Tuesday 26 January 2016

தமிழக வரலாற்றியலை பிரித்து மேய்ந்த ஜப்பானியர்: நொபுரு கராசிமா

யார் இந்த நொபுரு கராசிமா?

ஜப்பான் நாட்டில் பிறந்த இவர்,டோக்கியோ பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகப் பணி புரிந்து, தென் ஆசிய மற்றும் தென் கிழக்கு ஆசிய வரலாற்று ஆய்வுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். 1985ல் இந்தியாவின் கல்வெட்டு சமூகத்தின் தலைவராக இருந்தார். இந்தியா-ஜப்பான் கலாச்சார உறவுகள் மேம்பாட்டிற்காக 2013 ஆம் ஆண்டு பிரதமர் மன்மோகன் சிங்கிடம் "பத்ம ஸ்ரீ" விருது பெற்றார்.

கடந்த வருடம் நவம்பர் மாதம் இயற்கை எய்திய இவருடைய நினைவாக ஒருகருத்தரங்கமும், படத்  திறப்பு விழாவும் நிரல் பதிப்பகத்தின் சார்பில் 23 ஜனவரி அன்று நடந்தது.

முதலாவதாகப் பேசிய முனைவர்.சோ.சாந்தலிங்கம் (செயலாளர், பண்டைய நாட்டு வரலாற்று ஆய்வு மையம்),

" தமிழக வரலாற்றின் 8-18 நூற்றாண்டு வரையிலான ஆய்வுகள் நொபுரு கராசிமா நடத்தியதே. ஆங்கிலேயர்களின் ஆவணங்களைப் பயன்படுத்தி, தொல்லியல் சான்றுகளை வைத்து தம் ஆய்வுகளை அணுகினார். 23 வயதிலேயே சோழ வரலாற்று ஆய்வில் ஈடு பட்டு, அதனை 4 கட்டங்களாக பிரித்து ஆராய்ந்தார். தொல்லியல் துறையிலிருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு குடுபங்களில் அவ்வளவு மரியாதை இருக்காது, என்றவுடன் அரங்கமே சிரித்தது. கிடைக்கும் பணத்தை புத்தகங்களிலேயே முதலீடு செய்து விடுவார்கள்.


நமக்கு வரலாற்று உணர்வு குறைவு என்ற பேச்சு பொதுவாகவே உள்ளது. புகழ் பூத்த வரலாறுகள் மற்றுமே பேசாமல், குக்கிராமங்களின் வரலாற்றையும் கண்டறிந்தார்.


11 ஆம் நூற்றாண்டின் வேளாண் புரட்சி பற்றி அவர் தான் கூறியுள்ளார்.வளமான நிலங்களை இழந்த வேளாண் தான் புரட்சிக்கு வழிவகுத்து சித்திரமேனி பெரியநாடு தோன்றியது என்கிறார்.

அரசு அதிகாரிகளின் கொடுமைகளையும், பிரம்மதேயத்தையும் ஒடுக்கத்தான், சித்திரமேனி பெரிய நாடு வந்தது. அதில் 23 ஊர்கள் இருந்தன. மெய்க்கீர்த்தியை வைத்துக் கொண்டு கோவில்களைக் கைப் பற்றினர். கோவில்களில் எங்கள் தெய்வங்களுக்கும் இடம் வேண்டும் என்று கோரிக்கை வைத்து, 12 ஆம் நூற்றாண்டில் அம்மன்களுக்கும் இடம் வழங்கப் பட்டது. சித்திரமேனியில் வலங்கை இடங்கை சாதிகள் இருந்தும் அவர்கள் மோதிக் கொள்ளவில்லை. இத்தனைக்கும் இரு பக்கமும் உழைக்கும் வர்க்கம் இருந்தது." என்று அவர் முடித்தவுடன், அவருடைய படம் திறந்து வைக்கப் பட்டது.

அவரைத் தொடர்ந்து பேசிய பேராசிரியர்.வீ.செல்வகுமார் (கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறை, தஞ்சாவூர்),

 "தமிழக வரலாற்றினை புரிந்து கொள்ள, மற்ற மாநிலங்கள் பற்றியும், தென்கிழக்கு ஆசியா பற்றியும் நாம் அறிய வேண்டும். திருக்குறள், தொல்-காப்பியம் போன்றவை சமூகத்தை அறைந்து தான் எழுதப்பட்டவை. கராசிமா தமிழக வரலாற்றில் மார்க்ஸிய கருத்துக்களின் தாக்கம் ஏற்படச் செய்தவர்.வட்டார ஆய்வுகளில் வெளிநாட்டினர் நிறைய பேர் தமிழகத்தை ஆய்வு செய்தனர். சமூகச் சிக்கலில் சிக்காமல் இருப்பதால் அவர்களுக்கு அது சுலபம். பிரம்மதேயங்களை விட, வேளாண் வகை ஊர்களே அதிகம். எனவே அவை கட்டாயம் ஆராயப் பட வேண்டும் என்று கூறினார்.

இன்று நாம் ராஜராஜ சோழன் என்ன சாதி என உரிமை கொண்டாடுகிறோம். சார்பு இல்லாத ஆய்வுகள் மேற்கொள்ளப் பட வேண்டும். வரலாற்று ஆய்வுகள் என்பது வளர்ந்த நாடுகளுக்கான அடையாளம்.
பல அறிஞர்களை அழைத்து பல தரவுகளை நேரடியாக ஆய்வு செய்தார் கராசிமா. நாம் பல ஆய்வுகளை ஆங்கிலத்தில் தான் தருகிறோமே தவிர, தாய் மொழியில் தருவதில்லை. கோட்பாடு முறையிலும், புள்ளியல் முறையிலும் ஆய்வு செய்ய மாணவர்கள் ஈர்க்கப்பட வேண்டும். வரலாறு,சமூகவியல் படிப்பது பிரயோசனம் இல்லை என்கிறார்கள். அதைக் கற்று, அதில் செய்யும் ஆய்வுகள் தான் வளர்சிக்கு வித்திடும்"
என்று கூறி முடித்தார்.

அந்த ஜப்பானியருக்கு  வணக்கம். 

0 comments:

Post a Comment