Tuesday 26 January 2016

“ரொம்ப பெருமையா இருக்கு!” – பத்ம விபூஷன் ரஜினி

நம் நாட்டின் குடியரசு தினத்தையொட்டி முன்பாக இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள் அறிவிக்கப்படுவது வழக்கம் ..இங்குள்ள அரசியல், சமூகம், நிர்வாகம், கலை, கலாச்சாரம், இசை, நடனம், சினிமா, நாடகம், ஓவியம், சிற்பம், சட்டம், விளையாட்டு, நீதி, பொது சேவை ஆகிய துறைகளில் சிறந்து விளங்குவோர் பத்ம விருது களுக்கு தேர்வு செய்யப்படுவார்கள். அதன் படி இன்று விருது பெற்றவர்களின் பெயர்கள் அறிவிக்கபட்டு உள்ளது. நடிகர் ரஜினிகாந்த், வாழும் கலை ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், ஊடக அதிபர் ராமோஜிராவ், ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் ஜக்மோகன், திருபாய் அம்பானி ஆகி யோருக்கு பத்மவிபூஷண் விருது வழங்கப்படும் என அறிவிக்கப் பட்டுள்ளது. மேலும் அனுபம் கெர், உதித் நாராயணன், சாய்னா நேவால், சானியா மிர்சா, முன்னாள் சிஏஜி வினோத் ராய், நடிகர் அஜய்தேவ் கான், நடிகை பிரியங்கா சோப்ரா ஆகியோருக்கு பத்ம பூஷண் விருது வழங்கப்படுகிறது.

இப்போதைய தமிழ் நடிகர்களில் நடிகர் ரஜினிகாந்த் மட்டுமே இந்தியாவின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷண் விருதைப் பெறப்போகிறார்.திரையுலகில் ஏராளமான விருதுகளை பெற்றுள்ள ரஜினிகாந்த் கடந்த 2000–ம் ஆண்டு பத்ம பூஷண் விருது பெற்றார். அடுத்த 5 ஆண்டுகளில் அவருக்கு பத்ம விபூஷண் விருது தேடி வந்திருப்பது தனி சிறப்பாக கருதப்படுகிறது.இந்த விருது பெறுவது குறித்து ரஜினிகாந்த் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “பத்ம விபூஷண் விருது பெறுவதற்காக மிகுந்த பெருமிதமாக உணர்கிறேன்.என் நேசத்துக்குரிய ரசிகர்கள், நலம் விரும்பிகள் மற்றும் நண்பர் கள் அனைவரின் வாழ்த்துகளுக்கும் என் மனபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.

இம்முறை 10 பேருக்கு பத்ம விபூஷண், 19 பேருக்கு பத்ம பூஷண் மற்றும் 83 பேருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 19 பேர் பெண்கள்; 10 பேர் வெளி நாட்டுப் பிரிவில் இடம்பெறுபவர் கள். 4 பேருக்கு இறப்புக்குப் பிந்தைய கவுரமாக வழங்கப்படுகிறது.விஞ்ஞானி மயில்சாமி அண்ணா துரை, ஆன்மிக பிரபலம் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், விளையாட்டு வீராங்கனைகள் சானியா மிர்சா, சாய்னா நேவால் மற்றும் தீபிகா குமாரி, நடிகர்கள் அனுபம் கேர், அஜய் தேவ்கன், பிரியாங்கா சோப்ரா உட்பட மொத்தம் 112 பேர் 2016-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளைப் பெறுகின்றனர்.

0 comments:

Post a Comment