Sunday 24 January 2016

''அம்மா உத்தரவால் மழை '' : ஆர்.டி.ஐ கேள்விக்கு பதில் அனுப்பும் அலுவலர்கள்!

இரண்டு மாதங்களுக்கு முன்பு தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மழை வெளுத்து வாங்கியது. அப்போது ரமணனுக்கு அடுத்து நெட்டிசன்களால் டிரெண்டிங்கில் இடம் பிடித்தவர் சேலம் மாவட்ட ஆட்சியர் சம்பத்.

மழை  சம்பந்தமாக பத்தரிக்கையாளர்களை சந்தித்து சம்பத் போட்டாறே ஒரு போடு. " மாண்புமிகு அம்மா அவர்களின் உத்தரவுப்படி சேலம் மாவட்டத்தில் நல்ல மழை பெய்துள்ளது." என்று கூற.'தாய் பாசத்தில் தங்களையே மிஞ்சிவிட்டாரே' என்று அமைச்சர்கள் தவித்து போனார்கள். ' வாய் தவறி வந்துவிட்டது.' என்று கலெக்டர் கெஞ்சினாலும் அவரை விடுவதாய் இல்லை.

" அம்மா உத்தரவிட்டு நல்ல மழை பெய்தது" என்று கூறியிருந்தீர்கள் அந்த உத்தரவு நகலை அனுப்பவும் என்று சேலம் ஆட்சியர் அலுவலகத்திற்கு ஆர்டிஐ விண்ணப்பங்கள் குவிந்தவண்ணம் இருக்கின்றன.தற்போது அதற்கெல்லாம் கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்கிக்கொண்டு சீரியஸாக பதில் அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள்.

வேலூரை சேர்ந்த தகவல் அறியும் உரிமை ஆர்வலர் குணசேகரன் இதே போல் ஒரு விண்ணப்பத்தை போட.."இந்த கேள்விக்கு இவ் அலுவலகத்தில் ஆவணங்கள் ஏதும் இல்லை" என்று பதிலனுப்பி இருக்கிறார்கள். குணசேகரனிடம் இதுகுறித்து கேட்டோம் "நான் இதுவரை தகவல் அறியும் சட்டம் மூலம் பல பிரச்னைகளுக்கு தீர்வு கண்டுள்ளேன். ஆட்சியர் சம்பத் பேசியது குறித்து தகவல் கேட்டிருந்தேன் பதிலனுப்பியிருக்கிறார்கள்.

அதிமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பதவிக்காக அம்மா புகழ் பாடுவதே சகித்துக்கொள்ள முடியவில்லை. அதன் உச்சகட்டமாக அடுத்தவர் கொண்டு வந்த நிவாரண பொருட்களில் அம்மா ஸ்டிக்கர் ஓட்டி அழிச்சாட்டியம் பண்ணினார்கள். இப்படி இருக்க ஒரு அரசு அதிகாரியான ஆட்சியரே 'மாண்புமிகு அம்மா அவர்கள் உத்தரவுப்படி நல்ல மழை பெய்தது' என்று கூறியிருக்கிறார். தெரியாமல் வாய் தவறி வந்துவிட்டது என்று வேறு கூறியிருக்கிறார். வாய் திறந்தாலே ஆட்டோமேடிக்காக மாண்புமிகு அம்மா என்று வருகிறது என்றால் என்ன சொல்வது இதை." என கூறினார்.

அடுத்ததாக அம்மா கால் சென்டரான 1100வை அழைத்து புகார் அளிக்க முடியவில்லை. நம்பர் பிசி, நாட் ரீச்சபள் என்றே வருகிறது. அம்மா கால் சென்டர் பற்றியே புகார் அளிக்க வேண்டியிருக்கிறது. அதற்கு ஏதும் தனி நம்பர் இருக்கிறதா என்று கேட்க இருக்கிறேன்."என்கிறார்.

பின்றீங்க மக்களே!

0 comments:

Post a Comment