Thursday 28 January 2016

கெத்து தமிழ் வார்த்தையா? நீதிமன்றத்தில் அரசு தரப்பு விளக்கம்!

உதயநிதி ஸ்டாலின், எமிஜாக்ஸன் நடிப்பில் திருக்குமரன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் கெத்து. இப்படத்தை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இப்படத்திற்கு வரிவிலக்கு அளிக்கப்படாததால், படத்தின் தயாரிப்பு நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில் “கெத்து” என்பது தமிழ் வார்த்தை தான் என்றும், சமீபத்தில் வெளியான சில படங்களுக்கு வரிவிலக்கு கொடுக்கப்பட்டுள்ளன. இருப்பினும் கெத்து என்பது தமிழ் வார்த்தை இல்லை என்றுகூறி வரிவிலக்கு தரமறுக்கின்றனர் என்று பட தயாரிப்பு சார்பில் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.

அரசு சார்பில் இதற்கான விளக்கம் அளிக்கப்பட்டது, அதில், “ கெத்து என்ற தமிழ் வார்த்தைக்கு இணையாக பயன்படுத்தப்பட்டுள்ள ஆங்கில பெயரில் முதல் எழுத்து ‘கே’ என்பதற்குப் பதிலாக ‘ஜி’ என உள்ளது. இதனால் வரிவிலக்கு அளிக்க முடியாது. மேலும் கெத்து என்ற சொல் தமிழ் வார்த்தை கிடையாது” என்று வாதிட்டார். தமிழ்வளர்ச்சித்துறை மண்டல இயக்குநரும் தனது பதில் மனுவில் கெத்து என்பது தமிழ்வார்த்தை இல்லை என்றே குறிப்பிட்டுள்ளார்.

எதிரெதிர் வாதங்களைக் கேட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை வரும் ஜனவரி 29ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.

0 comments:

Post a Comment