Friday 29 January 2016

மொபைல் ஃபோன் கம்பெனிகள் எக்ஸ்சேஞ் ஆஃபர் அளிப்பதன் ரகசியம் இதுதானா ?

மொபைல் ஃபோன் கம்பெனிகள் எக்ஸ்சேஞ் ஆஃபர் அளிப்பதன் ரகசியம் இதுதானா ?பழைய கைத்தொலைபேசிகளை விற்கவோ தானமாக கொடுக்கவோ வேண்டாம் ஒரு விழிப்புணர்வு பதிவு நண்பர்கள் கண்டிப்பாக படித்து உங்களுடைய குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கு தெரியபடுத்துங்கள்

நம்மில் பலர் புதிய கைத்தொலைபேசிகள் பாவனைக்கு வரும் போது அவை தொடர்பான கவர்ச்சிகரமான விளம்பரத்தில்
மயங்கி அல்லது அவற்றில் உள்ள புதிய தகவல்
தொழில் நுட்ப வசதிகளுக்காக அவற்றை வாங்கும் போது ஏற்கனவே வைத்திருந்த பழைய தொலை பேசிகளை விற்றுவிடுகிறோம் அல்லது நண்பர்கள் தெரிந்தவர்களுக்கு அன்பளிப்பாக கொடுத்துவிடுகிறோம்.

இவ்வாறு செய்யும் போது நாம் அவற்றிலுள்ள நமது
தரவுகளையும் விபரங்களையும் அழித்துவிட்டு கொடுப்பதாகவும் நினைத்துக்கொள்கிறோம். அனால் நாம் நினைப்பது போல அவை அவ்வளவு சுலபத்தில் அழிந்து விடுவதில்லை என்றும் தகவல் தொழில்நுட்பத் திருடர்கள் அவற்றை திரும்ப கண்டுபிடித்து நமது விபரங்ளை திருடிவிடும் ஆபத்து உள்ளதென்றும் தகவல் தொடர்பு மற்றும் இணைய குற்றங்களை கண்காணிக்கும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

நாம் பாவித்த எமது பழைய கைத் தொலைபேசிகளை விற்கும் போது எமது தரவுகளையும் சேர்த்தே விற்கிறோம் என்று அவர்கள் கூறுகின்றனர்.நண்பர்களுக்கு அன்பளிப்பாக அவற்றை கொடுப்பதற்கும் இது பொருந்தும்.

நாம் பாவித்த தொலைபேசிகளை நாமே உடைத்து அழித்துவிடுவதுதான் சிறந்த வழி என்றும் அவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

0 comments:

Post a Comment