Friday 29 January 2016

நடிகர் ரஜினிகாந்த்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு! பள்ளிக்கூட நிலப் பிரச்னை

தி ஆஸ்ரம் மெட்ரிக்குலேசன் பள்ளி அமைந்துள்ள நிலம் தொடர்பான பிரச்னையில் கல்வி அதிகாரி முன்பு நேரில் ஆஜராக நடிகர் ரஜினிகாந்த்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை, கிண்டியில் நடிகர் ரஜினிகாந்த்துக்கு சொந்தமா 'தி ஆஸ்ரம் மெட்ரிக்குலேசன்' பள்ளி இயங்கி வரகிறது. இந்த பள்ளி நிலம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில், வெங்கடேசவரலு என்பவர் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.

இந்த வழக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 18-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது அதை விசாரித்த நீதிபதி, ''இது தொடர்பாக மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்குநரிடம் மனுதாரர் புகார் செய்யலாம். அவ்வாறு புகார் செய்யும் பட்சத்தில், மெட்ரிக்குலேசன் பள்ளி இயக்குநர் 8 வாரத்துக்குள் சட்டப்படி விசாரணை செய்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும்'' என உத்தரவிட்டார்.

இதையடுத்து, வெங்கடேசவரலு, மெட்ரிக்குலேசன் பள்ளி கல்வித்துறையில் புகார் செய்தார். இதையடுத்து, தி ஆஸ்ரம் மெட்ரிக்குலேசன் பள்ளி நிர்வகித்து வரும், ஸ்ரீ ராகவேந்திரா கல்விச் சங்க செயலாளர் லதா ரஜினிகாந்த், நிர்வாக அறங்காவலர் ரஜினிகாந்த், பள்ளி முதல்வர் ஆகியோர் ஜனவரி 25-ம் தேதி நேரில் ஆஜராகி எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்க வேண்டும்'' என கடந்த 12-ம் தேதி மெட்க்குலேசன் பள்ளி கல்வித்துறை உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து தி ஆஸ்ரம் பள்ளி முதல்வர் வந்தனா, உயர்நீதிமன்றம் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி எம்.எம்.சுந்ரேஷ் முன்பு நேற்று (28-ம் தேதி) விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நளினி சிதம்பரம், ''ஒரு பள்ளிக்கூடத்தின் நிலப்பிரச்னை தொடர்பான விசாரணைக்கு நேரில் வரும்படி மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இணை இயக்குநர் நோட்டீஸ் அனுப்ப அதிகாரம் கிடையாது'' என வாதிட்ர்.

அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அரசு பிளீடர் சஞ்சய்காந்தி, ''பள்ளி நிலப்பிரச்னை தொடர்பாக விசாரணை நடத்த இணை இயக்குநர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதன்படி, நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டியது பள்ளி நிர்வாகத்தின் கடமை. அதற்காக அந்த உத்தரவையே ரத்து செய்ய வேண்டும் என வழக்கு தொடர முடியாது. எனவே, இந்த மனுவை தள்ளுபடி செய்ய வணே;டும். தேவைப்பட்டால், ரஜினிகாந்த், லதா ரஜினிகாந்த், வந்தனா ஆகியோர் நேரில் ஆஜராக கால அவகாசம் கேட்கலாம்'' என வாதிட்டார்.

இதை ஏற்ற நீதிபதி சுந்தரேஷ், ''நேரில் ஆஜராக வேண்டும் என இணை இயக்குநர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய முடியாது. ரஜினிகாந்த், லதா ரஜினிகாந்த், வந்தனா ஆகியோர் 2 வாரத்துக்குள் இணை இயக்குநர் முன்பு ஆஜராகி, எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்க வேண்டும். அவ்வாறு விளக்கம் அளித்த பின்னர் 8 வாரத்துக்குள் சட்டப்படி தகுந்த உத்தரவை மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இணை இயக்குநர் பிறப்பிக்க வேண்டும்'' என உத்தரவிட்டார்.

0 comments:

Post a Comment