Thursday 18 February 2016

விசாரணை! ரஜினி கமல் பாராட்டியது சரியா?

“விசாரணை நல்ல படம்தான். இல்லேன்னு சொல்லல. இதுக்கு முன்னாடி தமிழ்சினிமாவுல இதே மாதிரி ட்ரென்ட் செட்டிங் படங்கள் வரும்போது இந்த ரஜினியும் கமலும் எங்க போனாங்க? இப்ப வெற்றிமாறனும் தனுஷும் சம்பந்தப்பட்டிருக்காங்கன்னு தெரிஞ்சதும், ஓடிவந்து பாராட்டுறாங்களே… இது நியாயமா?” இதுதான் கோடம்பாக்கம் எங்கும் பேச்சாக இருக்கிறது. சினிமாவில் நிகழும் அன்றாட அடிதடிகளை அசை போடும் உதவி இயக்குனர்களின் இந்த கேள்வி காற்று வாக்கில் போய் சேருமா? சேர்ந்தாலும் பதில் வருமா? இதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும். ரஜினி கமல் இருவருக்கும் விசாரணை படத்தின் எந்த வெர்ஷன் போட்டுக் காட்டப்பட்டது தெரியுமா?

உலக திரைப்பட விழாக்களுக்கு அனுப்புவதற்கென்றே ஒரு வெர்ஷன் வைத்திருக்கிறார்கள் அல்லவா? அதைதான் காண்பித்தார்களாம். அதில் ரீரெக்கார்ட்டிங் இருக்காது. பாடல் இருக்காது. காட்சிகள் சென்சார் செய்யப்பட்டிருக்காது. அதை பார்த்துவிட்டு புளகாங்கிதப்படும் இவர்கள், பொதுமக்களை பார்க்க தூண்டுகிறார்கள். அதில் அவர்கள் பார்த்தது இல்லாவிட்டால், அப்படி சொல்வதே தவறுதானே?

இப்படியெல்லாம் கேள்விகளை வளைத்து வளைத்து சொருகுவதால், கோடம்பாக்கத்தின் டீக்கடை பார்லர்களில் இன்னும் இன்னும் ரத்தக்கொதிப்பு?

0 comments:

Post a Comment