Tuesday 26 January 2016

மன்னிப்பு கேட்ட மாகாபா ஆனந்த் ?

லேடி ஆண்டாள் பள்ளியில் உயரம் குறைந்த பெண்களுக்கான ஃபேஷன் ஷோ நடந்தது. பெடைட் பிரின்ஸஸ் என்னும் இந்த நிகழ்ச்சி தொடங்கும் நேரத்தில்,எவ்வித முன்னறிவிப்புமின்றி தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிபரப்பப்பட்டதாம்.

அதனால் பலரும் எழுந்து நிற்கவில்லையாம். இதனால், அந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய மாகாபா ஆனந்த் மற்றும் உடனிருந்த தொகுப்பாளினியும் சர்ச்சைக்கு ஆளானார்கள்.

மாகாபா ஆனந்திடம் இதுகுறித்து பேசுகையில், தவறுதான் மன்னிக்கணும், ஆனாலும் ஒரு விஷயம் நான் சொல்லணும், அந்த நிகழ்ச்சிக்கு வந்த விஜே பொண்ணு ஆந்திராப் பொண்ணு. இது நம்ம தமிழ்த் தாய் வாழ்த்துன்னு அந்தப் பொண்ணுக்கு தெரியவே தெரியாது.

எந்த அறிவிப்பும் இல்லாம திடீர்னு ப்ளே பண்ணிட்டாங்க. இன்னொனு அந்தப் பொண்ணு முதல் தடவையா மேடை ஏறியிருக்காங்க.

பயம், நடுங்குறாங்க வேற. அதனாலயே அவங்க எழுந்து நிக்கல, நான் எழுந்து நிக்கிறேனா இல்லியானு யாருக்குமே தெரியாதே.   நான் மேடைக்கு அந்தப் பக்கம் இருந்தேன். என்ன எப்படி, யார் பாக்க முடியும். அப்படியே பார்த்தாலும் புரமோ ப்ளே ஆகும், அது முடிஞ்சோன உங்க எண்ட்ரினு சொல்லிட்டாங்க அதுக்கு ரெடியாவே நான் ஸ்டேண்டிங்ல தான நிக்கறேன்.

அப்பறம் எப்படி நான் மதிக்கலன்னு சொல்ல முடியும். அந்தப் பொண்ணுக்கு ஏன் மன்னிப்பு கேக்கணும்னு கூட  தெரியல, அதான் அவங்க சார்பா நான் மன்னிப்பு கேட்டேன். தமிழ்நாட்டைச் சேர்ந்த நான் எப்படிங்க தமிழ்த் தாய் வாழ்த்த மதிக்காம இருப்பேன் எனக் கேட்டார்.

மேலும் நம்மூர்ல மலையாளம், தெலுங்கு, வடநாட்டுக்காரங்க எல்லாரும் இருக்காங்க. அவங்களுக்கு தமிழ்த் தாய்வாழ்த்து தெரியுமா?ன்னு  யோசிக்கணும், இல்ல எதுவுமே சொல்லாம எல்லாரும் எழுந்து நில்லுங்கன்னு அறிவிப்புக் குடுத்தாலே பிரச்னை இல்லை என தனது கருத்தையும் பதிவு செய்தார் மாகாபா ஆனந்த்.

0 comments:

Post a Comment