Wednesday 20 January 2016

50 ஆண்டுகளுக்கு பிறகு… ரஜினிக்காக விலகும் தடை..!

ஒரு படம் வெற்றியடைந்தால் அதனை பல மொழிகளில் டப்பிங் செய்வார்கள். சில நேரங்களில் நேரடி மொழி படங்களை விட டப்பிங் படங்களுக்கு அதிக மவுசும் ஏற்படுகிறது.

கேரளா மற்றும் ஆந்திராவில் நேரடி தமிழ் படங்களும் அல்லது டப் செய்யப்பட்ட படங்களும் வெளியாவதால் அங்குள்ள ஒரிஜினல் படங்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாகி வருகிறது. எனவேதான் கர்நாடகாவில் டப்பிங் படங்களுக்கு தடை விதித்தனர். கிட்டதட்ட 50 ஆண்டுகளாக எந்த மொழி படங்களையும் அவர்கள் அங்கே அனுமதிப்பதில்லை. ஏன் ஹாலிவுட் படங்கள் கூட கன்னடத்தில் டப் செய்யப்படுவதில்லை.

ஆனால் தற்போது முதன்முறையாக ரஜினியின் கோச்சடையான் படத்திற்காக இந்த தடை விலகுகிறது. இந்தியாவின் முதல் மோஷன் கேப்சரிங் படமான இது கடந்த 2014ஆம் ஆண்டு தமிழ், தெலுங்கு, பஞ்சாபி, மராத்தி, இந்தி மற்றும் போஜ்புரி ஆகிய 6 மொழிகளில் வெளியானது.

தற்போது இப்படம் கன்னட மொழி பேசவிருக்கிறதாம். இதற்கான ஸ்கிரிப்ட் பணிகள் தற்போது நடைபெறுவதால் டப்பிங் முடித்தபின் வெளியிட இருக்கிறார்கள். டப்பிங் பணிகளுக்கு மட்டும் ரூ. 50 லட்சம் வரை செலவாகியுள்ளதாம்.

0 comments:

Post a Comment