Wednesday 20 January 2016

'இந்த சம்பவம் ஒரு பாடம்'- 'பிச்சைக்காரன்' படக்குழு சார்பில் வருத்தம் தெரிவித்தார் விஜய் ஆண்டனி!

'பீப்' பாடல் சர்ச்சை அடங்குவதற்குள் அடுத்து மற்றொரு பாடலும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்த 'பிச்சைக்காரன்' திரைப்படத்தின் ப்ரமோ பாடல் (Promo Song) வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாழாப்போன உலகத்திலே காசு பணம் பெருசு எனத் தொடங்கும் அந்த பாடலில், 'கோட்டாவுல சீட்டு வாங்கி டாக்டர் ஆவுறான்'; 'தப்பு தப்பா ஊசி போட்டு சாகடிக்கிறான்' என்ற வரிகள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, இந்த வரிகள் இடஒதுக்கீடு முறையில் சீட் வாங்கி படித்த டாக்டர்களை இழிவுபடுத்துவதாக உள்ளதாக, சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் உட்பட பல்வேறு டாக்டர் சங்கங்கள் கண்டனம் தெரிவித்தன. மேலும், சர்ச்சைக்குரிய இந்தப் பாடல் வரிகளை நீக்கவும், விஜய் ஆண்டனி வருத்தம் தெரிவிக்க வேண்டும் எனவும் அறிக்கை வெளியிட்டன. இல்லாவிட்டால், பல்வேறு போராட்டங்களில் ஈடுபடப் போவதாகவும் அறிவித்தனர்.

சர்ச்சைக்குரிய இந்தப் பாடல் குறித்து இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனியிடம் பேசினோம். சமூக அவலங்களுக்கு எதிரான குற்றங்களை மையப்படுத்தி, சமூக விழிப்புணர்வுப் பாடலாக, இந்தப் பாடலை நாங்கள் வடிவமைத்தோம். பல்வேறு டாக்டர்கள் சங்கத்தினர் கூறும் 'கோட்டாவில் சீட்டு வாங்கிய டாக்டர்' என்ற வார்த்தை தவறாக அர்த்தம் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. 'பல்வேறு தனியார் கல்லூரிகளில் மேனேஜ்மெண்ட் சீட்'டில் பணம் கொடுத்து சீட் வாங்கி டாக்டர் ஆனவர்களைத் தான் நாங்கள் குறிப்பிட்டிருந்தோம். அதுவும் பணம் கொடுத்து சீட் வாங்கியவர்களில், தவறான டாக்டர்களைதான் குறிப்பிட்டிருக்கிறோம். இந்த கருத்தைத்தான் என்னுடைய 'சலீம்' படத்திலும் நான் கூறியிருந்தேன். நல்ல டாக்டர்களை உயர்வாக சித்தரித்துத்தான், 'சலீம்' படத்திலும் நான் நடித்தேன். நான் எப்படி டாக்டர்களை இழிவுபடுத்துவேன்? குறிப்பாக இந்தப் பாடலை எழுதிய லோகன், நானே அரசு இடஒதுக்கீடு முறையில் சீட் வாங்கித்தான் கல்லூரியில் படித்தேன். அப்படியிருக்கும்போது நான் எப்படி தவறான உள்அர்த்தத்தில் பாடலை எழுதியிருக்க முடியும். இந்தப் பாடலுக்கு அந்த வரிகள் முக்கியமாக இருக்கிறது. அதனால்தான் நான் இந்த வரிகளை வைத்தேன் என என்னிடம் சொன்னார். இந்தப் பாடலை எழுதிய லோகன் மீது எந்தத் தவறும் இல்லை. அவர் சொல்ல வந்த நல்ல கருத்து தவறுதலாகப் புரிந்து கொள்ளப்பட்டது. அதற்காக அவரும் என்னிடமும் வருத்தம் தெரிவித்து, சர்ச்சையான வரியினை மாற்றிவிட்டார்.


மேலும், இந்தப் பாடலிலேயே 'பாடையில போனாக்கூட லஞ்சம் கேட்கிறான்'; 'வேலைவெட்டி இல்லாம சாமியார் ஆகறான்' என்ற வரிகளும் இடம்பெற்றிருக்கு. இதுவும் இந்த வரிகளுடன் தொடர்புடைய நபர்களை மையப்படுத்தித்தான் சொல்லியிருக்கிறோமே தவிர, நேர்மையான யாரையும் மையப்படுத்தி இந்தப் பாடலை அமைக்கவில்லை. நான் ஒரே ஒரு உதாரணம் மட்டும் சொல்கிறேன். தற்போதைய சூழலில், 'அரசியல்வாதிகள்' எப்படி பார்க்கப்படுகிறார்கள் என்பது பலருக்கும் தெரியும். ஆனால், அந்த லிஸ்டில், காமராஜரை சேர்க்க முடியுமா? காமராஜர் உட்பட நேர்மையான அரசியல் தலைவர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள். நாம் குறிப்பிட்ட அரசியல்வாதிகளைத்தான் குற்றம் சாட்டுகிறோம். அதேபோலத்தான், நாங்களும் பணம் கொடுத்து சீட் வாங்கி, படித்த சில போலி டாக்டர்களைத்தான் குறிப்பிட்டிருந்தோம். அனைத்து டாக்டர்களையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை.

நாங்கள் நல்ல எண்ணத்தில் தான் இந்தப் பாடலையும், குறிப்பிட்ட அந்த பாடல் வரிகளையும் அமைத்தோம். ஆனால், குறிப்பிட்ட அந்த இரண்டு வரிகளும் இடஒதுக்கீட்டில் படித்த நேர்மையான டாக்டர்கள் வருத்தப்படும்படியாகவும், அவர்களின் மனம் புண்படும்படியாகவும் இருக்குமானால், அதற்கு எங்கள் 'பிச்சைக்காரன்' படக்குழுவினரின் சார்பிலும், என் சார்பிலும் வருத்தம் தெரிவிக்கிறேன்.

தற்போது 'கோட்டாவுல சீட்டு வாங்கி' என்ற வரியை மாற்றியமைத்து, 'காசுகொடுத்து சீட்டு வாங்கி டாக்டர் ஆகுறான்'; 'தப்பு தப்பா ஊசி போட்டு சாகடிக்கிறான்' என்ற வரிகள் இருக்கும் வகையில் அந்தப் பாடலை சிரமப்பட்டு மீண்டும் புதிதாக  ரெக்கார்டிங் செய்திருக்கிறோம். முழுமையாக இந்தப் பாடலின் வேலைகள் முடிந்து, இன்று மாலை அல்லது நாளை வெளியாகும். அதனால் இன்று மாலை எங்கள் 'பிச்சைக்காரன்' படக்குழுவினர் சார்பில் வருத்தம் தெரிவித்து, ஒரு அறிக்கையை நான் வெளியிட இருக்கிறேன். இனி வருங்காலங்களில் இது போன்ற தவறுகள் இடம்பெறா வண்ணம் இருக்க, இந்த சம்பவத்தை ஒரு பாடமாக எடுத்துக் கொள்கிறோம்" என்றார்.

இந்த பாடலைப் பாடிய பாடகர் வேல்முருகனிடம் பேசினோம். ''நாங்கள் ரெக்கார்டிங்கில் பாடும்போதும் இந்த வரிகளைப் பற்றி பலமுறை ஆலோசனை செய்தோம். ஆனால், இந்த வரிகள் இருந்தால்தான் பாடலுக்கும், பணம் கொடுத்து சீட் வாங்கி படித்து டாக்டராகும் சிலருக்கும் அழுத்தம் கொடுக்கும்படியும் இருக்கும் என்ற நோக்கத்தில் தான் அந்த வரிகளை இடம்பெறச் செய்தோம். வேறு எந்த தவறான உள் அர்த்தமும் இல்லை. நானும் நூற்றுக்கணக்கான சினிமா பாடல்களை பாடியிருக்கிறேன். இதுவரை இதுபோன்ற சிக்கல்கள் எந்த பாடலுக்கும் வரவில்லை. இந்த சம்பவத்தின் மூலமாக, பாடுவதற்காக பணம் கிடைக்கிறது என்பதற்காக, எந்த வரிகளும், கருத்துகளும் இடம்பெறும் பாடல்களையும் பாடக்கூடாது. நம் பாடல் சமூகத்தில் எந்த தவறான பிரதிபலனையும் ஏற்படுத்தி விடக்கூடாது என்பதை ஒவ்வொரு கலைஞனும் உணரவேண்டும் என்பதை எனக்கு உணர்த்தியுள்ளது. இனி புதிதாக ஒப்புக் கொண்டு பாடக்கூடிய ஒவ்வொரு பாடலின் தன்மையையும் புரிந்து கொண்டு பாடுவேன். இந்த பாடலால் நேர்மையான டாக்டர்கள் மனம் புண்பட்டிருந்தால், அதற்கு நானும் வருத்தம் தெரிவிக்கிறேன்" எனக் கூறினார்.

விஜய் ஆண்டனி தெரிவித்த கருத்தினை சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர்.ரவிந்திரநாத் மற்றும் அந்த சங்கத்தின் நிர்வாக உறுப்பினர் டாக்டர்.ரமேஷிடம் தெரிவித்தோம். 'பிச்சைக்காரன்' திரைப்பட குழுவின் சார்பில் விஜய் ஆண்டனி தெரிவித்த கருத்தை நாங்கள் வரவேற்கிறோம். 'கோட்டாவுல' என்ற வார்த்தையை 'காசுகொடுத்து' என மாற்றியதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். 'காசுகொடுத்து' சீட் வாங்கி டாக்டர்கள் ஆன போலி டாக்டர்களை குறிப்பிட்டிருப்பதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். விஜய் ஆண்டனியிடம் இருந்து வருத்தம் தெரிவிப்பது தொடர்பான அறிக்கை வந்தவுடன், எங்களுடைய போராட்டங்களை ரத்து செய்வது பற்றிய அறிவிப்பையும் நாங்கள் தெரிவிப்போம். இருப்பினும், எங்கள் சங்கத்தில் கலந்து ஆலோசித்து அந்த இரண்டு வரிகளுமே முழுமையாக நீக்க வேண்டுமா? என்பது குறித்து பேச உள்ளோம். இனி இதுபோன்ற தவறுகள் வராமல் இருக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய கருத்து. குறிப்பாக, மருத்துவத்துறை அரசு மற்றும் தனியாராலும் நிர்வாகம் செய்யப்படுகிறது. எனவே, மருத்துவத்துறையை முழுமையாக அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தால்தான் போலியான மருத்துவர்கள் குறைவார்கள். இதைத்தான் நாங்களும் வலியுறுத்தி வருகிறோம். ஏனெனில், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் தகுதி மதிப்பெண் குறைந்தவர்களும் மூன்று கோடி வரை டொனேஷன் கொடுத்தும், ஆண்டுக்கு பத்து லட்சம் கட்டணம் செலுத்தியும், இறுதியாக தேர்ச்சி பெற குறிப்பிட்ட பணம் கொடுத்தும் டாக்டர்கள் ஆகிறார்கள். அதனால், டாக்டர் ஆனவுடன் அவர்களின் முதல் நோக்கம் சேவை செய்வது இல்லை; பணம் சம்பாதிப்பதுதான் எனக் கூறினர்.

பீப் பாடல், இந்த 'பிச்சைக்காரன்' திரைப்படப் பாடல் போன்றவை இனி வருங்காலத்தில், மக்களையும், சமூகத்தையும் பாதிக்கக்கூடிய, புண்படுத்தக்கூடிய பாடல்களும், கருத்துக்களும், படங்களும் வராமல் இருக்க வேண்டும் என்பதற்கான பாடங்கள். கருத்துச் சுதந்திரம் என்பது எல்லாருக்கும் பொதுவான ஒன்றுதான். அதை யாரும் மறுக்க முடியாது. ஆனால், நம் கருத்துச் சுதந்திரம், மற்றவர் மனதை புண்படுத்தாமல் இருக்க வேண்டும் என்பதை உணர்ந்து வரும்காலங்களில் இதுபோன்ற தவறுகள் நடக்காமல் பார்த்துக் கொள்வது நம் 

0 comments:

Post a Comment