Tuesday 26 January 2016

மாணவிகள் தற்கொலைக்கு கல்லூரி நிர்வாகம் மட்டும் காரணமல்ல... இவர்களும்தான்!

கள்ளக்குறிச்சி எஸ்.வி.எஸ். கல்லூரி மாணவிகள் தற்கொலை விவகாரத்தில் அந்த மாணவிகள் 15 அமைப்புகளிடம் முறையிட்டும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையிலேயே அந்த மாணவிகள் தற்கொலை முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த 2008ம் ஆண்டே எஸ்.வி.எஸ் மருத்துவக் கல்லூரிக்கு அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதாக எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம் தெரிவித்திருக்கும் நிலையில், அந்த கல்லூரி அங்கீகாரம் பெற்ற பட்டியலில் இடம் பெற்றிருப்பதும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

அத்துடன்  எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில், பி.என்.ஒய்.எஸ் பட்டப்படிப்பிற்கான அங்கீகாரம் வழங்கப்பட்ட கல்லூரிகளின் பட்டியலில் எஸ்.வி.எஸ் மருத்துவக் கல்லூரி இடம்பெற்றுள்ளது. இது போன்ற பல குழப்பமானத் தகவல் மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் அதிர்ச்சிக்கு காரணமாக இருக்கிறது.  அங்கீகாரம் ரத்து செய்யப்பபட்ட நிலையிலும் 7 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த கல்லூரி இயங்கி வந்திருக்கிறது.

தற்கொலைக்கு முன், தங்கள் பிரச்னைகள் குறித்து அந்த மாணவிகள் 15 அமைப்புகளிடம் முறையிட்டுள்ளனர். ஆனால் அவர்களது புகார் மனுக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது. இதையடுத்தே அந்த மாணவிகள் தற்கொலை முடிவுக்கு வந்திருப்பதாக கூறப்படுகிறது.

* தமிழக ரகசிய புலனாய்வு துறை- பதில் ஏதும் வரவில்லை.
* முதலமைச்சரின் தனி பிரிவு- இது வரை பதில் ஏதும் இல்லை.
* சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர்- பதில் ஏதும் வரவில்லை.
* விழுப்புரம் மாவட்ட ஆட்சியர்- சிசி/13/15407
* தமிழக மனித உரிமை ஆணையம்  வழக்கு எண்- 8805/2013
* தேசிய ஆதிதிராவிட ஆணையம்  சென்னை  எண் – 4/32/2013
* இந்திய மருத்துவம் - ஹோமியோபதி துறை – 12666/2/2013
* மக்கள் சுகாதார துறை  க.எண் . 40884/1-2/2013-1
* தமிழக ஆதிதிராவிட நல இயக்குனரகம்  4/34339/2013
* தமிழக சட்டப்பணிகள் துறை  3003//2014
* விழுப்புரம் மாவட்ட ஆட்சியர்- சிசி/13/15407
* இந்திய மருத்துவம் - ஹோமியோபதி துறை – 12666/2/2013
* சுங்க வரி துறை  சி.எண்.11/39/123/2013
* தமிழக ஆளுநர்  அலுவலகம் எண்.4910/2/2013
* தமிழ்நாடு டாக்டர் மருத்துவ பல்கலைக்கழகம் பல புகார் மனுக்கள்
* தமிழக ஊழல் தடுப்பு பிரிவு  எண்.1341/2014/
* விழுப்புரம் ஆதிதிராவிடர் அலுவலகம்  4/2281/2014 - பதில் ஏதும் இல்லை.

இப்போது மாணவிகள் தற்கொலைக்கு அந்த கல்லூரியின் நிர்வாகிகளை மட்டும் குறை கூறி என்ன பயன்? இத்தனை அமைப்புகளுக்கு ஆதாரங்களுடன் மாணவிகள் புகார் அனுப்பியும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது ஏன்?

இதற்கெல்லாம் யார் பதில் அளிக்கப் போகிறார்கள்?

0 comments:

Post a Comment