றனர். ஒரு 35 வயது மனிதன் சரியான ரத்த அழுத்த நிலையில் வாழும்போது அவன் ஆயுள் சுமார் 75 வயது செல்ல முடியும். இளவயதிலேயே ரத்தக் கொதிப்பு எனும்போது அவன் ஆயுள் சுமார் 20 வருடங்கள் குறைந்து விடுகின்றது. ரத்தக் கொதிப்பிற்கும், சர்க்கரை நோய்க்கும் நிரந்தர தீர்வு என்பது இல்லை. நல்ல கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க முடியும்.

40-50 வருடங்கள் முன்பு வரை ஒருவருக்கு உயர் ரத்த அழுத்தம் என்றால், மருத்துவர்கள் அவர்களை டென்ஷன் உள்ள வேலை, கடும் உழைப்புள்ள வேலை இவைகளிலிருந்து கண்டிப்பாக ஓய்வு எடுத்துக்கொள்ள சொல்வார்கள்.

ஆனால், இன்று நிலைமை வேறு. மிக நல்ல மருந்துகள் ஒருவரின் வாழ்க்கை நிலைமையினை காப்பாற்றி விடுகின்றன. ஒருவருக்கு ரத்த அழுத்த பாதிப்பு அபாயம் உள்ளதினை அவர்களே தெரிந்துக் கொள்ளும் சில அறிகுறிகள்:

* எதிலும் அதிக ஆர்வமின்மை.

* அதிக எடை.

* ரத்த உறவுகளில் யாருக்கேனும் இந்த பாதிப்பு இருப்பது.

* 35+

* மாதவிடாய் நின்ற பெண்மணிகள்.

* புகை, மது பழக்கம் உடையவர்.

* கருத்தடை மாத்திரை எடுத்துக் கொள்ளும் பெண்கள்.

* உடல் உழைப்பு இல்லாதோர்.

இப்படி அதிக ரத்த அழுத்தம். உணவில் கவனம் செலுத்தினால் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்கலாம்.

முதலாவதாக, சுவாசம் சீராக வேண்டும். தீர்க்கமாக மூச்சு இழுத்துவிட்டுப் பழக வேண்டும். ரத்தக் கொதிப்பு என்பது ரத்தக் குழாய்களையும் இதயத்தையுமே பொறுத்தது. ஆகவே அது உடலில் ஓடும் ரத்தத்தைப் பொறுத்திருக்கிறது.

தினசரி கவனமாகப் பயிற்சி செய்யுங்கள். இது உடலை நன்றாக வைக்கும். ரத்த ஓட்டம் சரியாக நடைபெறுவதற்கு இது உதவி செய்யும். போதுமான ஓய்வு அவசியம். உடல் அதிர்ச்சியும் மனக் கிளர்ச்சியும் ரத்தக் கொதிப்பை அதிகரிக்கும்.

மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மலச்சிக்கலால் ரத்த ஓட்டம் மெதுவாகி, கொதிப்பு ஏற்படக் காரணமாகிறது.

இறைச்சி உணவுகளைக் குறைத்து, பச்சைக் காய்கறிகள், பழங்கள், பால் ஆகியவற்றை அதிகம் சாப்பிட வேண்டும்.

வெள்ளைப் பூண்டு, ரத்தக் கொதிப்பைத் தணிக்கும். பூண்டைச் சிறிது சிறிதாக நறுக்கி, ஒரு கோப்பைப் பாலில் காய்ச்சி, இரவில் சாப்பிட்டால் நல்ல டானிக் போல் அமையும்.

ரத்தக் கொதிப்புக்கு மன அமைதியின்மையும் ஒரு முக்கியக் காரணம். கோபம், பொறாமை, பகை, கவலை போன்ற எதிர் உணர்ச்சிகள் மூளையைப் பாதிப்பதோடு, ரத்தக்கொதிப்பையும் அதிகமாக்குகின்றன. எனவே எப்போதும் மனதை அமைதியான எண்ணங்கள், மகிழ்ச்சியால் நிரப்புவது அவசியம்.

0 comments:

Post a Comment