Friday 29 January 2016

டி.ராஜேந்தர் நடிக்கவேண்டிய கதையில் ராஜகுமாரன் எப்படி? விஜய்மில்டன் விளக்கம்

விக்ரமை வைத்து பத்துஎண்றதுக்குள்ள படத்தை எடுத்த விஜய்மில்டன் அதற்கடுத்து சின்னபட்ஜெட்டில் ஒரு படத்தை எடுக்க முடிவுசெய்திருக்கிறார், அந்தப்படத்தில் டி.ராஜேந்தரை கதாநாயகனாக வைத்துப் படமெடுக்க முடிவு செய்திருந்தார். அது சம்பந்தமாகப் பல வாரங்களாகப் பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருந்தன.

இப்போது டி.ராஜேந்தர் அந்தப்படத்தில் இல்லையென்று முடிவாகிவிட்டதாம். அவர் கேட்கும் சம்பளம் இந்தப்படத்தின் பட்ஜெட்டுக்கு அதிகம் என்பதால் அவரை வைத்துப் படமெடுக்கமுடியாது என்கிற இடத்துக்கு வந்துவிட்டார் விஜய்மில்டன்.

அதற்கடுத்து இயக்குநர் ராஜகுமாரனை நடிக்கவைக்க முடிவு செய்து அவரிடம் பேசிக் கொண்டிருக்கிறார்களாம்.  ராஜேந்தருக்கான கதையில் ராஜகுமாரன் எப்படி? என்று விஜய்மில்டனிடம் கேட்டால், நம்மிடம் அடிப்படையான ஒரு கதை இருக்கிறது. நமக்கு அமையும் நடிகருக்கு ஏற்ப அதன் போக்கை மாற்றிக்கொள்ளவேண்டியதுதான் என்கிறார்.

ராஜகுமாரன்தான் நடிப்பார் என்பது நிச்சயம் கிடையாது அதிலும் மாற்றம் வராலம் என்று அவருக்கு நெருங்கிய வட்டாராங்களில் சொல்லப்படுகிறது. நடிகர் யாராக இருந்தாலும் படப்பிடிப்பு பிப்ரவரியில் தொடங்கிவிடும் என்பது மட்டும் உறுதி என்றும் சொல்கிறார்கள்.  

0 comments:

Post a Comment