Sunday 24 January 2016

1 லட்ச ரூபாய்க்கு 'வாட்டர் ப்ரூஃப்' புடவை! - முதல் கஸ்டமர் ஆன மாநில முதல்வர்!

அரசியல், எலெக்சன், கட்சி - இதையெல்லாம் தாண்டி ‘பரபர’ மூடிலும் பளபளவென்று ஜாலியாக இருப்பவர் கர்நாடக முதல்வர் சித்தராமைய்யா.

கட்சிப் பொதுக் குழுக்களில் கலந்து கொள்வதைவிட கடைத் திறப்பு போன்ற பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில் ஆர்வம் அதிகம் சித்தராமைய்யாவுக்கு. அண்மையில் ஒரு புடவைக் கடைத் திறப்பு விழாவுக்கு சிறப்பு விருந்தினராகச் சென்றவர், அந்தப் புடவைக் கடைக்கு முதல் கஸ்டமரும் ஆகியிருப்பதுதான் இப்போது கர்நாடக ஸ்பெஷல்.

கர்நாடக மாநிலம் தவாங்கீர் என்னும் இடத்தில், ‘கர்நாடகா சில்க் இண்டஸ்ட்ரீஸ் கார்ப்பரேஷன்’ எனும் புடவைக் கடையைத் திறந்து வைக்க சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டார் சித்தராமைய்யா.

ஷோரூமைத் திறந்துவைத்துவிட்டு, ‘கடையில் என்னப்பா ஸ்பெஷல்?’ என்று வழக்கம்போல் ஜாலி மூடில் விசாரித்திருக்கிறார்.

அப்போது ‘வாட்டர் ப்ரூஃப்’ என்னும் புடவை பற்றித் தகவலறிந்தவர், ‘‘உண்மையிலேயே இது நனையாதுல்ல?’’ என்றபடி, ஒரு லிட்டர் குடிநீரை புடவையில் ஊற்றினாராம். என்ன ஆச்சர்யம்!

பந்துபோல, புடவையில் தண்ணீர் உருண்டு விளையாடியது. ஒரு சொட்டு நீர்கூட புடவையில் இறங்காததைக் கண்டு வியந்தவர், ‘‘மழையில தைரியமா இதைப் போட்டுக்கிட்டுப் போகலாம். என் மனைவிக்கு இது ஒண்ணு பேக் பண்ணிடுங்க!’’ என்று, வரியோடு 1,09,385 ரூபாய் பில் செட்டில் செய்துவிட்டு, பார்சலோடு கிளம்பி விட்டார்.

முதல்வரின் இந்த பர்ச்சேஸுக்குப் பிறகு சம்பந்தப்பட்ட அந்த ‘வாட்டர் ப்ரூஃப்’ புடவைக்கு, இப்போது கர்நாடகாவில் செம டிமாண்டாம்!

0 comments:

Post a Comment