Wednesday 20 January 2016

ரோபோக்கள் வேலைக்குத் தேவை! – விரைவில் இப்படியொரு அறிவிப்பை ஆங்காங்கே பார்க்கலாம்!


ரோபோக்களின் வரலாறு பழமையானது. புராண காலங்களிலே, செயற்கை மனிதர்களின் கதாபாத்திரங்களை உருவாக்கினர். அவற்றின் தற்கால வடிதான் ரோபோ. ஜப்பானியர்களே நவீன ரோபோக்களை உருவாக்கினர். முதல் ரோபோவை, 1954ம் ஆண்டு ஜார்ஜ் தேவோல் என்பவர் வடிவமைத்தார். அதை முதலில் “யுனிமேட்’ என அழைத்தனர். இது 1960ம் ஆண்டு ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு விற்கப்பட்டது. இது வெப்பமான உலோக துண்டுகளை கையாள பயன்படுத்தப்பட்டது.ரோபோ என்பதற்கு, மனிதன் இடும் கட்டளைகளை, நிறைவேற்றும் இயந்திர மனிதன், என பொதுவாக கூறலாம். ரோபோ எனும் சொல்லை முதன்முதலில் செக் குடியரசு எழுத்தாளர் காரெல் கேபெக் என்பவர் 1920ம் ஆண்டு பயன்படுத்தினார். அவரது ஆர்.யு.ஆர்., எனும் நாடகத்தில் ரோபோ கதாபாத்திரத்தை அறிமுகம் செய்தார். மனிதர்கள் போல் தோற்றம் கொண்ட இயந்திரங்கள், தொழிற்சாலையில் வேலை செய்வது போல், காட்சி அமைத்திருந்தார். ரோபோ என்பதற்கு செக் மற்றும் ஸ்லாவிக் மொழிகளில் கடும் தொழில், கடும் உழைப்பு என பொருள். இதனிடையே மனிதர்களுக்கு பதிலாக தானியங்கி ரோபோக்களை நிறுவும் முறை தொழில் நிறுவனங்களில் அதிகரித்து வருகிறது.

இப்படி, மனிதர்களுக்கு மாற்றாக எந்திரங்களையும், எந்திர மனிதர்களையும் நிறுவி வருவதால் அடுத்த 5 ஆண்டுகளுக்குள் சுமார் 50 லட்சம் வேலைவாய்ப்புகளை இழக்க நேரிடும் ஆபத்து உள்ளதாக உலக பொருளாதார பேரவையின் பிரபல ஆய்வு ஒன்று அதிர்ச்சிகர தகவலை வெளியிட்டுள்ளது. புதிய தொழில்நுட்பங்களால் வேலைவாய்ப்புகளுக்கு ஏற்படும் சவால்களை பட்டிய லிட்டுள்ளது இந்த ஆய்வு.ஐ.நா. அமைப்பின் ஒரு அங்கமான சர்வதேச தொழிலாளர் அமைப்பும் ஏற்கனவே ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டிருந்தது. அதாவது, வரும் 2020-ம் ஆண்டுக்குள் ஒரு கோடியே 10 லட்சம் வேலைவாய்ப்புகள் குறையும் அபாய நிலை உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.குறிப்பாக, ஒரு புதிய வேலை உருவானால் அதேநேரத்தில் ஏற்கனவே இருக்கும் 3 வேலைவாய்ப்புகள் மறையும் நிலை ஏற்படும் என எச்சரித்துள்ளது.

அதே சமயம் விஞ்ஞான வளர்ச்சியின் உச்சகட்டமாக இன்னும் 3 ஆண்டுகளில் சுயமாக சிந்தித்து, பேசும் ரோபோக்களை பார்க்கப் போகிறோம். இவை மனிதனிடம், உரையாடவும், விவாதங் களில் பங்கேற்கவும் இருக்கிறது என்றால் நம்புவீர்களா. நம்பித்தான் ஆக வேண்டும். அதற்கான ஆய்வை ஸ்காட்லாந்தில் உள்ள அபெர்டீன் பல்கலை துவக்கியுள்ளது. இந்த ஆராய்ச்சி சாத்தியமானால், உலகமே வியப்படையும். இந்த புத்தசாலித்தனமான தொழில்நுட்பம், மனிதனின் வாழ்க்கை முறையையே மாற்றிவிடும். இது பற்றி அபெர்டீன் பல்கலை தலைமை ஆராய்ச்சி யாளர், டாக்டர் வாம்பெர்டோ கூறுகையில், “இதற்கான சாப்ட்வேர் இன்னும் சில ஆண்டுகளில் கிடைக்கும்,’ என நம்பிக்கையுடன் கூறுகிறார். மனிதனின் வழிகாட்டுதல் இல்லாமல், தானா கவே சிந்தித்து, இவை இயங்கக் கூடியவை. இந்த ரோபோவிடம், ஒரே நேரத்தில் ஒருவர் மட்டும் கலந்துரையாட முடியும். பேசும் ரோபோக்களைப்போல, பேசும் திறன் கொண்ட கம்ப்யூட்டர் கள் தயாரிப்பதற்கான முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த தொழில்நுட்பங்கள் வெற்றி அடைந்தால், மனிதர்களின் அன்றாட வாழ்க்கையில் மாற்றங்கள் உருவாகும். விண்வெளி, ஆழமான கடல், அணு உலை பாதுகாப்பு போன்றவற்றில் தற்போது ரோபோக்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த ரோபோக்களை விட, புதிய ரோபா அதிக திறன் மிக்கது. குறிப்பிட்ட பணியை மனிதன் செய்யச் சொல்லும்போது, அது முடியாவிட்டால், “எனக்கு தெரியவில்லை’ என இந்த ரோபோக்கள் பதில் சொல்லும். இந்த ஆய்வு வெற்றியடையும் நாளை, உலக மக்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இதையடுத்து சுய சிந்தனை கொண்ட ரோபோக்களால் எதிர்காலத்தில், மனித குலத்திற்கே ஆபத்து வரும் அபாயம் இருக்கிறது என்றும் ஒரு கருத்து உள்ளது. எக்காலத்திலும் அப்படி ஒரு சூழ்நிலை வந்து விடக் கூடாது என்பதற்காக, புதிய ரோபோக்களில் சில பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.

1.இந்த ரோபோக்கள், மனிதனை எந்நேரத்திலும் எதிர்க்காது. தேவைப்பட்டால், மனிதர்கள் இவற்றை அழிக்கும் வண்ணம் உருவாக்கப்பட உள்ளது.

2.தானாக எந்த வேலையையும் செய்யாமல், மனிதனின் உத்தரவுகளை மட்டுமே இவை செயல்படுத்தும்.

3.ரோபோவுக்கு ரோபோக்களே பாதுகாப்பாக இல்லாமல், மனிதர்களால் மட்டுமே பாதுகாப்பு உறுதி செய்யப்படும்” என்பது கவனிக்கத்தக்கது..

0 comments:

Post a Comment