Thursday 21 January 2016

1,000 ரூபாய் நோட்டுகளை தவறாக அச்சடித்த ரிசர்வ் வங்கி


இந்திய ரூபாய் நோட்டுகளின் முக்கியப் பாதுகாப்பு அம்சமாகக் கருதப்படும் வெள்ளி நூல் இல்லாமல், 5AG, 3AP வரிசையில் சுமார் 30,000 கோடி ரூபாய் மதிப்பிலான 1,000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி அச்சடித்துள்ளது. இதில் 20,000 கோடி ரூபாய் ரிசர்வ் வங்கியிடமும், 10,000 கோடி ரூபாய் புழக்கத்தில் உள்ளதாகவும் ஆர்.பி.ஐ., தெரிவித்துள்ளது. இந்நிலையில், 5AG, 3AP வரிசையில் உள்ள 1,000 ரூபாய் நோட்டுகள் யாவும் செல்லாது என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. 5AG, 3AP வரிசை நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக்கொள்ளலாம் எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

தவறுதலாக அச்சடிக்கப்பட்ட 1,000 ரூபாய் நோட்டுகள் அனைத்தும், ம.பி., ஹோஷன்காபாத்தில் உள்ள SPMCIL அச்சகத்தில் அச்சடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தவறுதலாக அச்சடிக்கப்பட்ட 1,000 ரூபாய் நோட்டுகள் அனைத்தையும் தீயிட்டு எரிக்க ஆர்.பி.ஐ., முடிவு செய்துள்ளது. இதுகுறித்து ரிசர்வ் வங்கி SPMCIL அச்சகத்தின் நிர்வாக இயக்குநருக்கு ஆர்.பி.ஐ., நோட்டீஸ் அனுப்பியுள்ளது. SPMCIL அச்சகத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.

0 comments:

Post a Comment